பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 123 அன்று வந்து ஒருநாள் நீர் போனிரே (அதன்) பின்பு (உம்மை) நாம் கண்டறியோம்! இது (உண்மையே) அன்று முதல் இன்றுவரை (ஒருநாள் கூட) பொழுது போகவில்லை; து.ாக்கமும் வரவில்லை; o எங்கள் உள்ளத்தை (உள்ளத்து எண்ணத்தை) வேறு யார் அறிவார்! (நீர்) முன்பு கொடுத்தது போதாதோ மேலே இன்று_ (வேறு) தந்தால்தான் உறவோ? இது என்னத்து. க்கு (பொருள் தந்தது) (மாத்திரம்) போதாது; அல்லது, போதாதா?) இங்கு (நான் நிற்கும் வீடு) என் வீடுதான்; (உள்ளே) வாரும்" என்று மனம் பொருந்தப் பேசும் (பொது மகளிருடைய) மான்ய லீலைகளாம் இன்ப விஷ (வலையில்) வீணாக விழா வண்ணம் அருள் புரிவாயாக மேகங்கள் ఖ్విళి உலவும் வானாகவும், வானின் நின்று அன்று வெளிப்பட்ட காற்றாகவும், பெருங் காற்றுடன் கூடி, நெருங்கி வரும் பகைகளை நீராக்கும் வன்மை கொண்டுள்ள எரி நெருப்பாகவும், வந்து ஒலித்து எழுகின்ற நீராகவும், நீர் சூழ்ந்த (கடல் என்னும்) ஆடையைப் புனைந்த பூமியர்க்வும், ஏழு பாரும், ஏழு மண்டலங்களும் புகழ்கின்ற நீயாகவும், நான்ாகவும் (தாமரை) மலரில் உற்ையும் பிரமனாகவும். உங்கள் (தந்தையாம்) சங்கர ராகவும், அச்சந்தரும் அண்ட கூட்டங்களாகவும் மூலப்பகுதியாகவும் (தோய்ந்துழ்)) எதனிலும் இறுதியில் தோயர் திருக்கின்ற மாயனாம் திரு மாலின் மருக்ன்ே! தெளிநீர்க் குளங்களும் பொழில்களும் நீடிய ஊரும், fமலை நில ஊரும் ஆன் திருச்செந்திற் பதியில் வாழ்பவனே! (உன்னை நின்ைந்து) வாழ்பவர்கள் அநுபவித்த நெஞ்சம் அறியும் தேனே! தேவர்கள் பெருமாளே! (மாயா லீலா - சிங்கியில் - விழா தருள்வாயே.)

  • ஏழு பார் - பூலோகம், புவலோகம், சுவர்க்கலோகம், மகலோகம் , தவலோகம், சனலோகம், சத்தியலோகம்.

ஏழு மண்டலம் - வாயு மண்டலம், வருண மண்டலம், சந்திர மண்டலம், சூரிய மண்டலம், நட்சத்திர மண்டலம், அக்கினி மண்டலம், திரிசங்கு மண்டலம். t திருச்செந்துாரில் மலை நிலம் உண்டு . செந்தின்மா மலை யுறும் செங்கல்வ ராயா" . கந்தர் சட்டிக் கவசம்.