(இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு எனது முக்கியக் குறிப்பைப் படியுங்கள் - நன்றி).
(Please read my important note before using this website - Thank You).
திருப்புகழ் 1109 கட்டம் உறு நோய்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1109 kattamuRunOi  (common)
Thiruppugazh - 1109 kattamuRunOi - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
PDF அமைப்பு
in PDF

mp3 image
YouTube
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்ததன தானான தத்ததன தானான
     தத்ததன தானான ...... தனதான

......... பாடல் .........

கட்டமுறு நோய்தீமை யிட்டகுடில் மாமாய
     கட்டுவிடு மோர்கால ...... மளவாவே

கத்தவுற வோர்பாலர் தத்தைசெறி வார்வாழ்வு
     கற்புநெறி தான்மாய ...... வுயர்காலன்

இட்டவொரு தூதாளு முட்டவினை யால்மூடி
     யிட்டவிதி யேயாவி ...... யிழவாமுன்

எத்தியுனை நாடோறு முத்தமிழி னாலோத
     இட்டமினி தோடார ...... நினைவாயே

துட்டரென ஏழ்பாரு முட்டவினை யாள்சூரர்
     தொக்கில்நெடு மாமார்பு ...... தொளையாகத்

தொட்டவடி வேல்வீர நட்டமிடு வார்பால
     சுத்ததமி ழார்ஞான ...... முருகோனே

மட்டுமரை நால்வேத னிட்டமலர் போல்மேவ
     மத்தமயில் மீதேறி ...... வருநாளை

வைத்தநிதி போல்நாடி நித்தமடி யார்வாழ
     வைத்தபடி மாறாத ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கட்டம் உறு நோய் தீமை இட்ட குடில் மா மாய கட்டுவிடும்
ஓர் காலம் அளவாவே
... துன்பத்தைத் தருகின்ற வியாதிகளும், பிற
கேடுகளும் அமைந்துள்ள குடிசையாகிய இந்த உடல் உலக மாயையின்
பந்தத்தை விடுகின்ற, உயிர் போகும் சமயத்தைத் தெரிந்துகொண்டு,

கத்த உறவோர் பாலர் தத்தை செறிவார் வாழ்வு கற்பு நெறி
தான் மாய
... சுற்றத்தாரும் குழந்தைகளும் கதறி அழ, ஆபத்து நிறைந்த
நீண்ட வாழ்க்கையும், கற்பு நெறி ஒழுக்கத்துடன் சென்ற வழியும்
அழியும்படியாக

உயர் காலன் இட்ட ஒரு தூதாளும் முட்ட ... பெரிய யமன்
அனுப்பின ஒப்பற்ற தூதுவர்களும் தாக்க,

வினையால் மூடி இட்ட விதியே ஆவி இழவா முன் ...
வினைகளால் மூடப்பட்டு விதியின்படியே உயிரை இழப்பதன் முன்பாக,

எத்தி உனை நாடோறும் முத்தமிழினால் ஓத இட்டம்
இனிதோடு ஆர நினைவாயே
... உன்னைப் போற்றி தினமும் இயல்,
இசை, நாடகம் என்ற மூவகைப்பட்டத் தமிழால் நான் துதிக்க,
விருப்பமுடனும் மகிழ்ச்சியுடனும் நன்றாக நீ நினைந்தருள்வாயாக.

துட்டர் என ஏழ் பாரும் முட்ட வினையாள் சூரர் ...
பொல்லாதவர்கள் என்று ஏழு உலகங்களில் உள்ளவர்களும் வேதனை
உற்றுக் கூறும்படி தங்கள் கொடுந்தொழிலை நடத்திய சூரர்கள்

தொக்கில் நெடு மா மார்பு தொளையாக தொட்ட வடிவேல்
வீர
... தோல் கொண்ட, அகன்ற மார்பில் தொளை படும்படிச் செலுத்திய
கூர்மையான வேல் வீரனே,

நட்டம் இடுவார் பால சுத்த தமிழ் ஆர் ஞான முருகோனே ...
ஊழிக்கூத்து செய்யும் சிவபெருமானுடைய பாலனே, பிழையற்ற தமிழை
நன்கு அறிந்த ஞானமுள்ள முருகனே,

