பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழகி திருப்புகழ் உரை 235 100 "நாதம் விந்து எனப்படும் கலைகளுக்கு மூலப் பொருளே! உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன்; வேதங்கள், மந்திரங்கள் இவைகளின் வடிவாய் விளங்குபவனே! உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன்; ஞானபண்டித சாமியே உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன்; பலகோடிக் கணக்கான திருநாமங்களை உடைய சிவபிரானின் மைந்தனே! உன்னை வணங்குகின்றேன்,வணங்குகின்றேன்; (உயிர்களுக்குப்) போகத்தை ஊட்டும் பராகாச வடிவியாம் ே பார்வதியின் பாலனே! உன்னை வணங்குகின்றேன், வணங்குகின்றேன்-பாம்பைக் காலில் அடக்கிக் கட்டியுள்ள ம்யில் வாகனனே! உன்னை வணங்குகின் றேன், வணங்குகின்றேன்-அன்னியராம் சூராதிகளைச்சேதித்து (அழித்துத் தண்டித்த திருவிளையாடலைப் ரிந்தவனே! உன்னை வணங்குகின்றேன், வணங்கு ఫ్గ இசையொலி காட்டும் கிண்கிணியை அணிந்த திருப் பாதங்களை உடையவனே! உன்னை வணங்கு. கின்றேன், வணங்குகின்றேன்; ஆண்மை நிறைந்த வீரனே! உன்னை வண்ங்குகின்றேன், வணங்குகின்றேன்; மலைகளுக்கு வேந்தனே! o "நாதம் :லிங்கம், விந்து பீடம் நதவிந்துகலாதி என்பது இறைவன் பஞ்ச மூர்த்தியாய்ப் பஞ்ச கிருத்தியத் தலைவராய்த் திகழ்வதைக் குறிக்கின்றது. 'விந்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம் விந்துவதே பீடம், நாதம் இலிங்கமாம், அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய் வந்த கருவைந்துஞ் செய்யும் மவையைந்தே" - திருமந்திரம் 1757 t"ஈறிலா ஞானப் பேராயிரம் பேரினான்" - சம்பந்தர் III-26-5. 'எண்ணாயிரங்கோடி பேரார் போலும். அப்பர் VI-21-8. # போகமே அரும்போகஞ் செய்யும் அருளே"அபிராமி அந்தாதி 36.