பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1064

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று -கதிர்காமம்) திருப்புகழ் உரை 591 அதிரவிசி ஆடுகின்ற ஈசன், வெற்றி விடையில் ஏறும் ஈசர் (கற்க அறியும்படி, அருமையான ஞான உபதேச மொழியை (அவருக்கு) அருளியவனே! எல்லா வுலகங்களின் மீதும் சுற்றி உலாவி, அசுரர் வாழ்ந்த உலகங்களைத் தூளாக்கி, தேவலோகத்தை வாழவைத்த பெருமாளே! (விகடமாதை நீ அணைக்க வரவேணும்) 430 (என் உயிரைக்கவர) வரும் யமதுாதர்கள் எனது ஆயுட் சீட்டு`ಿ எடுத்துக் கொண்டு வந்து, (நாங்கள்)யமதர்ம ராசாவின் துாதர்கள் என்று கூறி, (மடி பிடியதாக) விடாப்பிடியாக நின்று என்னைத் தொடர்கின்ற போது - (என்னை நோக்கி அவர்கள்) காமமிக்க பொல்லாத வம்பன் (வீணன்) துட்டன், தந்திரம் உடையவன் ஆகும் இவன் என்று, பழிப்பு வார்த்தைகளுடனே என்னைத் தொடர்ந்து நெருங்குவார்கள்; ஆயுதங்களை வீசிச் சதைகளை அரிந்து, கரிய (பசிய) (புனல் - நீர்) ரத்தம் சொரிந்து விழுமாறு (சிந்துமாறு) கழுமுனையில் இரு என்று ஏவி விடுவார்கள், அந்த சமயத்தை அறிந்து நீ வேகமாக வரவேணும் என்றன் முன்னிலையிலே; பரங்குன்றம், (நீ உலவி விளையாடும்) செந் துTர்மலை, அவையுடன் இடும்பன் கொண்டுவந்த பழநி மலை . ஆகிய தலங்களில் வீற்றிருக்கும் குமரேசனே! (முன் பக்கத் தொடர்ச்சி) 4 செந்திமலை- பாட்டு 46 பார்க்க S இடும்பன் பழநி - பாட்டு 112, 184. கி.ழ்க்குறிப்புக்களைப் பார்க்க