பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 முருகவேள் திருமுறை 13- திருமுறை பவளப்பொற் கிரிதுத் திப்பொற் ன்கொச்சைக் கிளிசொற் பற்றிப் பரிவுற்றுக் கமலப் புட்பத் திதழ்பற்றிப் புணர்சித் ரப்பொற் படிகத்துப் பவளப் பச்சைப் பதமுத்துப் பழநிச் சொக்கப் பெருமாளே (55) 155. ஞானம் பெற தத்தத்தத் தத்தத் தத்தன தத்தத்தத் தத்தத் தத்தன தத்தத்தத் தத்தத் தத்தன தனதான முத்துக்குச் சிட்டுக் குப்பிமு டித்துச் சுக் கைப்பிற் சுற்றியு முற்பக்கத் திற்பொற் புற்றிட நுதல்மீதே. முக்யப்பச் சைப்பொட் டிட்டணி ரத்நச்சுட் டிப்பொற் பட்டிவை முச்சட்டைச் சித்ரக் கட்டழ கெழிலாடத்; தித்திக்கச்சொற்சொற்றுப்பிதழ் நச்சுக்கட் 'கற்புச் சொக்கியர் செப்புக்கொக் கக்கச் சுப்பெறு தனமேருத் திட்டத்தைப் பற்றிப் பற்பல லச்சைக்குட் பட்டுத் தொட்டுயிர் சிக்கிச்சொக் கிக்கெட் டிப்படி யுழல்வேனோ, °மெத்தத்துக் கத்தைத் தித்தியி னிச்சித்தத் திற்பத் தத்தொடு மெச்சிச்சொர்க் கத்திற் சிற்பர மருள்வாயே. 1. சுக்கை - பூமாலை. 2. கற்பு - கற்பனை. 3. மெத்ஆை துக்கத்தை தித்தி யினி சித்தத்தில் பத்தத்தொடு என்று பிரித்துக் கொள்க.