பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 149 பிரிவுக்குக் காரணம் ஏற்பட்டால் அதற்குத் தக்கபடி தக்கபடி நடந்து கொள்பவர், நடை (அழகினொடும்) உடை அழகினொடும் திரிபவர், மிக்க பொருள் கிடைத்தால் படுக்கையில் இன்பத்துடனும் உருக்கத்துடனும் பிணத்தையும் அணைபவர், கலக்கத்தைத் தரும் நீரை (கள்ளை) உண்டு தம் வசம் இழுக்கும் மாதர்கள், அந்தக் (கள்) நாற்றத்தோடும் அணைபவர் (அல்லது விரைந்து நெருங்கி அணைபவர்), அகந்தை உடையவர், (இத்தகையோரது) உறவைவிட்டு நீங்கும் படி அருள் புரி. a u TШТФ, மலைக்குகையில் இருக்கின்ற புலி பெற்ற குட்டி குடிப்பதற்குப் பசுக்கூட்டங்களின் முலைப்பால் அமுதை உண்ணவும், பசுவின் (பெண்) கன்று ஆண் கன்றுடன் புலி முலைப்பாலை உண்ணவும் மலை அப்படியே உருகவும், நீண்ட காட்டில் உள்ள மரங்கள் தளிர்விடவும், மயல் கொண்ட மதங்கொண்ட ஆண் யானைகள் பெண் யானையோடு (ஒரு புறம்) செல்ல, ஆகாயத்தில் உயரத்தில் உள்ள பறவைகள் நிலத்தில் வந்து சேரவும், (தன்) விரல்கள் தடவுகின்ற ஏழு தொளைகள் விட்டுள்ள மூங்கில் (புல்லாங் குழலில்) (தனது) விரலை முறைப்படி தடவினதால் (எழுகின்ற) இசைகளால் பல பல நாதங்களை எழுப்பும் கரியமேகம் போன்றவன் (கண்ணபிரான்), வேதப் பொருளோன், நெடியவன், மனம் மகிழும் மருகனே! துணை நிற்பவனே! குணவானே! சரவணபவனே! வணங்கத்தக்கவனே! முருகனே! ருபரனே! (புகழ் வளரும்) அறுமுகனே! குகனே! கரையில் அலை வீசுகின்ற திருநகரமாம் (திருச்செந்துாரில்) உறையும் பெருமாளே! (புனலுனும் அவசவனிதையர் உறவினைவிட அருள்புரிவாயே!)