திருப்புகழ் 1238 சந்தம் புனைந்து  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1238 sandhampunaindhu  (common)
Thiruppugazh - 1238 sandhampunaindhu - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்தந் தனந்த தந்தந் தனந்த
     தந்தந் தனந்த ...... தனதான

......... பாடல் .........

சந்தம் புனைந்து சந்தஞ் சிறந்த
     தண்கொங் கைவஞ்சி ...... மனையாளுந்

தஞ்சம் பயின்று கொஞ்சுஞ் சதங்கை
     தங்கும் பதங்க ...... ளிளைஞோரும்

எந்தன் தனங்க ளென்றென்று நெஞ்சி
     லென்றும் புகழ்ந்து ...... மிகவாழும்

இன்பங் களைந்து துன்பங்கள் மங்க
     இன்றுன் பதங்கள் ...... தரவேணும்

கொந்தின் கடம்பு செந்தண் புயங்கள்
     கொண்டங் குறிஞ்சி ...... யுறைவோனே

கொங்கின் புனஞ்செய் மின்கண்ட கந்த
     குன்றம் பிளந்த ...... கதிர்வேலா

ஐந்திந் த்ரியங்கள் வென்றொன்று மன்பர்
     அங்கம் பொருந்து ...... மழகோனே

அண்டந் தலங்க ளெங்குங் கலங்க
     அன்றஞ் சலென்ற ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சந்தம் புனைந்து சந்தஞ் சிறந்த ... சந்தனத்தைப் பூசிக்கொண்டு
மிகவும் அழகு சிறந்த

தண்கொங்கை வஞ்சி மனையாளும் ... குளிர்ந்த மார்புடைய
வஞ்சிக்கொடி போன்ற மனைவியும்,

தஞ்சம் பயின்று ... என்னையே பற்றுக்கோடாகக் கொண்டு,

கொஞ்சுஞ் சதங்கை தங்கும் பதங்கள் ... கொஞ்சி ஒலிக்கும்
கிண்கிணிகள் அணிந்த பாதங்களை உடைய

இளைஞோரும் எந்தன் தனங்கள் என்றென்று ... குழந்தைகளும்,
ஆகியவர்களே என் செல்வங்கள் என்றென்று

நெஞ்சிலென்றும் புகழ்ந்து ... அடிக்கடி என் மனத்திலே எப்போதும்
புகழ்ந்து

மிகவாழும் இன்பங் களைந்து ... மிக்க மகிழ்ச்சியுடன் வாழும்
நிலையில்லா இன்பத்தை நீக்கி,

துன்பங்கள் மங்க ... எனது துயரங்கள் யாவும் அடங்கி ஒழிய,

இன்றுன் பதங்கள் தரவேணும் ... இன்று உனது திருவடிகளைத்
தந்தருள வேண்டும்.

கொந்தின் கடம்பு ... கொத்துக் கொத்தாக உள்ள கடப்ப மலர்
மாலையை

செந்தண் புயங்கள் கொண்டு ... செவ்விய குளிர்ந்த புயங்களிலே
அணிந்து கொண்டு

அங் குறிஞ்சியுறைவோனே ... அழகிய மலையிடங்களில் எல்லாம்
வீற்றிருப்பவனே,

கொங்கின் புனஞ்செய் ... வாசனை மிக்க தினைப்புன வயலிலே
இருந்த

மின்கண்ட கந்த ... மின்னல் போன்ற அழகி வள்ளியைக் கண்டு
மகிழ்ந்த கந்தனே,

குன்றம் பிளந்த கதிர்வேலா ... கிரெளஞ்சமலையைப் பிளந்த ஒளி
படைத்த வேலனே,

ஐந்து இந்த்ரியங்கள் வென்று ஒன்றும் அன்பர் ... மெய், வாய்,
கண், மூக்கு, செவி என்னும் ஐந்து பொறிகளையும் அடக்கி
வென்றிருக்கும் அன்பர்களுடைய

அங்கம் பொருந்தும் அழகோனே ... அங்கங்களில் எல்லாம்
பொருந்தி விளங்கும் அழகனே,

அண்டந் தலங்கள் எங்குங் கலங்க ... அண்டங்களும் உலகங்களும்
எங்கும் அன்று சூரனுக்கு அஞ்சிக் கலங்க,

அன்று அஞ்சலென்ற பெருமாளே. ... அந்த வேளையில்
பயப்படாதீர்கள் என்று அருளிய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.570  pg 3.571  pg 3.572  pg 3.573 
 WIKI_urai Song number: 1237 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Singapore B. Subhashini
'சிங்கப்பூர்' செல்வி சுபாஷினி

Singapore B. Subhashini
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1238 - sandham punaindhu (common)

sandham punaindhu sandham siRandha
     thaN kongai vanji ...... manaiyALun

thanjam payindru konjum sadhangai
     thangum padhangaL ...... iLainyOrum

endhan dhanangaL endrendru nenjil
     endrum pugazhndhu ...... migavAzhum

inbam kaLaindhu thunbangaL manga
     indrun padhangaL ...... tharavENum

kondhin kadambu senthaN buyangaL
     koNdang kuRinji ...... uRaivOnE

kongin punansey minkaNda kandha
     kundRam piLandha ...... kadhirvElA

aindh indhriyangaL vendrendrum anbar
     angam porundhum ...... azhagOnE

aNdan thalangaL engum kalanga
     andranjal endra ...... perumALE.

......... Meaning .........

sandham punaindhu sandham siRandha thaN kongai vanji manaiyALun: Wearing the sandal paste on her beautiful cool bosom is my vanji (rattan reed) creeper-like lovely wife; and

thanjam payindru konjum sadhangai thangum padhangaL iLainyOrum: totally dependent on me are my cuddling children with lilting anklets around their ankles;

endhan dhanangaL endrendru nenjil: My heart is filled with the thought these alone are my wealth,

endrum pugazhndhu migavAzhum: and I keep praising them saying how lucky my life is!

inbam kaLaindhu thunbangaL manga: I should be rid of this short-lived bliss, and my worries should be over;

indrun padhangaL tharavENum: and for that, You should grant me Your holy feet today.

kondhin kadambu senthaN buyangaL koNdu: Wearing garlands made of bunches of kadappa flowers on Your lovely cool shoulders,

ang kuRinji uRaivOnE: You reside at several beautiful mountains!

kongin punansey minkaNda kandha: You went to the fragrant millet-field to find VaLLi, who is bright as a lightning, Oh KandhA.

kundRam piLandha kadhirvElA: You split the Mount Krouncha with Your bright spear, VElA!

aindh indhriyangaL vendrendrum anbar: Your devotees who have always conquered the five sensory organs*

angam porundhum azhagOnE: will find You residing in their limbs, Oh Handsome One!

aNdan thalangaL engum kalanga: When all the worlds and planets shook with fear (of asuras),

andranjal endra perumALE.: You declared that day "Never Fear", Oh Great One!


* The five sensory organs are body, mouth, eyes, nose and ears.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1238 sandham punaindhu - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]