பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 423 (உனது) சிறிய திருக்கரமாம் தாமரையினின்றும் திருநீறு ஒரு தினையளவு (பாண்டியன்மேற்) போய்ப் பட்டவுடனே (அந்தச் சுரம் நீங்க அரசன்), தெளிவு, உற, பின்பு வ்ெற்றியை இழந்த அந்த அறிவிலிகள் கழுவில் ஏற (இப்) பூமியில் அவதரித்த அத்தனே! பெண்களது குறியையே, கணக்கின்றிச் சேர்ந்து, நாள்தோறும் (உனது) பேரருளின் திறங்கள்ை உணராது விலகி நிற்கும் மூடன்ாகிய என்னை, ஆணவமலத்தின் உருவாகவே (நின்று) - நாளுக்கு நாள் மனம் கலங்கும் பாவியாகிய என்னை வழியடிமையாக ஆட்கொண்டு, சிறந்த மகாதவசிகள் வாழும் பழநியில் வந்து அமர்ந்துள்ள வீரவேலவனே! பெருமாளே! ነ (உனை மொழியும் செஞ்சொல் வர்க்கமே வர அருள்வாயே!) 182 நெற்றியிலே வெயர்வுத் துளிகள் துளிக்க, இரண்டு குத்து முலைக் குடங்களையும் அசைத்து வீதியில் நிற்பவர், மை பரந்துள்ள கண்களையுடைய மயில் போன்றவர் (அல்லது கலாபம் என்னும் இடையணியைக் கொண்டவர்கள்) தங்கள் பேச்சுகளால் - நாள்தோறும் மயக்குபவர், நறுமணமுள்ள அழகிய மலர்கள் விரிக்கிப்பட்ட மெத்தையிற் சேர்ப்பித்து ப்ல வகையிலே உடலில் திமிர் ஏறும்படியான தொழில்களைக் காட்டிக் கொடுத்தும் நெருங்கியும் உறவாடி(அவர்களுக்கு) உள்ள வழக்கப்படி (தம்மிடம் வந்தவர் களுட்ைய) பொருள் முழுமையும் மிகுந்த நட்பினைக் காட்டிப் பறித்து நாள்தோறும் (புதிது புதிதாகத்) தோன்றுகின்ற வித்தைகளைச் (சாமர்த்தியச் செயல்களை) உபயோகப்படுத்தும் (பொது) மகளிருடைய சம்பந்தம் ஆமோ (ஆகாது என்றபடி). பார்க்க கந்தரந்தாதி செய்யுள் 56 பார்க்க அருணகிரிநாதர் வரலாறும் நூலாராய்ச்சியும் என்ற நூலில் பக்கம் 154 பார்க்க.)