பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 211 தலைகள் பேய்ப்பந்து (எறிபந்து) போல எறியப்பட்டுருள, வீரமுள்ளதாய், வானினும் தோயவல்லதாய், வீறு அமைந்த தாய் உள்ள வலி அம்பை அழகிய தேர்மீது இருந்து செலுத்திய திருமாலின் மருகனே! 山 பால், காய்ச்சின வெல்லம், சர்க்கரை, மூங்கிலிலேயிருந்து முற்றிய நறுந்தேன் - இவைகளை ஒத்துள்ளவரும் உரைக்கு எட்டாதவருமான சிவபிரானும் பார்வதியும் ஈன்றருளிய புதல்வனே! திண்ணிய (இப்) பூமியில் உன் (திருவடித் தியான) அறிவு முழுமையாக வாய்க்கப்பெற்று மேம்பட்டவர்களைக் கொண்டு ஒதப்படும் (போற்றப்படும், பூசிக்கப்படும்) விசேடங் கொண்டவனே! வண்டுகள் (மலரில் மொய்ப்பது) போலத் திருச்செந்தூரில் (அடியார் கூட்டங்களை) நெருங்க வைத்தருளும் பெருமாளே! (சம்போக மட்டிகள் உறவாமோ) 90 மேகம்போன்ற கூந்தலைக் காட்டி, பிறைபோலச் சிறந்த நெற்றி. யைக் காட்டி, (முல்லை) அரும்பு போன்ற பற்களைக் காட்டி அமுதம் ஊறுகின்றமொழியாகிய இனிமையைக் காட்டி, கண்ணாகிய அம்பைக் காட்டி, முகமாகிய தாமரையைக் காட்டி மலைபோல; ஒழுங்குள்ள இளமுலையைக் காட்டி, இடை என்கின்ற (வஞ்சிக்) கொடியைக் காட்டி, வளப்பம் பொருந்திய கை வளையல்களைக் காட்டி, இன்பம் தருவதான - அழகு வாய்ந்த (அல்லது மணிமேகலை பூண்ட) அல்குலைக் காட்டி, மிகவே (தங்கள்) தொழிலை அதிகமாகக் காட்டும் அழகிய மாதர்களின் மயக்கச் சேற்றில் அலைவேனோ?