திருப்புகழ் 1153 குனகியொரு மயில்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1153 kunagiyorumayil  (common)
Thiruppugazh - 1153 kunagiyorumayil - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தனதான தானான தானான
     தனதனன தனதான தானான தானான
          தனதனன தனதான தானான தானான ...... தனதான

......... பாடல் .........

குனகியொரு மயில்போல வாராம னோலீலை
     விளையவினை நினையாம லேயேகி மீளாத
          கொடியமன தநியாய மாபாத காபோதி ...... யெனஆசைக்

கொளுவஅதில் மயலாகி வீறோடு போய்நீள
     மலரமளி தனிலேறி யாமாறு போமாறு
          குலவிநல மொழிகூறி வாரேறு பூணார ...... முலைமூழ்கி

மனமுருக மதராஜ கோலாடு மாபூசல்
     விளையவிழி சுழலாடி மேலோதி போய்மீள
          மதிவதன மொளிவீச நீராள மாய்மேவி ...... யநுராக

வகைவகையி லதிமோக வாராழி யூடான
     பொருளளவ தளவாக யாரோடு மாலான
          வனிதையர்கள் வசமாய நாயேனு மீடேற ...... அருள்வாயே

எனதுமொழி வழுவாமல் நீயேகு கான்மீதி
     லெனவிரகு குலையாத மாதாவு நேரோத
          இசையுமொழி தவறாம லேயேகி மாமாது ...... மிளையோனும்

இனிமையொடு வருமாய மாரீச மானாவி
     குலையவரு கரதூஷ ணாவீரர் போர்மாள
          இறுகிநெடு மரமேழு தூளாக வேவாலி ...... யுயிர்சீறி

அநுமனொடு கவிகூட வாராக நீராழி
     யடைசெய்தணை தனிலேறி மாபாவி யூர்மேவி
          அவுணர்கிளை கெடநூறி யாலால மாகோப ...... நிருதேசன்

அருணமணி திகழ்பார வீராக ராமோலி
     யொருபதுமொர் கணைவீழ வேமோது போராளி
          அடல்மருக குமரேச மேலாய வானோர்கள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

குனகி ஒரு மயில் போல வாரா மனோ லீலை விளைய வினை
நினையாமலே ஏகி மீளாத கொடிய மனத அநியாய மா பாத
காபோதி என
... கொஞ்சிக் குலவி ஒப்பற்ற மயில் போல் வந்து,
மனத்தில் காம லீலைகள் தோன்ற (அதனால்) உண்டாகும் பயன்களை
யோசியாமல், அந்தத் தீய வழியிலேயே சென்று (அவ் வழியினின்றும்)
திரும்பி வராமல் (காலம் கழித்து) தீய மனதுடன், நியாயம் அற்ற பெரிய
பாதக நெறியில் செல்லும் குருடன் இவன் என்று சொல்லும்படி,

ஆசைக் கொளுவ அதில் மயலாகி வீறோடு போய் நீள மலர்
அமளி தனில் ஏறி ஆமாறு போமாறு குலவி நல மொழி கூறி
வார் ஏறு பூணார முலை மூழ்கி
... (மண், பெண், பொன் என்னும்)
ஆசைகள் கொழுந்து விட்டு எரிய, அவற்றில் மயக்கம் கொண்டவனாய்,
தற்பெருமையுடன் நடந்தவனாய், நீண்ட காலம் மலர்ப் படுக்கையில்
ஏறி, மேலான நிலைக்கு வரும் வழிகள் எல்லாம் கெட்டழியும்படி
(வேசியர்களிடம்) கொஞ்சிப் பேசி இன்பமான பேச்சுக்களை மொழிந்து,
கச்சு அணிந்துள்ளதும் முத்து மாலையைக் கொண்டதுமான
மார்பகங்களில் முழுகி,

மனம் உருக மத ராஜ கோல் ஆடு மா பூசல் விளைய விழி
சுழலாடி மேல் ஓதி போய் மீள மதிவதனம் ஒளி வீச
நீராளமாய் மேவி அநுராக
... மனம் உருக, மன்மதனுடைய
பாணங்கள் இயற்றும் பெரிய காமப் போர் உண்டாக, கண்கள் சுழன்று,
மேலே உள்ள கூந்தலை எட்டிப் பார்ப்பது போல அணுகி மீள, நிலவின்
ஒளியைக் கொண்ட முகம் ஒளி வீச, வேர்வை நீர் மிகவும் பெருகி, காமப்
பற்று ஊறி,

வகை வகையில் அதி மோக வாராழி ஊடானபொருள் அளவு
அது அளவாக யாரோடு(ம்) மால் ஆன வனிதையர்கள்
வசமாய நாயேனும் ஈடேற அருள்வாயே
... விதம் விதமாக, மிக்க
மோகம் என்னும் பெரிய கடலிடையே கிடைக்கும் (காமுகரால்
கொடுக்கப்பட்ட) பொருளின் அளவுக்குத் தக்கபடி எல்லாரிடமும் காம
இச்சையைக் காட்டும் விலைமாதர்களின் வசப்பட்டு நாயினும் கீழான
அடியேனும் ஈடேறும் பொருட்டு அருள் புரிவாயாக.

