பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 227 பூதலமே (தாங்க முடியாது) குலுங்க, தேவர்கள் வாழும் விண்ணுலகம் வரையும் அளாவி எழுந்த செம்பொன் மண்டபங்களுடன் கூடிய வீடு: பூங்கொத்துகள் கூடிய கூந்தல் தழைந்து, குங்குமம் விளங்கும் கொங்கையையுடைய வஞ்சிக்கொடி (போன்ற மனையாளுமே) (நமக்கு ஆதரவு (பற்றுக்கோடு) என்றிருந்த (அறிவு) மங்குகின்ற சமயத்தில் (இறக்கும்போது) கோங்கு அடம்பு என்னும் கொடிப்பூ மணம் மிக்க பசிய கடம்பு, தண்டை, கொஞ்சுவதுபோல ஒலிக்கின்ற செவ்விய சதங்கை இவைகள் தங்கும் தாமரை மலர் போன்ற (உன்) திருவடிகளைத் தந்தருளுவாயாக; சந்தனமரம், அடர்த்தியாய்த் தோன்றி அரும்புவிடும் மந்தாரம், செழிப்புள்ள கரும்பு, கிழங்கோடு கூடிய வாழை (இவைகள்) வான் இடத்தை அளாவும் திருச்செந் தூரில் வாழ் பவனே! குளிர்ந்த காட்டைக் கடந்துபோய்ப், பலவிதப் பண்இசைகள் தங்கி நெருங்கியன போன்ற இனிய சொற்களை உடைய (வள்ளியம்மை யிருந்த) திண்ணிய (தினைப்) புனத்திற் சென்று (அந்த அம்மையாரைக்) கண்டு வணங்கிய தலைவனே!