பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1086

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை) திருப்புகழ் உரை 613 439 திக்குகள் நான்கு (பக்கங்கள் நான்கு) கொண்ட சதுர மான கமலத்தில் (மூலாதார நான்கிதழ்க் கமலத்திற்) பொருந்தி, இனிய (நல்ல) ஒளி வீசிட ஒடி (இடம் - வலம்) இரண்டு பக்கங்களிலும் பொருந்தச் செய்கின்ற (இடைகலை - பிங்கலை என்னும் இரு நாடிகளின் வழியாக ஒடுகின்ற) வளி - காற்று (பிராணவாயுவை) விருப்பம் மிக்கெழ, மண் முதற் சலசம் (பிருதிவியைத் திருவாரூரை தாரத் தலமாகக்கொண்ட மூலாதாரத்துக்கு அடுத்த) வெனே முதல் ஆக்கினை ஈறாக உள்ள ஐவகைக் கமலங்களிலும் ஓடவைத்து, பொற். சபையும் (கனக சபையும்) சந்திர காந்தியும். நிரம்பி விளங்க, (அக்கினியாதி) மூன்று மண்டலங்களிலும் பொருந்த நிறுத்தி, பின்பு அங்கே வெளிப்பட்டுப் பிரகாசிக்கும் சோதியாம் ஆயிரத்தெட்டு இதழோடும் கூடியதான குரு கமலத்திற் செல்லச் செலுத்தி (ஏழும் அளவிட்டு). ஆறு ஆதாரங்களுடன் பிரமரந்திரம் கூடிய ஏழு இடங்களையும் அளவிட்டறிந்து (கண்டறிந்து), சிவந்த ஒளியுடன் கூடிய துவாதசாந்தத் தானத்தில் விந்து நாத (சிவதத்துவ நாத). ஒசை மிகுந்துள்ள ஒப்பற்ற சத்தம் (அதிகப் படிக மோடு) அதிகம்ான பளிங்கன்ன காட்சியுடன் கூடியதாய், ஒருமித்து (ஒன்று சேர்ந்து) அமுத சித்தியொடும் (மதிமண்டலத்னின்றும் பெருகிப் பாயும் கலா அமிர்தப் பேறுடன்) சொல்லப்படும் வேத (சர சத்தி அடியுற்ற) வாசி சத்திக்கு ஆதாரமாகவுள்ள பூரீ நந்தி ஒளிக்குள்ளே $ ஏழும் அளவிட்டு - ஆறு ஆதாரங்களுடன் பிரமரந்திரமும், பிரமரந்திரம் என்பது - உச்சித் துவாரம் இதற்கு உரிய தலம் - கயிலை, அருணவிற்பதி துவாதசாந்தத் தானம் - உச்சிக்குமேல் 12 அங்குலத்தில் உள்ளதாகக் கருதப்படும் போகத் தானம்; இதற்குரிய தலம் - மதுரை, பாட்டு 220 பார்க்க ++ அமுத சித்தி - மதி மண்டலத்தினின்றும் பெருகிப் பாயும் கலா அமிர்தப் பேறு. tt சரசத்தி அடி உற்ற திரு நந்தி - வாசி சத்திக்கு ஆதாரமாக உள்ள அ நந்தி ஒளி.