எனது மொழி வழுவாமல் நீ ஏகு கான் மீதில் என விரகு
குலையாத மாதாவு(ம்) நேர் ஓத இசையும் மொழி தவறாமலே
ஏகி மா மாது(ம்) இளையோனும் இனிமையொடு
... என்னுடைய
பேச்சு தவறாமல் நீ காட்டுக்குப் போவாயாக என்று வஞ்சகம் குறைவு
படாத மாதாவாகிய கைகேயியும் எடுத்துச் சொல்ல, சொன்ன சொல்
தவறாமல் லக்ஷ்மி போன்ற சீதையும் தம்பி இலக்குமணனும்
விருப்பமுடன் கூட வர காட்டுக்குப் போய்,

வரு மாய மாரீச மான் ஆவி குலைய வரு கர தூஷணா வீரர்
போர் மாள இறுகி நெடு மரம் ஏழு தூளாகவே வாலி உயிர்
சீறி
... காட்டிடை வந்த மாய மானாகிய மாரீசன் உயிர் துறக்க, போருக்கு
வந்த கர, துஷணர்கள் முதலிய வீரர்கள் கொல்லப்பட, உறுதியாக இருந்த
மராமரங்கள் ஏழும் ராமபாணத்தால் துளைபட, வாலியின் உயிர் மடிய,

அநுமனொடு கவி கூட வாராக(ம்) நீர் ஆழி அடை செய்து
அணை தனில் ஏறி மா பாவி ஊர் மேவி அவுணர் கிளை கெட
நூறி
... அனுமனோடு குரங்குகளும் கூடிவர கடலாகிய நீரை
அணையிட்டு அடைத்து, அந்த அணை மீதில் ஏறிச் சென்று பெரிய
பாதகனாகிய இராவணனுடைய ஊராகிய இலங்கைக்குப் போய்
அரக்கர்களுடைய கூட்டம் எல்லாம் மாளப் பொடி செய்து,

ஆலால(ம்) மா கோப நிருதேசன் அருண மணி திகழ் பார
வீராகரா மோலி ஒரு பதும் ஒர் கணை வீழவே மோது
போராளி அடல் மருக
... ஆலகால விஷம் போல பெரிய
கோபத்துடன் வந்த அரக்கர் தலைவனான இராவணனுடைய சிவந்த
இரத்தினங்கள் விளங்குவதும், கனத்ததுமான மகுடங்கள் ஒரு பத்தும்
ஒரே அம்பால் அற்று விழும்படி தாக்கிய போர் வீரனான திருமாலின்
வலிமை நிரம்பிய மருகனே,

குமரேச மேலாய வானோர்கள் பெருமாளே. ... குமரேசனே,
மேம்பட்ட தேவர்களின் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.376  pg 3.377  pg 3.378  pg 3.379  pg 3.380  pg 3.381 
 WIKI_urai Song number: 1156 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1153 - kunagiyoru mayil (common)

thanathanana thanathAna thAnAna thAnAna
     thanathanana thanathAna thAnAna thAnAna
          thanathanana thanathAna thAnAna thAnAna ...... thanathAna

......... Song .........

kunakiyoru mayilpOla vArAma nOleelai
     viLaiyavinai ninaiyAma lEyEki meeLAtha
          kodiyamana thaniyAya mApAtha kApOthi ...... yenaAsaik

koLuva-athil mayalAki veeROdu pOyneeLa
     malaramaLi thanilERi yAmARu pOmARu
          kulavinala mozhikURi vArERu pUNAra ...... mulaimUzhki

manamuruka matharAja kOlAdu mApUsal
     viLaiyavizhi suzhalAdi mElOthi pOymeeLa
          mathivathana moLiveesa neerALa mAymEvi ...... yanurAka

vakaivakaiyi lathimOka vArAzhi yUdAna
     poruLaLava thaLavAka yArOdu mAlAna
          vanithaiyarkaL vasamAya nAyEnu meedERa ...... aruLvAyE

