பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 முருகவேள் திருமுறை (விநாயகர் 'இக்கவரை நற்கணிகள் சர்க்கரைய ருப்புடனெய் எட்பொரிய வற்றுவரை இளநீர் வேண். டெச்சில்பய றப்ப வகை பச்சரிசி பிட்டுவெள ரிப்பழமிடிப்பல்வகை தனிமூலம், மிக்க அடி சிற்கடலை பட்சனமெ னக்கொளொரு விக்கிநசமர்த்தனெனும் அருளாழி!வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்

  • வித்தகம ருப்பு டைய பெருமாளே! (3)

4. திருவடி பெற விடமடைசு வேலை அமரர்படை சூலம் விசையன் விடு பாண மெனவேதான். விழியுமதி பார விதமுமுடை மாதர் வினையின்விளை வேதும் அறியாதே; கடியுலவு பாயல் பகலிரவெ னாது கலவிதனில் மூழ்கி வறிதாய. கயவனறி வீனன் இவனுமுயர் நீடு கழலிணைகள் சேர அருள்வாயே! 1. இக்கு - அவரை இக்கு - கரும்பு. 2. வண்டு எச்சில் - தேன். (பா - வே.) * வடை'; f விக்கினர் தமக்கிளைய முருகோனே' 4 வித்தக மதிக்கரிய பெருமாளே."