பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழநி, திருப்புகழ் உரை 245 விளையாட்டுக் கோலமும், குணம் இழிவான துன்பச் செயலாளர்களின் ஒழுக்கமும் பலகூடி வெந்து எழுகின்ற தோரமான 'கும் பாகம் என்னும் நரக்த்தில்ே விழுவதற்கே நின்னவு கொண்டு - இந்தக் கூடாகிய உடலைச் சுமந்து கொண்டு திரிகின்ற என்மீ激 அன்புவைத்து, ஞான நெஞ்சங் கொண்ட (பெரியோர்க்ளுட்ன்) சேரும்படியான் நுண்ணறிவை (எனக்குத் தந்து (என்னை) ஆளவந்து அருள்புரிவாயாக; மேயிற் பீலியும் வெந்து, உயர்ந்துள்ள குண்டிகை நீரும் வெந்து கொதித்து, அசோகத் தளிர்களும் வெந்து (ஆந்த அவமானத்தால்) அமணர்கள் ஊமர்களாய் நெஞ்சில்ே பயம் கெர்ள்ளுமாறு வாது செய்து திருவருட் ப்ெருக்கால் (பாசுரம்) எழுதின ஏடு - யாவரும் விரும்பும்படி அங்கு எதிர் ஏறி (வைகை) ஆற்றிற் செல்லவும், பாண்டியனும் நோய் தீர்ந்து குண்ம் பெறவும், (சமன). வஞ்சகர்கள் (உடலைக்) கிழிக்கின்ற கெர்டிய கழுமரத்தில் ஏறவும் வெற்றிகொண்ட முருகனே! நஞ்சை உண்டவரும், முச்சுடர்களையும் அழகிய முக்கண்களிற் கொண்டவருமான் சிவபிரானது பர்கத்திற் பொருந்திய குமரி, பரர்காச வடிவி முதலும் ஈறுமாய் ற்கும் சங்கரியின் குமரனாம் ஈசனே! வேதங்கள் (போற்றிப்)பயில்கின் ЛГGIAT கவே! சேவற்கொடி ಶ್ದಿ? நீத்தே திருஆஃ குடியில் வாழ்வு கொண்டருளும் பெருமாளே ! (ஞான நெஞ்சினர் பாலிணங்கிட அருள் புரிவாயே) 1. கும்பி - கும்பிபாகம். இது ஏழு நரகங்களுள் ஒன்று; பாபம் செய்தவர்களைக் குயவனது சூளையிற் சுடுவதுபோல வாட்டுகின்ற நரகம் 2. பாண்டியனுக்கு உற்ற சுரத்தின் வெப்பத்தால் அவன் அருகில் இருந்த சமணர்களின் மயிற்பீலி, குண்டிகை நீர், அசோகந்தளிர் யாவும் வெந்துபோயின என்பர். "பிண்டியும் தண்டும் பாயும் பீலியுங் குடையும் வெந்து . கையிற் குண்டிகை நீரும் நின்று கொதித்திடக் கண்டார் குண்டர்" திருவாலவாயுடையார் புராணம்.37-63. "ஆலி வெந்து, பீலி வெந்து பாயும் வெந்து பிண்டியேற மண்டவே" - தக்கயாகப் பரணி, 176. 3 3. பக்கம் 247 பார்க்க.