பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 1.13 41 மொழிகளுக்குள்ளே முற்பட்டதாய் விளங்கும் தமிழ்மொழிப் பாம்ாலைகளைக் கோடிக் கோடிக் கணக்காக சந்தப் பா வகையில் (அல்லது-அழகான வகையில்) நீண்டனவாய்ப் பாடிப் பாடி, அழிவுறும் மக்கள் தம் மனை வாசல் (எங்குளது என்று) தேடித்தேடி (நான்) திரியாமல் பழவினை என்பதே என்னைத் தொடராது (ஓடிப்) போகவும், பெண்ணாசை என்ப துாரத்தே (ஒடிப்) போகவும், (அடிமைத் திறத்தில்) முந்தவேண்டும் (என்னும் ஆசை கொண்ட) அடிமையாகிய் என்னை ஆண்டருளும் பொருட்டு (நீ என்) முன்னிலையில்: திந் தி திமி தோதி.......செஞ்செணகு சேகு' என வரும் தாளத்துக்கு ஒக்க நடம் செய்யும். செவ்விய சிறிய கால்களையும், அகன்ற தோகையையும், துாயதாய், நன்மை புரிவதாய் உள்ள பார்வையையும், தீரத்தையும், செம்பெர்ன் நிறத்தையும் உடைய மயில்மீது எப்போது; வருவாய்! அழகிய அருள் பாலிக்கும்.வேத வேள்விக்குக் காவல் புரியும் பெரும்ானே! செந்தமிழ்ச் சொற்களால் தொடுக்கப்பட்ட பாம்ாலைகளை அணிந்துகொள்பவனே! தேவர்களுக்கு உபகாரியே! சேவற்கொடியோனே! முடிமேலே - (கை) கூப்பித் தொழும் அடியார்களிடம் ; அன்பு பூண்டுள்ளவனே! (கிரெளஞ்ச) மலை ஊடுருவும்புடி! ஏவின் வேற் கரத்தோனே! அழகு மிகப் பொலியும் (திரு) வுருவம் கொண்டவனே; அழகுள்ள -. L யானை மாது (தேவசேனை) விரும்பும் போகம் வாய்ந்தவனே! அழகிய குறமாது (வள்ளியுடன்) பொழுதுபோக்கும் ம்ெய்க்காவற்காரனே! செஞ்சொற்களால் போற்றும் அடியார்கள் மீது 'அன்பு கொண்டவனே எதிர்த்து வரும - 1. வாரம் - அன்பு.