பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 முருகவேள் திருமுறை (3- திருமுறை 181. செஞ்சொற் பெற தனதனன தந்த தத்த தாணன தனதனன தந்த தத்த தானன தனதனன தநத ததத தானன தனதான 'நிகமமெனி லொன்று மற்று நாடொறு நெருடுகவி கொண்டு வித்தை பேசிய நிழலர்சிறு புன்சொல் கற்று வீறுள பெயர்கூறா. நெளியமுது தண்டு சத்ர சாமர 'நிபிடமிட வந்து கைக்கு மோதிர நெடுகியதி குண்ட லப்ர தாபமு முடையோராய், "முகமுமொரு சம்பு மிக்க நூல்களு "முதுமொழியும் வந்தி ருக்கு மோவெனில் முடிவிலவை யொன்று மற்று வேறொரு நிறமாகி. முறியுமவர் தங்கள் வித்தை தானிது முடியவுணை நின்று பத்தி யால்மிக மொழியும்வளர் செஞ்சொல் வர்க்க மேவர அருள்வாயே 'திகுதிகென மண்ட விட்ட தீயொரு செழியனுடல் சென்று பற்றி தாருகர் திகையினமண் வந்து விட்ட போதினு மமையாது. 1. நிகமம் - வேதம். \ 2. தண்டு - சிவிகை. 3. நிபிட மிட - நெருங்க.

  • முகமும் வேறொரு நிறமாகி எனக் கூட்டுக

5. சம்பு - செய்யுளும் வசனமும் விரவிவரும் பிரபந்தவகை உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள் நூல்கள். 6 முதுமொழி சான்றோர் செய்யுட்கள். வேதம், திருக்குறள், பழமொழி. 7. சம்பந்தப் பெருமானது மடத்திற் சமணர்கள் இட்ட தீ, அவர்திருவாக்கின்படி பாண்டியனைச் சுரமாய் வந்து பிடிக்க, சமணர்கள் அச்சுரப் பிணியைத் தீர்க்க மாட்டாது திகைக்கச் சம்பந்தப் பெருமான் மந்திரமாவது நீறு" என்னும் திருப்பதிகத்தைப் பாடி பாண்டியனது உடலில் திருநீற்றைப் பூசச் சுரம் நீங்கிப் பாண்டியன் சுகம் உற்றான். பின்னர், சமணர் சம்பந்தரொடு செய்த வாதில் சமணர்கள் தீயிலிட்ட ஏடு சாம்பராக சம்பந்தர் போக மார்த்த பூண் முலையாள்" எனத் தொடங்கும் திருநள்ளாற்றுப் பதிக ஏட்டைத் தியில் இட அந்த ஏடு வேவாது பச்சையாய்த் தீயில் விளங்கிற் று. அதன்பின்