பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

648 முருகவேள் திருமுறை 16ஆம் திருமுறை

  • தானதவத் திணின்மிகுதி - பெறுவோனே. t சாரதியுத் தமிதுணைவ முருகோனே;
  1. ஆனதிருப் பதிகமரு ளிளையோனே.

S ஆறுதிருப் பதியில்வளர் பெருமாளே, (2)

  • தான் தவத்தினில் தன்னைக் குறித்து அன்பர்கள் செய்யுந் தானத்திலுந் தவத்திலும்

t சாரதி உத்தமி துணைவன் - சரசுவதியாகிய உத்தமிக்குப் பக்கத் துணையாக இருப்பவன்; சகோதர முறையுடையவன் எனினுமாம், சா ரதி எனப் பிரித்து அந்த ரதிதேவிக்குச் சகோதரனே எனலுமாம்; முருகவேளுக்குப் பிரமனும் மன்மதனும் மைத்துனர்கள். " மதனனுக்கும் சதுர்முகற்கும் மைத்துனன்கான் அம்மே” (திருமலையாண்டவர் குறவஞ்சி)

  1. சிவபிராற்கு ஆனதும் (உகந்ததும்) உலகத்துக்கு நன்மை தருவதுமான - திருப்பதிகம் - தேவாரப்பாக்களை - அருளிய இளையவனே! (சம்பந்த மூர்த்தியே அல்லது வாழ்க அந்தணர் என்னும் திருப்பாசுரத்தை அருளிய சம்பந்த மூர்த்தியே), அல்லது ஆன (உனக்கு உகந்த திருப்பதிகம் ... பாடல்களை... (அழகிய சந்தத் திருப்புகழ்ப் பாடல்களை) அருள் பாடும்படி எனக்கு அருளிய - இளையோனே!

S ஆறு படைவீடு என்னாது ஆறு திருப்பதி என்றும், அறுபதி" என்று 449ஆம் பாடலிலும் கூறியது கவனிக்கற் பாலது. ஆறு திருப்பதிகள் திருமுருகாற்றுப்படையில் நக்கீரரால் எடுத்து ஓதப்பட்ட மேற்சொன்ன (பக்கம் 646 கீழ்க்குறிப்பு) ஆறு வீடுகள் (தலங்கள்) ஆற்றுப்படை வீடு' என மருவிற்று அருணகிரிநாதர் நூலார சி (பக்கம் 134, 151) பார்க்க