திருப்புகழ் 1061 முதலி யாக்கை  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1061 mudhaliyAkkai  (common)
Thiruppugazh - 1061 mudhaliyAkkai - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தாத்தன தனன தாத்தன
     தானா தானா தானா தானா ...... தனதான

......... பாடல் .........

முதலி யாக்கையு மிளமை நீத்தற
     மூவா தாரா காவா தாரா ...... எனஞாலம்

முறையி டாப்படு பறைக ளார்த்தெழ
     மூடா வீடூ டேகேள் கோகோ ...... எனநோவ

மதலை கூப்பிட மனைவி கூப்பிட
     மாதா மோதா வீழா வாழ்வே ...... யெனமாய

மறலி யூர்ப்புகு மரண யாத்திரை
     வாரா வானாள் போநாம் நீமீ ...... ளெனவேணும்

புதல றாப்புன எயினர் கூக்குரல்
     போகா நாடார் பாரா வாரா ...... ரசுரோடப்

பொருது தாக்கிய வயப ராக்ரம
     பூபா லாநீ பாபா லாதா ...... தையுமோதுங்

குதலை வாய்க்குரு பரச டாக்ஷர
     கோடா ரூபா ரூபா பாரீ ...... சதவேள்விக்

குலிச பார்த்திப னுலகு காத்தருள்
     கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

முதலி யாக்கையும் இளமை நீத்து அற மூவா தாராகா
ஆதாரா என ஞாலம் முறை இடா
... (வாழ்க்கைக்கு) முதன்மையை
உடைய ஆதாரமாய் இருக்கும் உடலும், அதன் இளமையையும் ஒழித்து,
மிகவும் முதுமை அடைந்து, (எங்களைக்) காத்துப் பற்றுக் கோடாக
இருந்தவனே என்று பூமியில் உள்ளோர் முறையிட்டு ஏங்க,

படு பறைகள் ஆர்த்து எழ மூடா வீடு ஊடே கேள் கோ கோ
என நோவ
... ஒலிக்கின்ற பறை வாத்தியங்கள் மிக உரக்கச் சப்தம்
செய்ய, (பிணத்தைத் துணியால்) மூடி, வீட்டுக்குள் சுற்றத்தினர்
கோகோவென்று கூச்சலிட்டு மனம் வருந்த,

மதலை கூப்பிட மனைவி கூப்பிட மாதா மோதா வீழா
வாழ்வே என
... பிள்ளைகள் அழ, மனைவி அழ, தாய் (தலையில்)
மோதியும் விழுந்தும், என் செல்வமே என்று அலற,

மாய மறலி ஊர்ப் புகு மரண யாத்திரை வாரா வான் ஆள்
போ(ம்) நாம் நீ மீள் என வேணும்
... மாயமாக வந்த யமனுடைய
பட்டணத்துக்குப் புகும் சாவு என்னும் பயணம் உனக்கு வராது,
வானுலகை ஆள நாம் போவோம், நீ என்னுடன் வா, என்று கூறி
என்னை அழைத்துச் செல்ல நீ வர வேண்டும்.

புதல் அறாப் புன எயினர் கூக்குரல் போகா நாடார் பாரா
வார ஆர் அசு(ர)ர் ஓடப் பொருது தாக்கிய வய(ம்) பராக்ரம
...
நாணல் புதர்கள் நீங்காத மலைச் சாரலில் உள்ள கொல்லைகளில்
இருக்கும் மறவர்கள் கூச்சலிடும் குரல் நீங்காத பகுதியில்
உள்ளவர்களாகிய வேடர்களும், கடல் போலப் பெருகி நிரம்ப வந்த
அசுரர்களும் பயந்து ஓட, அவர்களுடன் சண்டை செய்து தாக்கி
எதிர்த்த வெற்றி வீரனே,

பூபாலா நீபா பாலா தாதையும் ஓதும் குதலை வாய்க் குரு
பர
... பூமியைக் காப்போனே, கடப்ப மாலையை அணிந்த குழந்தையே,
தந்தை சிவபெருமானும் கற்கும்படி மழலைச் சொற்கள் நிறைந்த
திருவாயை உடைய குருபரனே,

