பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம்) திருப்புகழ் உரை 7 யமனுடைய உயிரைக் கவர்ந்த நெருப்பு ஒத்த இணையடி யையும் (கங்கை) ஆற்றினைக் கொண்ட சடையினையுங் கொண்ட சிவனுக்குக் குருநாதனே! நீர் சூழ்ந்த (அல்லது தாமரை போலத் தண்ணுக்கு இனிய) குரும்ல்ை (சுவாமிமலை)யிற் பொருந்தி வீற்றிருக்கும் பெரும்ாள்ே சொல்லப்படுகின்ற வேதங்கள் புகழ்கின்ற பெருமாளே! (அபயமிடு குரல் அறியாயோ) 197 அழகிய மலைபோன்ற கொங்கைகளை யுடையவர், காம இச்சை எழுப்புவதில் மன்மதனைப் போன்றவர் (ஆடவர். களுடைய) மனத்தை உருக்குபவர், அல்லது (காமனை ஒத்த (அழகு நிறைந்த ஆடவர்களின் சித்தத்தை உருக்குபவர்): கொவ்வைக்கனி ப்ோன்ற வாயிதழைத் தினந்தோறும் விற்பவர்,* மயில், காடையென்னும் பறவை, குயில், அழகிய புறா, கோழி முதலிய காட்டுப் பறவை. களின் வகை வகையான குரல்களைக் கற்றுப் பகைமையைக் காட்டும் (அல்லது போரிடுங் குறியைக் காட்டும்) அழகிய விழிமுனையைச் செலுத்தி (உள்ளத்தை) மயக்குபவர்கள், தந்திரத்துடன் நறும் புகைமணங் கொண்ட மலர்ப் படுக்கையில் மெத்தையில் படுப்பவர், யாரையும் (ஏத்தி), வஞ்சனை செய்து (தமது) வீட்டுக்குள் அழைப்பவர். சோலையிலுள்ள அழகிய கிளி போன்ற பேச்சினை உடையவர், நன்னெறி பொருந்தாத வகையில், יד היה “எட்டுக் குரலில் ஒரு குரல் கூவும் புறாவே' “எட்டுப் பறவை குமுறுங் கமுகிலே பத்தெட்டுப் பாம்பேதடி சிங்கி! குட்டத்து நாட்டாரும் காயங் குளத்தாரும் இட்ட சவடியடா சிங்கா' குற்றாலக்குறவஞ்சி 93.115)