திருப்புகழ் 1077 முழு மதி அனைய  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1077 muzhumadhianaiya  (common)
Thiruppugazh - 1077 muzhumadhianaiya - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தனன தனதன தனன
     தனதன தனன ...... தந்ததான

......... பாடல் .........

முழுமதி யனைய முகமிரு குழையில்
     முனிவிழி முனைகள் ...... கொண்டுமூவா

முதலறி வதனை வளைபவர் கலவி
     முழுகிய வினையை ...... மொண்டுநாயேன்

வழிவழி யடிமை யெனுமறி வகல
     மனமுறு துயர்கள் ...... வெந்துவாட

மதிதரு மதிக கதிபெறு மடிகள்
     மகிழ்வொடு புகழு ...... மன்புதாராய்

எழுதிட அரிய எழில்மற மகளின்
     இருதன கிரிகள் ...... தங்குமார்பா

எதிர்பொரு மசுரர் பொடிபட முடுகி
     இமையவர் சிறையை ...... யன்றுமீள்வாய்

அழகிய குமர எழுதல மகிழ
     அறுவர்கள் முலையை ...... யுண்டவாழ்வே

அமருல கிறைவ உமைதரு புதல்வ
     அரியர பிரமர் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

முழு மதி அனைய முகம் இரு குழையில் முனி விழி முனைகள்
கொண்டு
... பூரண சந்திரன் போன்ற முகம் கொண்டும், இரண்டு
குண்டலங்களையும் கோபிப்பது போல் தாக்கும் கண்களின்
முனைகளைக் கொண்டும்,

மூவாமுதல் அறிவு அதனை வளைபவர் கலவி முழுகிய
வினையை மொண்டு நாயேன்
... முதிர்ச்சி அடையாத ஆரம்ப
அறிவையே கொண்டவர்களை தம்வசப் படுத்தும் வேசையர்களுடன்
புணர்ச்சி இன்பத்தில் முழுகும் வினையை அனுபவிக்கும் நாயை ஒத்த
எனக்கு,

வழி வழி அடிமை எனும் அறிவு அகல மனம் உறு துயர்கள்
வெந்து வாட
... வழி வழியாக (அம் மகளிருக்கு) அடிமை நான் என்னும்
அறிவு நீங்கவும், மனத்தில் உள்ள துயரங்கள் யாவும் வெந்து ஒடுங்கவும்,

மதி தரும் அதிக கதி பெறும் அடிகள் மகிழ்வோடு புகழும்
அன்பு தாராய்
... நல்லறிவைத் தருவதும், நிரம்பப் புகலிடமான
தன்மையைப் பெற்றுள்ளதுமான அன்பைத் தந்தருளுக.

எழுதிட அரிய எழில் மற மகளின் இரு தன கிரிகள் தங்கும்
மார்பா
... எழுதுவதற்கு அருமையான அழகைக் கொண்ட வேடர்
பெண்ணாகிய வள்ளியின் இரண்டு மலை போன்ற மார்பும் தழுவுகின்ற
திருமார்பனே,

எதிர் பொரும் அசுரர் பொடிபட முடுகி இமையவர் சிறையை
அன்று மீள்வாய்
... எதிரே நின்று சண்டை செய்த அசுரர்கள்
பொடியாகும்படி, முன் சென்று எதிர்த்து, தேவர்களின் சிறையை அன்று
நீக்கி அருளினாய்.

அழகிய குமர எழு தலம் மகிழ அறுவர்கள் முலையை உண்ட
வாழ்வே
... அழகு வாய்ந்த குமரனே, ஏழு உலகங்களும் மகிழ்ச்சி
கொள்ள ஆறு கார்த்திகைப் பெண்களின் முலைப் பாலைப் பருகிய
செல்வமே,

அமர் உலகு இறைவ உமை தரு புதல்வ அரி அர பிரமர்
தம்பிரானே.
... தேவலோகத்துக்குத் தலைவனே, உமாதேவி பெற்ற
மகனே, திருமால், சிவன், பிரமன் ஆகிய மூவர்க்கும் தம்பிரானே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.188  pg 3.189  pg 3.190  pg 3.191 
 WIKI_urai Song number: 1080 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1077 - muzhu madhi anaiya (common)

muzhumathi yanaiya mukamiru kuzhaiyil
     munivizhi munaikaL ...... koNdumUvA

muthalaRi vathanai vaLaipavar kalavi
     muzhukiya vinaiyai ...... moNdunAyEn

vazhivazhi yadimai yenumaRi vakala
     manamuRu thuyarkaL ...... venthuvAda

mathitharu mathika kathipeRu madikaL
     makizhvodu pukazhu ...... manputhArAy

ezhuthida ariya ezhilmaRa makaLin
     iruthana kirikaL ...... thangumArpA

ethirporu masurar podipada muduki
     imaiyavar siRaiyai ...... yanRumeeLvAy

azhakiya kumara ezhuthala makizha
     aRuvarkaL mulaiyai ...... yuNdavAzhvE

amarula kiRaiva umaitharu puthalva
     ariyara piramar ...... thambirAnE.

......... Meaning .........

muzhu mathi anaiya mukam iru kuzhaiyil muni vizhi munaikaL koNdu: With a face looking like the full moon and with the sharp corners of the eyes that angrily collide with their two swinging ear-studs,

mUvAmuthal aRivu athanai vaLaipavar kalavi muzhukiya vinaiyai moNdu nAyEn: these whores captivate immature laymen of little intelligence I, the lowly dog, have been indulging in carnal pleasure with them and experiencing a sinking feeling;

vazhi vazhi adimai enum aRivu akala manam uRu thuyarkaL venthu vAda: to dispel the thought that I am a bonded slave to them for generation after generation and to scorch all the miseries wrapped up in my heart,

mathi tharum athika kathi peRum adikaL makizhvOdu pukazhum anpu thArAy: kindly grant me the fulfilling refuge of Your love that imparts True Knowledge to me!

ezhuthida ariya ezhil maRa makaLin iru thana kirikaL thangum mArpA: Her beauty is beyond description; she is the daughter of the hunters; You hug the mountain-like bosom of that VaLLi with Your hallowed chest, Oh Lord!

ethir porum asurar podipada muduki imaiyavar siRaiyai anRu meeLvAy: Smashing the demons to pieces, who fought with You in a confronting manner, You graciously freed the celestials from their prison, Oh Lord!

azhakiya kumara ezhu thalam makizha aRuvarkaL mulaiyai uNda vAzhvE: Oh Handsome KumarA! Elating the people in the seven worlds, You as a child imbibed milk from the breasts of six KArththigai mothers, Oh Treasure!

amar ulaku iRaiva umai tharu puthalva ari ara piramar thambirAnE.: You are the Leader of the celestial land! You are the son of UmAdEvi! You are the Lord of the Trinity, namely, VishNu, SivA and BrahmA, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1077 muzhu madhi anaiya - common


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]