சடாக்ஷர கோடு ஆர் ரூபா அரூபா பார் ஈ ... (சரவணபவ
என்னும்) ஆறெழுத்துக்கு உரியவனே, நேர்மை கொண்ட நெறி தவறாத
வடிவத்தனே, வடிவு இல்லாதவனே, உலகை ஈந்தவனே,

சத வேள்விக் குலிச பார்த்திபன் உலகு காத்து அருள்
கோவே
... நூறு அசுவமேத யாகங்களை முடித்தவனும், வஜ்ராயுதம்
ஏந்தியவனுமாகிய அரசன் இந்திரனுடைய பொன்னுலகைக்
காத்தருளிய தலைவனே,

தேவே வேளே வானோர் பெருமாளே. ... தேவனே,
முருக வேளே, தேவர்களின் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.162  pg 3.163  pg 3.164  pg 3.165 
 WIKI_urai Song number: 1064 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 1061 - mudhali yAkkai (common)

muthali yAkkaiyu miLamai neeththaRa
     mUvA thArA kAvA thArA ...... enanjAlam

muRaiyi dAppadu paRaika LArththezha
     mUdA veedU dEkEL kOkO ...... enanOva

mathalai kUppida manaivi kUppida
     mAthA mOthA veezhA vAzhvE ...... yenamAya

maRali yUrppuku maraNa yAththirai
     vArA vAnAL pOnAm neemee ...... LenavENum

puthala RAppuna eyinar kUkkural
     pOkA nAdAr pArA vArA ...... rasurOdap

poruthu thAkkiya vayapa rAkrama
     pUpA lAnee pApA lAthA ...... thaiyumOthum

kuthalai vAykkuru parasa dAkshara
     kOdA rUpA rUpA pAree ...... sathavELvik

kulisa pArththipa nulaku kAththaruL
     kOvE thEvE vELE vAnOr ...... perumALE.

......... Meaning .........

muthali yAkkaiyum iLamai neeththu aRa mUvA thArAkA AthArA ena njAlam muRai idA: As the body that serves as the primary support for life and its youthfulness decay when ripe old age is reached, people of this world cry out (one day) saying "Oh anchor-like man, You were our rescuer!"

padu paRaikaL Arththu ezha mUdA veedu UdE kEL kO kO ena nOva: The funeral drums are beaten with a loud noise; the face of the corpse is covered with a piece of cloth, and the relatives assembled in the house cry their hearts out;

mathalai kUppida manaivi kUppida mAthA mOthA veezhA vAzhvE ena: the children scream aloud, the wife weeps and the mother bangs her head, falling all over, crying "Oh my treasure!"

mAya maRali Urp puku maraNa yAththirai vArA vAn AL pO(m) nAm nee meeL ena vENum: at that time, You must assure me that the journey of death to the town of the mystical Yaman, God of Death, would never happen to me and take me along with You stating "Come with me to rule the heaven!"

puthal aRAp puna eyinar kUkkural pOkA nAdAr pArA vAra Ar asu(ra)r Odap poruthu thAkkiya vaya(m) parAkrama: The hunters living in the valley of the mountain, where bushes of reeds had not become extinct and where the noise of the screaming tribals had not died out, fled in scare, along with the demons who came confronting in a large number like a sea, when You aggressively battled with them, Oh Victorious and valorous One!

pUpAlA neepA pAlA thAthaiyum Othum kuthalai vAyk kuru para: Oh Protector of the earth, You are the child that wears the garland of kadappa flowers! From Your hallowed mouth emanated the prattling words that taught Your Father, Lord SivA, Oh Great Master!

sadAkshara kOdu Ar rUpA arUpA pAr ee: Your name has six sacred letters (SaravaNabava); You possess an upright form that never deviates from the virtuous path; You are also formless; and You delivered this Earth, Oh Lord!

satha vELvik kulisa pArththipan ulaku kAththu aruL kOvE: You are the protector of the celestial land belonging to IndrA, who has performed a hundred penances involving the horse (aswamEthayAgam) and who holds the vajra (mace) as a weapon in his hand, Oh Leader!

thEvE vELE vAnOr perumALE.: Oh Lord MurugA! You are the Lord of the celestials, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1061 mudhali yAkkai - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]