பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி1 திருப் புகழ் உரை 407 எல்லாரும் கொள்ளுங்கள் என்று கூறி விலைக்கு விற்கும் மாதர்களின் வஞ்சகச் செயல்களில் மருட்சியுற்றுத் துவட்சி (வாடுதல்) அடைந் து அந்த ஆசையால் (உடல்) நைந்து, படுக்கையில் - (மோக) மயக்கத்தை அதிகமாகக் கொள்ளும் இன்பக்கடலில் முழுகும் (எனது) வஞ்சக மனத்தைத் தொலைக்கவல்ல (உனது) திருவடியாகிய புகலை (நான் பெறுதற்கு) எம்பிரானே! நீ அருள்பாலிக்க மாட்டாயா? தனத னந்தன தந்தனா என்றும், டி.குகு டிங்குகு டிங்கு என்றும் பேரிகை வாத்தியமானது தகுதி திந்திகு திந்ததோ என்றும் ஒலிக்க, பெருகி எழும் தாளமானது - பேரொலியுடன் சஞ்சலி சஞ்சல எனச் சப்திக்க முழவு முரசு) வாத்தியம் டுண்டுடு டுண்டுடு என ஆரவாரிக்க சிறிய கிண்கிணியானது கிண் GTGRIT ஒலிக்கும் கிண்ணாரம் (சிறிய யாழ்) போல முற்பட்டொலிக்க H பாம்பைத் தனது பாதத்திற் பூண்டதாய்ப், பெருமை பொருந்திய எட்டுத் திக்கிலுமுள்ள யானைகள் எல்லாமும், அண்ட உருண்டையும், அதிர்ச்சிகொண்டு கலங்கி நிற்கும்படி, எதிர்நின்று தோ தக என்று மயிலானது - மண்டலமாய்க் கூத்தாட நெருங்கிவந்த அசுரனது (சூரனது) கூட்டத்தைக் கொன்ற வேலவனே! பழநியங்கிரியில் வீற்றிருக்கும் தம்பிரானே! (அருள் தந்திடாயோ)