பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 119 44. விதிபோல முற்பட்டு (வேலை செய்யும்) அந்தக் கண்களாலும், பிறைச்சந்திரன் போன்ற நெற்றியாலும், ஈடுபட்ட இளையோர்களுடைய - விரிந்த சிந்தையில் உருவெளித் தோற்றமாய் நின்று நோவும் ப்டி செய்து, அவ்விளையோரது வன்மையும் மனமும் வேறுபடச் (செய்யும்) செயல்களாலே; அன்பு பூண்டு இன்பத் தேனை நிரம்ப உண்டு இனிது ஆளும் என்று சொல்லுகின்ற மாதர்களால் வரும் - இருளான துன்பமும், மருட்சி தரும் மாயையும் வந்து என் நெஞ்சைப் பிளவு செய்தல் எக்காலத்தும் த்ொலையாதோ! so பிறையைச் சூடினவரும், தேவர்கள் ஊர் வாழும்படி நெருங்கி வந்த நஞ்சை உண்டு, விடையை வாகனமாகக் கொண்ட வரும், மறவாத சிந்தை கொண்ட அடியார்கள் பங்கில் வருகின்ற தேவருமான சம்பு (சிவபிரான்) பெற்ற பாலனே ! அதிக விதமான மாயைகளைச் செய்து (எதிர்த்து) வந்த சூரர் அழியக் கூரியவேல் கொண்டு அன்று பொருத வீரனே ! அழகிய செம்பொன் மயில்மேல் அமர்ந்து (கடற்கரைத் தலமான) திருச்செந்துாரில் மகிழ்ந்து (வீற்றிருக்கும்) பெருமாளே! (மாயை எனைஈர்வது என்றும் ஒழியாதோ )