பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1088

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை) திருப்புகழ் உரை 615 ஊமையாகிய என்னை விளங்க வைத்து (ரீ நந்தி ஒளியை ஊமையேனுக்குத் தெரிசிப்பித்து), நீ அருளும் முத்தி நிலையைப் பெற, ரமரந்திரம் எனப்படும் மூலவாசல் வெளிவிட்டு விளங்க, உனது அருளாற்றலால், விள்ங்குகின்ற யோக விதங்கள் எட்டும் இதில் பொருந்தும் வகைமையை இன்று தந்தருளுக. குதிரை வியாபாரி என வந்து குதிரைகளை விற்று மகிழ்ச் கொண்ட திருவாதவூரராம் மாணிக்க வாசகரை அடிமை கொண்ட கிருப்ாகரமூர்த்தி, பொன் உருவத்தினன், நல்ல நிலை (வடிவு) உட்ன் இருந்த குதிரைச் சம்மட்டி (சவுக்கு) வகைகளைக் கொண்ட செவ்விய திருக்கையைக் கொண்ட வனாம் சிவனுடைய (முன் பக்கத் தொடர்ச்சி)

  1. பாண்டியனிடத்தில் மந்திரியாக இருந்த திருவாதவூரர் (மாணிக்க வாசகர்) குதிரைகள் வாங்கிவரப், பெரும் பொருள்களை எடுத்துக்கொண்டு போய்த் திருப்பெருந்துறை என்னும் தலத்தில் சிவனே குருமூர்த்தமாக இருக்கக் கண்டு அவரால் ஆட்கொளப்பட்டு, திருவடி தீக்கை பெற்று, கொண்டு வந்த பொருள்களை எல்லாம் சிவன் பணிக்கே செலவிட்டனர். இதை அறிந்த பாண்டியன் இவரை வரவழைத்துக் குதிரைகள் எங்கே எனக்கேட்க, இறைவன் தமக்கு அறிவித்தபடி, ஆவணி மூலத்தன்று வருமெனச் சொன்னார். இறைவனும் குதிரைச் சேவகனாகி நரிகளைக் குதிரைகளாக்கி அன்று கொண்டு வந்து கொடுக்கப் பாண்டியன் மகிழ்ந்து பொன்னாடை தரப்பெற்றார். அக் குதிரைகள் அன்றிரவே நரிகளாய் இருந்த குதிரைகளுக்கும் ஊறு செய்து சென்றன. பாண்டியன் மாணிக்கவாசகர் மீது கோபித்து அவரைத் துன்புறுத்த, இறைவன் அருளால் வைகையாற்றில் வெள்ளம் வரவும், வெள்ளத்துக்கு அணைபோடும் ஆளாகச் சொக்கநாதர் வந்தி என்னும் பிட்டு வாணிச்சிக்குக் கூலியாள் ஆகி, அவள் தந்த பிட்டை உண்டு மண்சுமந்து, வேலை சரிவரச் செய்யவில்லையென்று பாண்டியன் கையாற் பிரம்படியும் பட்டனர். பின்பு இறைவனால் மணிவாசகளின் பெருமையை அரசன் உணர்ந்து அவரைப் போற்றினன். இதன் விரிவைத் திருவாதவூரர் புராணத்திலும் திருவிளையாடல் புராணத்திலும் காணலாகும். திருப்புகழ்ப் பாடல்கள் 4, 653, 964 - பார்க்கவும்.

S மாழைரூபன் - சிவன் - பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி" - பொன் வண்ணத் தந்தாதி 1. பொன்னார். மேனியனே" - சுந்தரர். 24. 1" பொன்னொளி கொள் மேனி" சம்பந்தர் 1-71 6. " மத்திகை குதிரைச் சம்மட்டி (சவுக்கு)