திருப்புகழ் 1295 நித்தம் உற்றுனை  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1295 niththamutRunai  (common)
Thiruppugazh - 1295 niththamutRunai - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

mp3
 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்தனத் தனனதத்த ...... தனதான

......... பாடல் .........

நித்தமுற் றுனைநினைத்து ...... மிகநாடி
   நிட்டைபெற் றியல்கருத்தர் ...... துணையாக
      நத்தியு தமதவத்தி ...... னெறியாலே
         லக்யலக் கணநிருத்த ...... மருள்வாயே

வெற்றிவிக் ரமவரக்கர் ...... கிளைமாள
   விட்டநத் துகரனுக்கு ...... மருகோனே
      குற்றமற் றவருளத்தி ...... லுறைவோனே
         குக்குடக் கொடிதரித்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

நித்தம் உற்றுனைநினைத்து மிகநாடி ... தினமும் உன்னை
மனத்தில் பொருத்தி நினைத்து மிகவும் விரும்பியும்,

நிட்டைபெற்றியல்கருத்தர் துணையாக ... தியானநிலை பெற்று
வாழும் பெரியோரைத் துணையென்று

நத்தி உ(த்)தம தவத்தின் நெறியாலே ... அவர்களை நாடியும்,
சிறந்த நல்லொழுக்கத்தை நான் பற்றிய பயனாக

லக்ய லக்கண நிருத்தம் அருள்வாயே ... இலக்கியத்தில் (பரத
சாஸ்திரத்தில்) சொல்லியபடியும், நிருத்த இலக்கணப்படியும் உனது
நிருத்த தரிசனத்தை* நீ எனக்கு அருள்வாயாக.

வெற்றி விக்ரமவரக்கர் கிளைமாள விட்ட ... வெற்றியும்
பராக்கிரமும் கொண்டிருந்த அரக்கர் சுற்றத்தாருடன் இறக்கும்படிச் செய்த

நத்துகரனுக்கு மருகோனே ... சக்ராயுதத்தைக் கரத்தில்
ஏந்தியவனாகிய திருமாலுக்கு மருமகனே,

குற்றமற்றவர் உளத்தில் உறைவோனே ... குற்றம் இல்லாத
பெரியோர்களின் மனத்தில் விளங்குபவனே,

குக்குடக் கொடிதரித்த பெருமாளே. ... சேவற்கொடியை ஏந்திய
பெருமாளே.


* சிதம்பரம், திருத்தணிகை, திருச்செந்தூர், கொடுங்குன்றூர் ஆகிய தலங்களில்
நிருத்த தரிசனத்தில் முருகன் காட்சி தரவேண்டும் என்று அருணகிரிநாதர்
வேண்டிப் பாடியுள்ளார்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.670  pg 3.671 
 WIKI_urai Song number: 1294 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

திருமதி காந்திமதி சந்தானம்

Mrs Kanthimathy Santhanam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Mrs Kanthimathy Santhanam

Song 1295 - niththam utRunai (common)

niththam utrunai ninaiththu ...... miganAdi
   nishtai petriyal karuththar ...... thuNaiyAga
      naththi uththama thavaththi ...... neRiyAlE
         lakya lakkaNa niruththam ...... aruLvAyE

vetri vikrama arakkar ...... kiLaimALa
   vitta naththu karanukku ...... marugonE
      kutra matravar uLaththil ...... uRaivOnE
         kukkudak kodi dhariththa ...... perumALE.

......... Meaning .........

niththam utrunai ninaiththu miganAdi: Everyday I fully contemplate You in my mind ardently;

nishtai petriyal karuththar thuNaiyAga: I also seek the company of great people who have transcended great heights in meditation

naththi uththama thavaththi neRiyAlE: and willingly follow their righteous directions; and as a result,

lakya lakkaNa niruththam aruLvAyE: You must appear before me dancing* in accordance with all the theories in Bharatha Natya SAstrA and the rules laid out in the Nriththa SAstra.

vetri vikrama arakkar kiLaimALa: Dynasties of powerful and victorious demons (asuras) were destroyed

vitta naththu karanukku marugonE: by the weapon, ChakrA, held by Vishnu; and You are His nephew!

kutra matravar uLaththil uRaivOnE: You reside in the hearts of people who are sinless!

kukkudak kodi dhariththa perumALE.: You hold in Your hand the staff of Rooster, Oh Great One!


* AruNagirinAthar has prayed to Murugan to appear before him in a dancing posture at four centres namely, Chidhambaram, ThiruththaNigai, ThiruchchendhUr and KodungkundRUr.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

mp3
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1295 niththam utRunai - common


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]