பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 443 அருமை வாய்ந்த புகழைத் கொண்டுள்ள பெருமையை உடைய பழநி ம்லையில் அழகு மயிலை நடத்தும் பெருமாளே! (உனது பதத்தை அருள்வாயே) 189 மணம் நிறைந்த கூந்தல் அவிழ்ந்து விழ, கொங்கை புளகங் கொள்ள, நிலவொளியைப் ப்ற்கள் வீச, காம உணர்ச்சி உண்டாக, காம இச்சை - வளர்ந்து பெருக, தன்வசம் அழிய, அசைந்து நிலைபெயரும் கைவளையல்கள் கலகல என்று ஒலிக்க முகமாகிய திங்கள் (நிலவு) சிறு வெயர்வுத் துளிகளை வீசிஅருமையான இனிய சொற்கள் (வாயினின்றும்) குலை குலைந்து வர் இதழ் அமுதத்தை உண்டு மிகவும் உள்ளம் க்ளி கொள்ள, ரு கயல் மீன் போலுங் கண்கள் காதளவும் பாய - அத்துஇழ் (ஆரவாரம் படும்) படுக்கை மலரணையின் மேல் (நான்) துயில்கொன்டாலும், விரிந்த தாமரை மலரை ஒத்த (உனது) திருவடியை மறவேன். அசுர (சூர) னோடு வந்த குதிரைகளும், கொல்லுந் தன்மையை உடைய யான்ைகளும், தேர் வரிசைகளும், நெறு நெறென்று அழியும்ப்டி செய்த கூரிய வேலாயுதனே! அமைந்துள்ள அருவமாகியும் உருவமாகியும் உள்ள குரு ராஜனே! குருபர்னே! கும்ரனே! நீண்ட பெரிய வானத்து உச்சியில் உறைபவனே! வருகின்ற அருவிகளில் அடித் நவமணிகளும் மலர்களும் கமுக மரத்தின்மேற் சிதறத் தேன் ஒழுக்கம் பெருகும் வள்ளிமல்ை மேல் வாழும் குறவர் மகள் வள்ளியின் இரண்டு பூரிக்கும் காங்கைகளையும் (அல்லது பெரிதாய் வளர்ந்துள்ள கொங்கைகளையும்) இரண்டு புயங்களையும் அணைந்து மகிழ்கின்ற பெருமாளே! பழநியில் எழுந்தருளியுள்ள் பெருமாளே! o (மலரடியை மறவேனே)