மட்டு மரை நால் வேதன் இட்ட மலர் போல் மேவ ... நறு
மணம் கொண்ட தாமரையில் வீற்றிருக்கும் நான்கு வேதங்களை ஓதும்
பிரமனுக்கு விருப்பமான தாமரை மலர் போல, பத்மாசனத்தில்
அமையும்படி

மத்த மயில் மீது ஏறி வரு நாளை ... செறுக்குற்ற மயிலின் மேல்
நீ ஏறி வரும் நாளில்,

வைத்த நிதி போல் நாடி நித்தம் அடியார் வாழ வைத்த படி
மாறாத பெருமாளே.
... சேமித்து வைக்கப்பட்ட பொருள் போல்
நாள்தோறும் அடியார்களை வாழ வைத்த கருணைத்திறம் நீங்காத
பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.252  pg 3.253  pg 3.254  pg 3.255 
 WIKI_urai Song number: 1112 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)



Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil



Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


YouTube  'YouTube' Links for this song  
  இப்பாடலுக்கான யூ ட்யூப் பதிவுகள்  

to come வரவிருக்கின்றது

 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 


 top 

Song 1109 - kattam uRu nOi (common)

kattamuRu nOytheemai yittakudil mAmAya
     kattuvidu mOrkAla ...... maLavAvE

kaththavuRa vOrpAlar thaththaiseRi vArvAzhvu
     kaRpuneRi thAnmAya ...... vuyarkAlan

ittavoru thUthALu muttavinai yAlmUdi
     yittavithi yEyAvi ...... yizhavAmun

eththiyunai nAdORu muththamizhi nAlOtha
     ittamini thOdAra ...... ninaivAyE

thuttarena EzhpAru muttavinai yALcUrar
     thokkilnedu mAmArpu ...... thoLaiyAkath

thottavadi vElveera nattamidu vArbAla
     suththathami zhArnjAna ...... murukOnE

mattumarai nAlvEtha nittamalar pOlmEva
     maththamayil meethERi ...... varunALai

vaiththanithi pOlnAdi niththamadi yArvAzha
     vaiththapadi mARAtha ...... perumALE.

......... Meaning .........

kattam uRu nOy theemai itta kudil mA mAya kattuvidum Or kAlam aLavAvE: This body is just a cottage full of miserable diseases and other adversities; knowing the exact moment of severance of the body from attachments arising from worldly delusion, namely, the time of life's departure,

kaththa uRavOr pAlar thaththai seRivAr vAzhvu kaRpu neRi thAn mAya: the relatives and children break into crying; the long life filled with perils and the righteous disciplined path hitherto followed are about to be extinguished;

uyar kAlan itta oru thUthALum mutta: the unique messengers sent by the great God of Death (Yaman) have begun to attack;

vinaiyAl mUdi itta vithiyE Avi izhavA mun: life, submerged under the past deeds, and propelled by fate, is about to expire; before that happens,

eththi unai nAdORum muththamizhinAl Otha ittam inithOdu Ara ninaivAyE: please consider whole-heartedly to bless me, willingly and happily, so that I could praise Your glory everyday in the three aspects, namely literature, music and drama, of the great Tamil language!

thuttar ena Ezh pArum mutta vinaiyAL cUrar: The people in the seven worlds painfully declared that these demons, resorting to treacherous acts, were evil;

thokkil nedu mA mArpu thoLaiyAka thotta vadivEl veera: penetrating the skin under the broad chests of those demons, You wielded the sharp spear, Oh valorous Lord!

nattam iduvAr pAla suththa thamizh Ar njAna murukOnE: You are the son of Lord SivA performing the Cosmic Dance! Your knowledge based on flawless Tamil language is impeccable, Oh MurugA!

mattu marai nAl vEthan itta malar pOl mEva: On a lotus-like seat, similar to the fragrant lotus on which BrahmA, chanting the four VEdAs, is seated with relish,

maththa mayil meethu ERi varu nALai: You are mounted on the proud peacock; while You are so seated,

vaiththa nithi pOl nAdi niththam adiyAr vAzha: Your devotees come to You daily as if they seek to visit their cherished treasure that is saved; protecting those devotees,

vaiththa padi mARAtha perumALE.: You show Your unwavering compassion to them, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை 
in PDF venue list alphabetical numerical 
mp3 audio   YouTube

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1109 kattam uRu nOi - common


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  




Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in https://kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top