பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தார்) திருப்புகழ் உரை 109 மதங்கொண்ட மலை (யானை) போல விளங்கி, விரிவுள்ளதாய் முத்துமாலை மேவினதாய், அழகுமிக்க வஜ்ரமுடிக்கு ஒப்பானதாய், சிமிழ் போன்ற கொங்கையின் து - வைத்துள்ள கொடிய மயக்கத்தை விட்டு, கூடிய பக்தியைச் செய்யும்படி ஏழை அடிமையாகிய (என்) பொருட்டு, வஜ்ர மயில் மீதில் இனி எப்போது (நீ) வருவாய்; அழகிய கூரிய வேலேந்திய பன்னிரு கையனே; பக்தி செய்வோர்களுடைய நூலில் விளங்குபவனே! திசைதோறும் செலுத்தப்படுகின்ற குதிரையாம் (மயில்) வாகனனே! குறமாது (வள்ளி) - உள்ளன்போடு புணரும் இன்பங் கொண்டவனே! பொல்லாத அசுரர் தலைவரோடு போர் புரிபவனே! நல்லவரைக் காத்தளிக்கும் திருவிளையாட்ல்களைக் கொண்டவனே! அடியார்கள் - முத்தி பெறும்படி உபதேசிக்கும் திருவார்த்தைகளை உடையவனே! கிளிக்கு ஒப்பான தூய மாதாம் தேவ சேனைக்கு நாயகனே! மூவுலகத்தினரும் பரவிப் போற்றும் திருவடிகளை உட்ையவனே! இனிதான - முத்தமிழை ஆய்ந்த மேம்பாட்டைக் கொண்டவனே! கரிய மேகங்கள் தாவிச் செல்லும் மதில்களைக் கொண்ட (திருக்கோயிலை) உடையவ்னே! முத்துக்கள் உலவுகின்ற கடல் சூழ்ந்த நகராம் (திருச்செந்துாரிற்) பெருமாளே!) மும்மூர்த்திகளுக்கும் பெருமாளே! (வஜ்ர மயில் மீதிலினி எப்போது வருவாயே) 40 சந்தனம், சவ்வாது (ஜவ்வாது), நிறைந்த (பச்சைக்) கற்பூரம் செஞ்சாந்து, சந்தனம், மணமுள்ள கஸ்துாரி, குளிர்ச்சியுள்ள புனுகு சட்டம் இவை சேர்ந்துள்ள கலவை (பூசப்பட்ட தாய்), தண்ணிய மிக்க மணமுள்ள