திருப்புகழ் 1298 பரவைக்கு எத்தனை  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1298 paravaikkueththanai  (common)
Thiruppugazh - 1298 paravaikkueththanai - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனத் தத்தன ...... தனதான

......... பாடல் .........

பரவைக் கெத்தனை ...... விசைதூது
   பகரற் குற்றவ ...... ரெனமாணுன்
      மரபுக் குச்சித ...... ப்ரபுவாக
         வரமெத் தத்தர ...... வருவாயே

கரடக் கற்பக ...... னிளையோனே
   கலைவிற் கட்குற ...... மகள்கேள்வா
      அரனுக் குற்றது ...... புகல்வோனே
         அயனைக் குட்டிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பரவைக்கு எத்தனை விசைதூது ... (அடியார் சுந்தரருக்காக) பரவை
நாச்சியாரிடம் எத்தனைமுறை வேண்டுமானாலும் தூது போய்

பகரற்கு உற்றவர் என மாண் ... சொல்வதற்கு உடன்பட்டவர் இவர்
(அதாவது இந்த முருகனின் தந்தையாகிய சிவபிரான்) என்னும்
புகழினைப் பெற்ற

உன் மரபுக்கு உச்சித ப்ரபுவாக ... உனது குலத்துக்கு ஏற்ற
தகுதியும் பெருமையும் கொண்ட பெரியோனாக நீயும் விளங்கி,

வரம் மெத்தத் தர வருவாயே ... வரங்களை எனக்கு நிரம்பத்
தருவதற்காக இங்கு எழுந்தருளி வருவாயாக.

கரடக் கற்பகன் இளையோனே ... மதம்பாயும் சுவட்டை உடைய
யானை முகத்தவனும், கற்பக விருட்சம்போலக் கேட்டதை அளிக்கும்
கணபதியின் தம்பியே,

கலைவிற் கட்குற மகள்கேள்வா ... மான் போன்றும் வில் போன்றும்
கண்களை உடைய குறமகள் வள்ளியின் கணவனே,

அரனுக்கு உற்றது புகல்வோனே ... சிவபிரானுக்கு அழிவில்லா
உண்மைப் பொருளை உபதேசித்தவனே,

அயனைக் குட்டிய பெருமாளே. ... பிரமனைக் கைகளால் குட்டின
பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.674  pg 3.675 
 WIKI_urai Song number: 1297 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

M.S. Balashravanlakshmi - Puducherry
M.S. பாலஷ்ரவண்லக்ஷ்மி
புதுச்சேரி

M.S. Balashravanlakshmi
Puducherry
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

திருமதி காந்திமதி சந்தானம்

Mrs Kanthimathy Santhanam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Mrs Kanthimathy Santhanam

Song 1298 - paravaikku eththanai (common)

paravaik keththanai ...... visaithUthu
   pakaraR kutRava ...... renamANun
      marapuk kuccitha ...... prapuvAka
         varameth thaththara ...... varuvAyE

karadak kaRpaka ...... niLaiyOnE
   kalaiviR katkuRa ...... makaLkELvA
      aranuk kutRathu ...... pukalvOnE
         ayanaik kuttiya ...... perumALE.

......... Meaning .........

paravaikku eththanai visaithUthu: To go as a messenger several times to Paravai NAchchiyAr (on behalf of His devotee Sundarar)*,

pakaraRku utRavar ena mAN: He was most willing; such was the reputation (of Your Father, Lord SivA).

un marapukku uccitha prapuvAka: You too will have to be a Great One in accordance with the eminence of Your lineage;

varam meththath thara varuvAyE: kindly come here to bestow upon me bountiful boons!

karadak kaRpakan iLaiyOnE: You are the younger brother of Ganapathi, who has the sign of gushing saliva left behind on His elephant face and who is a benefactor like the wish-yielding tree, KaRpagam.

kalaiviR katkuRa makaLkELvA: You are the consort of VaLLi, the damsel of the KuRavAs, whose eyes are like the deer and the bow.

aranukku utRathu pukalvOnE: You preached to Lord SivA the significance of eternal truth!

ayanaik kuttiya perumALE.: You banged the heads of BrahmA with Your knuckles, Oh Great One!


* For the sake of His devotee, SundharamUrthy NAyanAr, Lord SivA once took the disguise of a brahmin to go as a messenger several times to Paravai NAchchiyAr, the beloved lady of Sundarar - Periya PurANam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1298 paravaikku eththanai - common


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]