பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 153 நல்லபடியே பொருள் முழுதும் வரும்படி வெற்றியுடன் விலை பேசித் (தம்மை) நம்பும்படி செய்கின்ற மாதர்களுடன் விளையாடி - பாம்பு உண்ணும் தேரை (என்னும்படி) உடல் அத் தன்மையதாகி நைந்து போகின்ற என்னை அருட்(கண்) பார்த்தருளுக - s. குண்டுமணி போலச் சிவந்த கண்ணையும் கோடுகளையும் உடைய பாம்பு படத்தை வீசும்படி (தனது) அழகிய கூரிய வாயில் - (அப் பாம்பைக்) கொண்ட மயிலில் ஏறி அன்று அசுரர் சேனைகளைக் கொன்ற குமரேசனே! குருநாதனே! மணங் கமழும் கமுகு, தெங்கு (இவை) நெருங்கு சோலைகளும், வண்டுகள் ஒலிக்கும் குளங்களும் பக்கங்களிற் சூழ - குரங்குகள் நடனம் செய்யும் செந்துார் நகரில் வீற்றிருக்கும் வீரனே! தேவேந்திரர்களுக்குப் பெருமாளே! (நைந்து விடுவேனை அருள்பாராய்.) 63 மலைக் குகைகளில் இருக்கும் உண்மைத் துறவிகள்போல, மறவா (மனத்துடன்) கும்பிட்டு (மாதர்களின்) கொப்பூழ்க் குளத்தில் முழுகி(அவர்களது) குமுத மலர் போன்ற வாயிற் பெ ■ அமுதத்தைப் பருகி, மேகம் போன்ற கொண்டையிட்ட கூந்தலாருடைய, அகிற்பொடி, கற்பூரம் அணிந்துள்ள கொங்கைகளாகிய இரு மலைகளில் அன்பு பூண்டு இன்பக் கடலிடையே. அமிழுகின்ற என்னைப் பக்குவமாக ஒப்பற்ற (முத்திக்) கரையிற் சேர்த்து (உனது) அழகிய் பொன்னாலாய தண்டை சூழ்ந்த கழல்களைத் தந்தருளுக.,