பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 முருகவேள் திருமுறை 13. திருமுறை o "v/ மேலை யமரர்தொழு மானை முகரரனை யோடி வலம்வருமுன் மோது திரைமகர வேலை யுலகைவல மாக வருதுரக மயில்வீரா. வீறு 'கலிசைவருசேவகனதிதய மேவு முதல்வவயல் வாவி புடைமருவு வீரை வருபழநி ஞான மலையில்வளர் பெருமாளே.2) 120. அன்பு பெற தானதன தந்த தானதன தந்த தானதன தந்த தானதன தந்த தானதன தந்த தானதன தந்த தனதான சீயுதிர மெங்கு மேய்புழுநி ரம்பு மாயமல பிண்ட நோயிடுகு ரம்பை தீநரிகள் சீகங்கு காகமிவை தின்ப தொழியாதே. தீதுளகு ணங்க ளேபெருகு தொந்த மாயையில்வ ளர்ந்த தோல்தசையெ லும்பு சேரிடுந ரம்பு தானிவைபொ திந்து நிலைகானா, ஆயது.ந மன்கை போகவுயி ரந்த நாழிகையில் விஞ்ச ஊசிடுமி டும்பை யாகியவு டம்பு பேணிநிலை யென்று மடவார்பால். ஆசையைவி ரும்பி யேவிரக சிங்கி தானுமிக வந்து மேவிடம யங்கு மாழ்துயர்வி முந்து மாளுமெனை யன்பு புரிவாயே மாயைவல கஞ்ச னால்விடவெ குண்டு பார்முழுது மன்ைட கோள முந டுங்க வாய்பிளிறி நின்று மேகநிகர் தன்கை யதனாலே. 1. கலிசைவரு சேவகன் என்பதும் காவேரி சேவகன் என்று பின்வரும் செய்யுட்களில் வருவனவும் கலிசை யென்னும் பதியில் அக்காலத்து அதிபனா யிருந்த ஓ ரன்பன். 2. கங்கு - கழுகு.