(இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு எனது முக்கியக் குறிப்பைப் படியுங்கள் - நன்றி). (Please read my important note before using this website - Thank You).
இந்தத் திருப்புகழ் பாடல் வரிகளையும் தமிழில் சொல் விளக்கத்தையும் அனுப்பிய திரு சா. குப்புசுவாமி ஐயா (https://sivamurugumalai.blogspot.com) அவர்களுக்கு கௌமாரம் இணைய இயக்குனரின் மனமார்ந்த நன்றி.
இப்பாடல் கிடைத்த அநுபவம் ... திரு சா. குப்புசுவாமி ஐயா அவர்கள்.
ஸ்ரீ முருகப்பெருமான் துணை
இதுவரை எந்த பதிப்புகளிலும் காணாத "பெரியதொரு பிறவி" என்ற இந்த "குமரகிரி திருப்புகழ்" 18-03-2022 வெள்ளிக்கிழமை, பங்குனி உத்தரத்தன்று, எனக்குக் கிடைத்தது.
அடியேன் பெங்களூரில் உள்ள அருள்மிகு குமார சுவாமி திருக்கோயிலுக்கு, சென்றிருந்தபோது, ஒரு பக்தரால் பிரசாத பையில் கிடைத்தது. அவர் பிரசாதப் பையை என்னிடம் கொடுத்துவிட்டு, உள்ளே சென்ற உடன் வந்தவரை அழைத்து வருகிறேன் என்றுக் கூறிச் சென்றவர் வரவே இல்லை.
உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்தபோது, தேங்காய் முடி, பூ, பழம், வெற்றிலை பாக்கு, விபூதி பொட்டலம், அடியில் இந்த திருப்புகழ் எழுதிய சீட்டு ஆகியவை இருந்தன. அடியேன் திருமுருகனுடைய திருவருளை எண்ணி வியந்து வணங்கி அதை எடுத்து வந்தேன்.
பெரியதொரு பிறவியெனும் பந்தத் துந்தித் ... பெரியதாகிய ஒரு மானிடப் பிறவி எனும் பந்தபாசத்தில் அழுந்தி,
தெரிவையரை யுறவுகொள ஒன்றிச் சென்றுப் ... பெண்களிடம் உறவு கொள்வதற்காக தேடிச் சென்று,
பிணியுமொரு உடல் நலிய மங்கித் தொங்கிப் பலகாலம் ... அதன் காரணமாக பிணிகள் (நோய்கள்) வந்து சேர்ந்து, உடலானது அவதியுற்று, ஒளி குன்றி, சதைகள் சுருங்கி வளைந்து - இப்படியாகப் பலகாலம்
பொறிகளொடு புனையு மொரு விந்துத் துன்பப் ... ஐம்புலன்களோடு சேர்ந்துள்ளதுமான விந்து (அ) கருவால் உருவம் பெற்று, துன்பமாகிய
அழிவதையு மென்றுக் கண்டுத் தவிராதோ ... அத்தகைய இவ்வுடல் அழிவதையும் அடியேன் என்று அறிந்துகொண்டு, அதிலிருந்து விடுபடுவதற்கு முயலமாட்டேனோ?
சிவகலையும் பகரு மொரு பண்பைச் சிந்தித்து ... சிவ ஆகமங்கள் கூறுகின்ற நற்குணங்கள் பொருந்திய ஒரு பண்பை உளமதில் சிந்தித்து,
அறியவொரு மொழியு முளதென்றுத் தந்தச் ... அறிந்து கொள்வதற்கு ஒரு உபதேச மொழி இருக்கிறது என்று, அதை அடியேனுக்கு அருளிய உனது கருணையால்
சிறிய யுயிருய நினது செம்பொற் றண்டைப் பதமேவ ... இந்தச் சிறிய உயிர் நற்கதி அடைய, சிவந்தப் பொன்னாலான தண்டை எனும் ஆபரணம் அணிந்துள்ள உனது திருப்பாதங்களை அடைவதற்கு,
வயலிதனில் வருகவென வந்துத் தந்தப் ... வயலூர் எனும் திருத்தலத்திற்கு வருக என அடியேனைக் கூப்பிட்டு, அங்கு அருள் புரிந்த
பொருளுமிகு அறியதொரு சந்தத் தின்பத்து ... மிகுந்த பொருளோடு அறிந்து கொள்வதற்கேற்ப ஒரு சந்தப் பாடலாகிய திருப்புகழின் இன்பத்தை,
உனதடிமை மனமுருகி சிந்தித் துன்றித் திளைவேனோ ... உனது அடிமையாகிய யான், மனம் உருகி சிந்தித்து, அதில் ஆழ்ந்து(அ) மூழ்க மாட்டேனோ?
பவனெனவுங் குகனெனவு மும்பர் கும்பிட் ... சரவணபவன் எனவும், குகன் எனவும், தேவர்கள் யாவரும் வணங்கித்
டொழவுமறு முகனெனவுங் கந்தச் சங்கப் ... தொழவும், ஆறுமுகன் எனவும், கந்தா எனவும், சங்கப் புலவன் எனவும்,
Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது. எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது. நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன். உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.
Kaumaram.com was recently affected by DDOS attack. As such, images and audio will be temporarily unavailable. I am trying to correct this progressively. Thank you for your patience and understanding. ... webmaster.
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees
COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.
Please contact me (the webmaster), if you wish to place a link in your website.
email: kaumaram@gmail.com
Disclaimer:
Although necessary efforts have been taken by me (the webmaster), to keep the items in www.kaumaram.com safe from viruses etc., I am NOT responsible for any damage caused by use of and/or downloading of any item from this website or from linked external sites. Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items from the internet for maximum safety and security. மேலே top