பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 87 30 கருப்பத்துக்கு இடமாய், இரத்தச் செழிப்புள்ள அல்குல் கொண்டு உருக்கும் பெண்களைக் கண்டு அப்போதே அவர் பின் சென்று அவரோடு - கூடல் கொண்டும் ஊடல் கொண்டும், ஒற்றுமை கொண்டும், வேற்றுமை கொண்டும், இன்பங் கொண்டும், துன்பம் கொண்டும் தடுமாறினவனாய், போருக்கு ஏற்ற தண்டாயுதத்தைத் தரித்துப் பூமியில் வந்து, (உயிர்களை) வருத்தும் யமனுக்கு என்றும் அச்சம் உற்று அழகிய திண்ணிய இப்பூமியில் ஐம்புலன்களுடன் அழிந்துபோகும் - (என்) சோர்வினைக் கண்டு, (என்னை) உய்யும்படி (ஆட்) கொண்டு, (என்) பிறப்பாகிய இடரையும், சிறையிலிட்டது போன்ற இடரையும் நீக்கி உனது திருவடி யின்பத்தைத் தந்தளுருக; (சூரியன் உலவுகின்ற கடலிடத்தே போய்ச் சூரனது பெருமையெல்லாம் அழியும்படி கோபித்த ஒளிவேலனே! படுக்கச்செய்தனர், பொழுது விடிந்ததும் அவளைக் காணோம். செட்டி கிழிபட்டுக் கிடந்தான். இதைக் கண்ட எழுபது பேரும் தாம் சொன்னவாறே தத்தம் உயிரைவிட்டனர். இந்தக் கதை மூலமாகத்தான் "நீலிவேடம் ஏன் போடுகின்றாய்? திருவாலங்காட்டு நீலி அழுகை ஏன் அழுகிறாய்? என்ற பழமொழிகள் உலவலாயின. சம்பந்தப்பெருமான் திருவாலங்காட்டுத் தேவாரத்தில், o 'வஞ்சப்படுத் தொருத்தி வாணாள் கொள்ளும் வகைகேட் டஞ்சும் பழையனூர் ஆலங்காட்டெம் அடிகளே" என இச் சரித்திரத்தைக் குறித்துள்ளார்.