பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 முருகவேள் திருமுறை (3- திருமுறை கோல முங்குண வீன துன்பர்கள் 'வார்மை யும்பல வாகி வெந்தெழு கோர கும்பியி லேவி ழுந்திட நினைவாகிக் கூடு கொண்டுழல் வேனை யன்பொடு ஞான நெஞ்சினர் பாலி ணங்கிடு கூர்மை தந்தினி யான வந்தருள் புரிவாயே, பீலி வெந்துய சீராலி வெந்தவ சோகு வெந்தமண் முகர் நெஞ்சிடை பீதி கொண்டிட வாது கொண்டரு ளெழுதேடு பேணி யங்கெதி ராறு சென்றிட மாற னும்பிணி தீர வஞ்சகர் பீறு வெங்கழு வேற வென்றிடு முருகோனே, ஆல முண்டவர் சோதி யங்கணர் பாக மொன்றிய வாலை யந்தரி ஆதி யந்தமு மான சங்கரி குமரேசா. ஆர ணம்பயில் ஞான புங்கவ சேவ லங்கொடி யான பைங்கர ஆவினன்குடி வாழ்வு கொண்டருள் பெருமாளே. (4) 1. வார்மை -ஒழுக்கம். 2. ஆலி. குண்டிகை நீர்.