திருப்புகழ் 1262 பார நறுங்குழல்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1262 pAranaRungkuzhal  (common)
Thiruppugazh - 1262 pAranaRungkuzhal - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

mp3
 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தனந்தன தான தனந்தன
     தான தனந்தன ...... தனதான

......... பாடல் .........

பார நறுங்குழல் சோர நெகிழ்ந்துப
     டீர தனம்புள ...... கிதமாகப்

பாவை யருந்தியல் மூழ்கி நெடும்பரி
     தாப முடன்பரி ...... மளவாயின்

ஆர முதுண்டணை மீதி லிருந்தநு
     ராகம் விளைந்திட ...... விளையாடி

ஆக நகம்பட ஆர முயங்கிய
     ஆசை மறந்துனை ...... யுணர்வேனோ

நார தனன்றுச காய மொழிந்திட
     நாய கிபைம்புன ...... மதுதேடி

நாண மழிந்துரு மாறி யவஞ்சக
     நாடி யெபங்கய ...... பதநோவ

மார சரம்பட மோக முடன்குற
     வாணர் குறிஞ்சியின் ...... மிசையேபோய்

மாமு நிவன்புணர் மானு தவுந்தனி
     மானை மணஞ்செய்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பார நறும் குழல் சோர நெகிழ்ந்து படீர தனம் புளகிதமாகப்
பாவையர் உந்தியில் மூழ்கி
... பாரமானதும், நறு மணம் வீசுவதுமான
கூந்தல் குலைய, சந்தனம் அணிந்துள்ள மார்பகம் கட்டுத் தளர்ந்து
புளகிதம் கொள்ள, மாதர்களின் உதரத்தில் முழுகியவனாய்,

நெடும் பரிதாபம் உடன் பரிமள வாயின் ஆர் அமுது உண்டு
அணை மீதில் இருந்து
... மிக்க தாகத்துடன் நறு மணம் உள்ள
வாயிதழில் நிறைந்த அமுதூறலைப் பருகி, படுக்கையில் இருந்து,

அநுராகம் விளைந்திட விளையாடி ஆக நகம் பட ஆரம்
முயங்கிய ஆசை மறந்து உனை உணர்வேனோ
... காமப் பற்று
உண்டாக லீலைகளைச் செய்து, உடலில் நகக்குறிகள் பட மிக நன்றாகத்
தழுவிய வேசையர் ஆசையை மறந்து, உன்னை உணரும் பாக்கியம்
எனக்குக் கிடைக்குமோ?

நாரதன் அன்று சகாய(ம்) மொழிந்திட நாயகி பைம்புனம்
அது தேடி
... நாரத முனிவர் அந்நாளில் (வள்ளி சம்பந்தமான) உதவி
மொழிகளை எடுத்துச் சொல்ல, வள்ளி நாயகி இருந்த பசுமையான
தினைப் புனத்தைத் தேடிச் சென்று,

நாணம் அழிந்து உரு மாறிய வஞ்சகன் ... கூச்சத்தையும் விட்டு
(வேடன், விருத்தன், வேலன்) ஆகிய உருவம் எடுத்த தந்திரக்காரனே,

நாடியெ பங்கய பத(ம்) நோவ மார(ன்) சரம் பட மோகமுடன்
குற வாணர் குறிஞ்சியின் மிசையே போய்
... விரும்பி, தாமரைத்
திருவடிகள் நோக, மன்மதனின் மலர்ப்பாணங்கள் தைக்க, காம
இச்சையுடன் குறவர்கள் வாழும் வள்ளிமலையின் மீது சென்று,

மா முநிவன் புணர் மான் உதவும் தனிமானை மணம் செய்த
பெருமாளே.
... சிறந்த சிவமுனிவர் இணைந்ததால் லக்ஷ்மியாகிய
மான் பெற்ற ஒப்பற்ற மான் போன்ற வள்ளியைத் திருமணம் செய்த
பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.616  pg 3.617 
 WIKI_urai Song number: 1261 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1262 - pAra naRunguzhal (common)

pAra naRunguzhal sOra nekizhnthupa
     deera thanampuLa ...... kithamAkap

pAvai yarunthiyal mUzhki nedumpari
     thApa mudanpari ...... maLavAyin

Ara muthuNdaNai meethi lirunthanu
     rAkam viLainthida ...... viLaiyAdi

Aka nakampada Ara muyangiya
     Asai maRanthunai ...... yuNarvEnO

nAra thananRusa kAya mozhinthida
     nAya kipaimpuna ...... mathuthEdi

nANa mazhinthuru mARi yavanjaka
     nAdi yepangaya ...... pathanOva

mAra sarampada mOka mudankuRa
     vANar kuRinjiyin ...... misaiyEpOy

mAmu nivanpuNar mAnu thavunthani
     mAnai maNamcheytha ...... perumALE.

......... Meaning .........

pAra naRum kuzhal sOra nekizhnthu padeera thanam puLakithamAkap pAvaiyar unthiyil mUzhki: With their heavily tufted and fragrant hair getting loosened and becoming dishevelled and their bosom, smeared with sandalwood paste, losing firmness and experiencing a thrill, I have been drowning myself in the bellies of women;

nedum parithApam udan parimaLa vAyin Ar amuthu uNdu aNai meethil irunthu: with intense thirst, I have been imbibing the nectar-like saliva filled in their fragrant mouths; resting on their beds,

anurAkam viLainthida viLaiyAdi Aka nakam pada Aram muyangiya Asai maRanthu unai uNarvEnO: I have been indulging in many provocative and erotic acts, hugging them so tightly that my body bore their nail-marks; will I ever forget my passion for those whores and have the privilege of realising You, Oh Lord?

nArathan anRu sakAya(m) mozhinthida nAyaki paimpunam athu thEdi: When Sage NArathar gave You the other day very useful hints (about VaLLi), You sought out and reached the fertile millet-field of VaLLi;

nANam azhinthu uru mARiya vanjakan: without feeling a sense of shame, You took many disguises (like a hunter, an old man and the Lord with the spear), Oh Crafty One!

nAdiye pangaya patha(m) nOva mAra(n) saram pada mOkamudan kuRa vANar kuRinjiyin misaiyE pOy: You went willingly, full of passion, to Mount VaLLimalai where that damsel of the KuRavAs lived, even as Your lotus feet hurt and Manmathan (God of Love) kept wielding the flowery arrows, Oh Lord!

mA munivan puNar mAn uthavum thanimAnai maNam seytha perumALE.: You married the matchless and deer-like damsel, VaLLi, who was born to Goddess Lakshmi coming as a deer as a result of union with a great Saivite sage, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

mp3
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1262 pAra naRungkuzhal - common


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]