பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 223 பேர்த்து எடுக்கப்பட்ட மலைகளினாலே நொ றுக்கி, அங்கம் (உடம்பு), கம்(தலை), கரம் (கை) மார்பு இவைகளுடன் ஒளிவிடும் உடற் பொருத்தங்களையும் சிதற அடித்து அரக்கர்களுடைய இனம் முழுமையும்; யமனுடைய தெற்குத் திசையை நாடி விழவும், அங்குப் போயும், எமது தர்கள் தள்ளு, தள்ளு, தள்ளு என்று கூறும்படியாக, மாமிசம், கொழுப்பு, மூளை (இவைகளை) - உண்டும், பார்த்தும், சிலபேய்கள் டிண்டிண்டென்று குதித்துக் கூத்தாடவும், சிறந்த அம்புகளைக் கொண்டு வென்ற திருமாலின் மருகனே! (பெருமானே!) அடைக்கலம், அடைக்கலம், சி றியேனுடைய அளிவு, அற்பம், அற்பம், துரையே! அருள்பாலித்து எப்ப்ோதும் இன்பம் தருகின்ற (மோகூ!) வீட்டைத் தருவாய்! சங்கமும், தாமரையும், மீன்களும் உள்ள குளங்கள் பல இடங்களிலும் பொலிய, மகா பரிசுத்தம் துலங்கும் (திருச்) செந்துாரில் வாழ்ந்து ஓங்கும் பெருமாளே! (என்று இன்பந்தரு வீடது தருவாய்) 95 வஞ்சகத்தையும் அதனுடன் ஒப்பற்ற நெஞ்சிற் பலவித எண்ணங்களையும் (கொண்ட) வஞ்சிக் கொடி போன்ற இடையை உடைய மாதர்களும் - வணங்கும் புதல்வர்களும், நெருங்கிய சுற்றத்தாரும் ஒன்று கூடிக் கதறுகின்ற செய்கை மிகுதியாக, (உடலின்) அம்சங்கள் (தத்துவப் பகுதிகள்) கலைந்து பிரிபட்டுப் போகின்ற பஞ்சு போன்ற புழுவுடல் நெருப்புக்கு இரை யென உடனே செல்லும்படி - நெருங்கிப் பயப்படும்படி வெற்றி பொருந்திய யமன் வரும் அந்த நாளில் (உனது) திருவடியிணையைத் தரவேணும்: