பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 முருகவேள் திருமுறை 12 திருமுறை மலநீர்ச் சயன மிசையாப் பெருகி மடிவேற் குரிய நெறியாக மறைபோற் றரிய வொளியாய்ப் பரவு மலர்தாட் கமல மருள்வாயே: கொலைகாட் டவுணர் கெடமாச் சலதி குளமாய்ச் சுவற முதுசூதம் குறிபோய்ப் பிளவு படமேற் கதுவு கொதிவேற் படையை விடுவோனே. அலைவாய்க் கரையின் மகிழ்சீர்க் குமர அழியாப் புநித வடிவாகும் அரனார்க் கதித பொருள் காட் டதிய அடியார்க் கெளிய பெருமாளே. (63) 79. யமன் வரும்போது மயில்மேற் காட்சி பெற பஞ்ச பாதக முறுபிறை யெயிறெரி குஞ்சி கூர்விட மதர்விழி பிலவத பங்க வாண்முக முடுகிய நெடுகிய திரிசூலம் பந்த பாசமு மருவிய கரதன் மிஞ்சி நீடிய கருமுகி லுருவொடு பண்பி லாதொரு பகடது முதுகினில் யமராஜன், 1. நெறி முத்தி.