பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 163 68 இன்பர் நவதும் (அல்ல காவலாய் அமைந்துள்ளதும்) ந தருவது து து அது அழகுள்ளதுமான (உனது) பாத தாமரையைச் சேர்வதற்கு (உண்டான) வ ழியைச் சொல் லுகி ன்ற எண்ணில்லாத வேதங்களைக் கடந்த (நிலையின் மீதும்), மாறுபாடு - பகை - என்பதே அறியாத (உயர்ந்த்) நிலையின்மீதும், நற்குண சில நன்னெறியின் மீதும் மிக்க அன்பைக் கொள்ளாமல், காமத்தாலும், குரோதத்தாலும் (கோபத்தாலும்), ஈதற்குணமே இல்லாமையாலும், ஐம்பூதங்களின் சேஷ்டையாலும் (கலக்கத்தாலும்) அழிகின்ற மாயமான - (இந்த உடலின் மீதும், (இந்த ஜீவாத்மா இச்சைப்படும் உலகப் பற்றுக்களின் மீதும்) சிலர் ஆசைகொண்டு இருக்கின்ற அந்நிலை ஏன்தர்னோ! தெரிவில்லையே! கடலும், சூரனும், மேருவும் தூளாகும்படி நெடிய விஷமுள்ள பாம்பைக் காலிற் கொண்டநீலக் கழுத்தையும் தோகையையும்கொண்ட தேராதிய (வாகனமாகிய) மயிலைச் செலுத்திய கடம்பணிந்த வீரனே! திருச்செந்துாரில் வாழ்பவனே ! வேள்வித் தீயைத் தவறின்றி வளர்ப்பவர்க்கு இருப்பிடத்தைச் சிவலோகத்திலே தருகின்ற தேவி (பார்வதி குமரனே): யோகவழிகளை உபதேசித்த குருமூர்த்தியே (சகல கலா வல்ல்வனாகிய உன் முன்னே வாயிலிகளாகிய) ஊமைகளாம் (எல்லாத்) தேவர்களுக்கும் தம்பிரானே (தலைவனே) 1. (பசு பாசத்தே சிலர் காமுறுதல் என்கொலோ)