பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1094

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை) திருப்புகழ் உரை 621 அரிய சிறந்த மறையவர்கள் துதிக்கின்ற அழகுள்ள யானை வளர்த்த மாது தேவசேனையையும் விளங்கும் வண்டுகள் சேரும் கூந்தலை உடைய குறத்தி வள்ளியையும் அணைபவனே! அழகான பொலிவுள்ள மேடைகளும், உயரத்திலுள்ள மேகத்தை அளாவும் சோலைகளும் அற்புதத்தைக் கொண்டு நிறைந்து மிக்க மலையில் வீற்றிருக்கும் பெருமாளே! பத்தர்கள் பெருமாளே! (மெய்ஞ்ஞான முறச் செய்வ தொருநாளே) 441 அழகு விளங்கும் உடல் பசிய குளிர்ந்த நிறத்துடன் விளங்க, காற்சிலம்பின் ஒசை கலீர் கலீர் என ஒலிக்க, இணைந்து செல்லும் பாதங்கள் சிவேல் சிவேல் எனத் திகழ வருகின்ற மாதர்களின் o கூட்டங்களுக்குக் (கொடுப்பதற்காக) கட்டிளமைப் பருவத்துச் சில சில மாந்தர்கள், நூறுலட்சகோடி மிகப் பலத்த பெருமயலொடு (பெருத்த மோகத்தொடு) தேடின பொருள்கள் அவ்வளவையும் வாட்டமுற்று ஐயோ ஐயோ என்னும் படியாக, (இழக்கச் செய்கின்ற) மட மாதர்களின் மார்பிடம் எல்லாம் பரந்துள்ள மலையன்ன கொங்கை பளிர் பளிர் என்று ஒளிவீச, (அதைக் கண்டு) மனக் கலக்க முற்று என் ஆவி பகிர் பகிர் எனப் பிரமை அடைய, அம்மாதர்களின் பெரிய வசீகரச் செயல்களில் (மயங்கச் செய்யும் செயல்களில்) ஆசை உண்டு, உண்டு என்று நினைவானது ஓடி, அந்தக் (காமப் பித்த) வாடை (காற்று அல்லது வாசனை) என்னைப் பற்றுகின்ற (பிடிக்கின்ற) சமயத்தில் "அடா அடா" என்று என்னைக் கூவி அழைத்து உனக்கு என்ன மயக்கம் இது சொல்லுக, சொல்லுக' என வற்புறுத்தி, (நீ) அன்பு வைத்த திருவடி இதோ, இதோ என்று கூறித் தந்து அருள்புரிவாயாக.