பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1084

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை) திருப்புகழ் உரை 611 438 யானையை ஒப்பிடலாம் என்றால் அதன் முகம் ஒரு காலத்திற் சிவபிரானாற் கிழிபட்டு விழுந்தது, அரும்பை (தாமரை மொட்டை) ஒப்பிடலாம் என்றால் அது மலர்ந்து வாடுகின்றது, பெரிய மலையை (கயிலை ஒப்பிடலாம் என்றால் அது ராவணனால் அசைக்கப்பட்ட பொழுது அசைவு உற்றது, மன்மதனது கிரீடத்துக்கு ஒப்பிடலாம் என்றால் அந்த முடி அவனைச் சிவபிரான் எரித்த பொழுது சாய்ந்து வீழ்ந்தது, சக்கிரவாள கிரிபோலத் தேவலோகம் அண்டகோளம் இவைதமை எட்டும்படி நிமிர்ந்தெழுந்து, மகா தவசிகளும் தரும நெறியைக் கைவிட்டு நிலைபேர (நிலைகுலைய). பூரணமாகத் திரண்ட குடத்தையும் வென்று, ಳ್ಗಿ சந்தனக் கலவைன்ய அணிந்து கர்மலிலைப் போன்ர் விரும்பும் கொங்கைகளை உடைய மாத்ர்களின் காமபோகப் படுக்கையை விட்டு நீங்கி உனது கூத்துக்கு இயன்ற திருவடியைப் பணிந்து, அதைப் பூசிக்கும் தொண்டன் இவன் என்று கூறும்படியான ஒரு நாள் வருமா! வேதம் முழங்குகின்ற ஆயிரக் கணக்கான மடங்களும், தவம், ஒமப்புகை இவை நடைபெறும் இடங்களும் பல கிளையாகப் பரந்து வரும் (நூபுரம் ஒலிக்கும் கங்கை சிலம்பாறு ஆர அமர நிர்ம்பி ஒழுங்காய் வந்து ததும்பி ஒலிக்கும் நீர்த் துறைகள் பொருந்த தோரணங்கள் அசையும் உயர்ந்த கோபுரம் நெருங்கி நின்று சூழ்ந்துள்ள அழகிய பொலிவுள்ள மண்டபங்களும் சூரியன் போல சோதி மிகுந்த செவ்விய அழகிய மாளிகைகளும் விளங்குகின்ற சோலைமலை வந்து ம்கிழ்ந்து வீற்றிருக்கும் பெருமாளே! (பூசனைசெய் தொண்டனென்பதொருநாளே!)