enathumozhi vazhuvAmal neeyEku kAnmeethi
     lenaviraku kulaiyAtha mAthAvu nErOtha
          isaiyumozhi thavaRAma lEyEki mAmAthu ...... miLaiyOnum

inimaiyodu varumAya mAreesa mAnAvi
     kulaiyavaru karathUsha NAveerar pOrmALa
          iRukinedu maramEzhu thULAka vEvAli ...... yuyirseeRi

anumanodu kavikUda vArAka neerAzhi
     yadaiseythaNai thanilERi mApAvi yUrmEvi
          avuNarkiLai kedanURi yAlAla mAkOpa ...... niruthEsan

aruNamaNi thikazhpAra veerAka rAmOli
     yorupathumor kaNaiveezha vEmOthu pOrALi
          adalmaruka kumarEsa mElAya vAnOrkaL ...... perumALE.

......... Meaning .........

kunaki oru mayil pOla vArA manO leelai viLaiya vinai ninaiyAmalE Eki meeLAtha kodiya manatha aniyAya mA pAtha kApOthi ena: They come on like a unique peacock, flirting all the way; they provoke passionate thoughts; little realising the consequences (of those thoughts), I have been pursuing a treacherous path without ever retracing my steps; much later, my mind is filled with so much of evil thoughts that I am called a blind man treading immoral and horrible path;

Asaik koLuva athil mayalAki veeROdu pOy neeLa malar amaLi thanil ERi AmARu pOmARu kulavi nala mozhi kURi vAr ERu pUNAra mulai mUzhki: Lust for the three malicious desires (namely, earth, gold and woman) burns in full swing; I remain indulged in that delusory lust, walking egoistically; climbing the flowery cots (of the whores) for a long time, I have been destroying all virtuous pursuits that could have stabilised me, indulging in sweet cooing words (with those whores) and drowning myself in their bosom covered by tight blouse and strands of pearls;

manam uruka matha rAja kOl Adu mA pUsal viLaiya vizhi suzhalAdi mEl Othi pOy meeLa mathivathanam oLi veesa neerALamAy mEvi anurAaka: with a melting heart, I witnessed the warfare initiated by the flowery arrows wielded by Manmathan (God of Love); with rolling eyes that climb all the way up to their hairline and fall back into position, with moon-like face radiating light and with profuse perspiration, these women exhibit excessive romance;

vakai vakaiyil athi mOka vArAzhi UdAnaporuL aLavu athu aLavAka yArOdu(m) mAl Ana vanithaiyarkaL vasamAya nAyEnum eedERa aruLvAyE: from the vast sea of passion, they grab a variety of gifts (doled out to them by their suitors), and they dispense their passionate feats in measures proportionate to the amount given by their suitors, irrespective of who they are; I, the lowly dog, have become completely subdued by such whores; kindly redeem me from them by showering Your grace!

enathu mozhi vazhuvAmal nee Eku kAn meethil ena viraku kulaiyAtha mAthAvu(m) nEr Otha isaiyum mozhi thavaRAmalE Eki mA mAthu(m) iLaiyOnum inimaiyodu: As the treacherous mother, KaikEyi, asked Him to leave for the forest in accordance with her command, He implicitly obeyed, accompanied willingly by Seetha, His consort looking like Goddess Lakshmi, and His brother Lakshmanan;

varu mAya mAreesa mAn Avi kulaiya varu kara thUshaNA veerar pOr mALa iRuki nedu maram Ezhu thULAkavE vAli uyir seeRi: the illusory golden deer, MArichan, came to the jungle and was killed; the armies of the demons, Karan and ThooshaNan, who came to fight were also destroyed; the seven strong trees, marAmaram, were pierced by the arrow of RAmA; the monkey-king, VAli, was killed;

anumanodu kavi kUda vArAka(m) neer Azhi adai seythu aNai thanil ERi mA pAvi Ur mEvi avuNar kiLai keda nURi: the monkeys accompanying HanumAn joined together in building a bridge across the sea through which the armies went across to the land of LankA ruled by the treacherous King RAvaNan; the entire clan of the demons was destroyed and shattered to pieces;

AlAla(m) mA kOpa niruthEsan aruNa maNi thikazh pAra veerAkarA mOli oru pathum or kaNai veezhavE mOthu pOrALi adal maruka: when the leader of the demons, namely, RAvaNan, confronted with immense rage like the evil poison AlakAlam, his ten weighty crowns, studded with precious reddish gems, were knocked down by a single arrow wielded by the warrior RAmA (Lord VishNu); and You are His valorous Nephew, Oh Lord!

kumarEsa mElAya vAnOrkaL perumALE.: Oh Lord KumarA, You are the Lord of the famous celestials, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1153 kunagiyoru mayil - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]