பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 213 (புன்) சிரிப்பால் மன்மதனுடைய உருவத்தை எரித்து அழித்த சிவபெருமான் அருளிய பிள்ளை என விள்ங்கி, யார்க்கும் நன்மையே அருள் செய்து (திருச் ) செந்துர்க்குள் உறைபவனே! ஒன்பது சிறந்த மணிகளால் ஆகிய மாலை (சிறந்த நவரத்ன மாலை) விளங்கித் தோன்றும் கொங்கையை உடைய மாது (ஆகிய) யானை மகளின் (தேவ சேனையின்) சேர்க்கையை நழுவ விடாமல் (அந்தத் தேவியிடம்) அன்பு காட்டும் முருகனே! அகங்காரங் கொண்ட அசுரன் (சூரன்) சண்டைக்கு வர சண்டை செய்யும் எண்ணம் உதிக்கு முன்னே, அஞ்ச வேண்டாம் என அபயம் தந்து , (தம்மிடம்) முறையிட்டு வந்தவனும் - அயிராவதம் (வெள்ளை யானையின்) முதுகின்மேல் விளங்குபவனும், அடைக்கலம் நாங்கள் எனக் கூறி இனிமையுடனும் அன்புடனும் போற்றினவனுமான அமரேசனை (தேவேந்திரனை) முழுமையுங் காத்த (பூரணமாகக் காத்த) பெருமாளே! (மாதர்கள் மயலின் சேற்றில் உழல்வேனோ!) 91 கொங்கையின்மேல் பூசப்பட்ட கலவைச் சந்தனமும், விளங்கும் பற்களும், வந்த (கொவ்வைக்கனி, விழிக்கனி) போன்றவாயும் - மணம் அவிழ்ந்து உதிர்ந்த மலர்கள் சரிந்துள்ள மேகம் போன்ற கூந்தலும், இன்பமும் நஞ்சும் (ஒருங்கே) கொண்ட கண் என்கின்ற வேலும், வில் போன்ற (நெற்றியிற்) கூடிய ப்ொட்டும், குளிர்ந்த, அழகிய முகத்தில் நிரம்பி வெளிப்பட்ட சிறு வியர்வையும் - தெஃ. வந்து நின்ற மாதர்களின் பின்னே சுழன்று (என்) செயல் அழிந்து அலைந்து திரிவேனோ? மலை(க்குகை) யிடத்தே அடைக்கப்பட்டிருந்த புலவர் (நக்கீரரது) செவ்விய பாடலை (திருமுருகாற்றுப் படைய்ை)ச் (செவி) கொண்டு (கேட்டு மகிழ்ந்து), அந்தக் குகையின் வழியைத் திறந்துவிட்ட செங்கை வடிவேலனே!