பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி1 திருப்புகழ் உரை 365 சீகாழி என்னும் தலத்துக்கு அழகும் பெருமையும் பெருகவும், சரண் அடைந்த மதுரை மன்னன் (கூன் பாண்டியனது) சுரம் துணியவும், விளங்கும் திருநீற்றைக் கொண்டு புல்லாகிய பாய்களை உடுத்திருந்த சமணர்கள் கழுவில் ஏறவும் வாதம் செய்து, வெற்றிபெற்ற சமர்த்தனே! வஞ்சனை எண்ணம் கொன்ட குதிரை முகம் கொண்ட பென்(பூதத்தின்) வசத்தே அகப்பட்ட புலவராம் நக்கீரருக்கு உதவி புரிந்த வேளே! பகைமை பூண்ட பெரிய ஊர்களாதிய திரிபுரங்கள் பொடி யாகப் புன்னகை பூத்துச் சுட்டெரித்த சிவபிரானது - ஏழுலகங்களையும் உண்ட திருமாலின் மைத்துனருமான சிவபிரானது குழந்தையே! வென்று, (எழுந்த) இடர்கள் நீங்கும்படி (அறம், பொருள் இன்பம் என்னும்) முப்பர்ல் கூறும் திருக்குறளினும் ம்ேலாகிய தேவாரத்தை ("வாழ்க அந்தனர்" என்னும் திருப்பர்சுர்த்தை) (ஏட்டில்) எழுதி, (வைகையாற்று வெள்ள) நீரில் எதிரேறவிட்ட பெருமாளே! (பழநிதனிற்போய்....நற்றாள் பற்றுவதொருநாளே.) 157 அதலம், விதலம்_முதலான அந்தக் (கீழ்) உலகங்கள் எனவும், (இப்) பூமி எனவும், தேவர் அண்டங்களான "(மேல்) உலகங்க்ள் எனவும், சகல கடல்கள் எனவும், எட்டுத் திசைகளிலுள்ள ம்லைகள் எனவும், அக்கினி, சூரியன், அமுதம் போலக் குளிர்ந்த கிரணங்களைக் கொண்ட சந்திரன், எனும் முச்சுடர்கள் எனவும், ஒன்றோடொன்று சந்தித்து ஒற்றுமைப்பட மந்திரங்கள் எனவும், சேடித்துச் சொல்லப்படும் மறை (வேதம் எனவும், அரிய tத்த்துவங்கள் (உண்மைப் பொருள்கள்) எனவும், ஆணுவுக்குள் அணு எனவும், (இவ்வகையாய் எங்கும்) நின்ற் பெர்ருளாய் நின்றுள்ள ஒரு பேருண்மை - ’பூலோகம், புவ லோகம் சுவ லோகம், சன லோகம், தபோ லோகம், மகா லோகம் சத்திய லோகம் - இவைமேலேழ் உலகங்கள். t தத்துவங்கள்.96. (1) மூலப் பொருள்கள் 36 - அசுத்த தத்துவம் 24, சுத்தா சுத்த தத்துவம் 7, சுத்த தத்துவம் 5.