பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி) திருப்புகழ் உரை 301 127 தக்க தனி நிலையில் அவள் மீது பகைமை பூண்டு தன் கையில் உள்ள வில்லை நன்றாக வளைக்கும் மன்மதனாலும் - முத்தின் குவைகள் புரள்கின்றதும், நஞ்சின் பிறப்புக்கு இடமானதும், ஒலிப்பதும், இருள் நிறத்ததுமான கடலாலும் - நட்சத்திரங்கள் முத்துக்கள் நிறைந்தது போல நிரம்பித் தோன்ற, பகற்பொழுது போய், ஒளிமங்கி, மிஞ்சி நிற்கும் (இரவுப்) பொழுதாலும் - உரையற்றும், உணர்வு அற்றும், உயிர் இளைத்து நிற்கும் கொடி போன்ற (என்) மகளுக்கு உனது நல்ல மாலையைத் தந்தருள வேணும். திசை பத்துங் கலங்கும்படி அல்லது திசை பத்தையும் (பார்க்க வல்ல) முகங்களைக் கொண்ட பிரமனை முன்பு சிறையிட்ட பகைமைத் திறத்தைக் கொண்ட வீரனே! விளங்கும் கற்பக மரங்கள் நிறைந்த சோலையுள்ள பொன்னுலகத்து இலக்குமி (தேவசேனை) மீது (மனம்) உருகிக் குழைந்தணைத்த மார்பனே! ஞாயி றுபோல ஒளி கொண்ட பாரச் சடையினனாம் பரமனுக்கு ஒப்பற்ற உபதேசச் சொல்லைச் சொன்னவனே! வாயு மண்டலம் வரையும் நிறைந்து (புகழால்) உயர்ந்த மெய்ம்மை விளங்கும் பழநிக் குமரப் பெருமாளே! (உன் நற் பிணையல் தரவேணும்)