பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை) திருப்புகழ் உரை 633 445 நீண்ட காதணியை எட்டியும், மன்மதனையும் மருட்சியுறச் செய்தும், மாயத்தில் வல்ல யமனுடன் உறவு பூண்டும் நல்ல தவ நிலையை அழித்து, காம லீலைகள் மிகுத்து, மாவடுவுக்கு நிகரான கண்களை உடைய (பொ துமகளிர்) மரியாதையுடன் அழைத்து வாய்ப்பேச்சில் இனிமையை வைத்துப் பேசித் தேனென இனிக்கும் வாயிதழைத் தந்து (காம) அதுபோகக் கூட்டுறவில் உறவைத்து, மோசம் விளையும்படி வைத்து, நன்மையைப் (புகழை) அழிய வைப்பார்கள், (அத்தகையோர் களின்) உறவு நல்லதா! (நல்லதன்று என்றபடி) கச்சு (ரவிக்கையையும்) கிழித்து, மேரு மலையையும் தடுத்து (க்கீழ்ப்படுத்தி)ச் சிறந்த பொன் போன்ற குடம் போல் விளங்கி. அன்பாகிய ஆதரவை வைத்து, மிக்க லாவண்யத்தைக் (அழகைக்) கொண்டு, மாலைகள் நெருங்கிய கொங்கை விளங்கும் மாது. தோரை (கழுத்தணிகளுள் ஒன்று அணிவடம்) பூண்ட புயங்களை உடையவள், யோகினி, சாமர்த்தியம் நிறைந்தவள், மயிலன்ன உமாதேவி பெற்ற புதல்வனே! சூரனையும் அவன் சுற்றத்தாரையும் அழித்து, வேலாயுதத்தைத் திருக்கரத்தில் ஏந்தி சோலைமலையில் வீற்றிருக்கும் பெருமாளே! (சீர்மைகெட வைப்பர் உறவாமோ)