பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 209 தேன் ஒழுகும் கடப்ப மலர் மாலை அணிந்த கீரிடத்தை முடி மீது கொண்டவனே! சங்கரர் தந்தருளிய தேவநாயகனே! திருச்செந்துாரில் மகிழ்ந்து வீற்றிருந்தருளும் பெருமாளே! (கடம்பிகள் உறவாமோ?) 89 மான்போலக் கண் பார்வை பெற்றுள்ள முகத்தால் முக அழகால், (முத ஜாடையால்) பண்பு (தரம்) வாய்ந்த ண் மக்கள் கிட்ைக்கப்பெற்றால், தங்கமலை, (தங்கச்) ಘೆ என்னும் படியான கொங்கைகளை உடைய மாதர்கள் - (அம்மக்களை வசீகரித்துப்) பிடித்துத் திண்டாட்டம் தரக் கூடியதும், விசித்திரம் நீங்காத்தும், ஒரு குறி (ஒரு நோக்கம்) கொண்டுள்ளதும், முக்கியமானதும், வாஞ்சை (ஆசை) எழுப்புவதும் ஆன, (செவ்விய) இனிப்ப்ான ரசம் நிரம் பிய உண்மை கலந்தது போன்ற பேச்சுக்களாலே, என்னிடத்தில் பங்கு ஆக (என் பக்கமாக என்று அழைத்துச் சென்று) நன்ம்ை (இன்பம்) தரும், பூவின் தாளின் வாசனை (காம்போடு கூடிய மலரின் மணம்) அல்லது - (அழகிய காற்று வீசும் நறுமணம்) நிறைந்த மெத்தைப் படுக்கையிற் சோர்ந்தவுடன், பொன்னாலாகிய அழகிய காசு முதலில் நீ கொடுகொடுத்தவர்க்குத்தானே இன்பக் கூட்டுறவு (கிடைக்கும்) என்று பசும்பாலும், தேனும் (கலந்தது) போலச் சொல்லிக் கிட்ட நெருங்காத போக மங்கையர் - ஆகும், அந்த மட்டிகளுடைய உறவு இருக்கலாமா (இருத்தல் ஆகாது - என்றபடி). காட்டிடையே, சந்தனம் பூசப்பட்ட அழகிய மலைபோன்ற (கொங்கைகளையும்), மூங்கி ஸ் போன்ற பசிய தோள்களையும் Զ-GՆՈԼ-ԱԱ (சீதையின்) கண்கடை (கடைக்கன்ை) காட்சி பெற விரும்பித் துரக்கங்கொள்ளாது ஆசைகொண்டிருந்த அரக்கர் தலைவன் (இராவணனுடைய)