திருப்புகழ் 1049 சுருதி ஊடு கேளாது  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1049 surudhiUdukELAdhu  (common)
Thiruppugazh - 1049 surudhiUdukELAdhu - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

......... பாடல் .........

சுருதி யூடு கேளாது சரியை யாளர் காணாது
     துரிய மீது சாராது ...... எவராலுந்

தொடரொ ணாது மாமாயை யிடைபு காது ஆனாத
     சுகம கோத தீயாகி ...... யொழியாது

பருதி காயில் வாடாது வடவை மூளில் வேகாது
     பவனம் வீசில் வீழாது ...... சலியாது

பரவை சூழி லாழாது படைகள் மோதில் மாயாது
     பரம ஞான வீடேது ...... புகல்வாயே

நிருதர் பூமி பாழாக மகர பூமி தீமூள
     நிபிட தாரு காபூமி ...... குடியேற

நிகர பார நீகார சிகர மீது வேலேவு
     நிருப வேத ஆசாரி ...... யனுமாலும்

கருது மாக மாசாரி கனக கார்மு காசாரி
     ககன சாரி பூசாரி ...... வெகுசாரி

கயிலை நாட காசாரி சகல சாரி வாழ்வான
     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சுருதி ஊடு கேளாது சரியையாளர் காணாது ... வேத மொழிக்குள்
கேட்கப்படாததும், சரியை* மார்க்கத்தில் உள்ளவர்களால்
காணப்படாததும்,

துரிய மீது சாராது எவராலும் தொடர ஒணாது ... யோகியர்
தன்மயமாய் நிற்கும் யோக* நிலையிலும் கூட அருகே நெருங்க
முடியாததும், யாராலும் தொடர்ந்து அணுக முடியாததும்,

மா மாயை இடை புகாது ஆனாத சுக மகா உததீ ஆகி
ஒழியாது
... பெரிய மாயைகள் கூட தன்னுள்ளே புக முடியாததும்,
அழிவில்லாத ஆனந்தப் பெருங் கடலாய் என்றும் அழியாதிருப்பதும்,

பருதி காயில் வாடாது வடவை மூளில் வேகாது ... சூரியன்
காய்ந்து எரித்தாலும் அழியாததும், வடவா முகாக்கினி (ஊழித் தீ)
மூண்டாலும் வெந்து போகாததும்,

பவனம் வீசில் வீழாது சலியாது பரவை சூழில் ஆழாது ...
காற்று வேகமாக வீசினாலும் அதனால் தள்ளுண்டு வீழாததும், சோர்ந்து
அசைவற்றுப் போகாததும், கடல் நீர் சூழினும் அமிழ்ந்து போகாததும்,

படைகள் மோதில் மாயாது பரம ஞான வீடு ஏது
புகல்வாயே
... எவ்விதமான படைகள் வந்து மோதினாலும் அழிவு
படாததும் - இத்தனை தன்மைகளும் உள்ள மேலான ஞான வீடு எது
என்று சொல்லியருள்க.

நிருதர் பூமி பாழாக மகர பூமி தீ மூள ... அசுரர்களின்
இருப்பிடங்கள் பாழாகவும், மகரம் முதலிய மீன்கள் வாழும் கடல்
தீப்பற்றவும்,

நிபிட தாரு கா பூமி குடி ஏற ... நெருக்கமான கற்பகச் சோலைகள்
உள்ள பொன்னுலகத்தில் தேவர்கள் குடி புகவும்,

நிகர பார நீகாரம் சிகர மீது வேல் ஏவு நிருப ... குவிந்து
கிடப்பதும், மிக்க கனமுள்ளதும், பனி மூடியதுமான கிரெளஞ்ச
மலையின்மீது வேலைச் செலுத்திய அரசே,

வேத ஆசாரியனும் மாலும் கருதும் ஆகம ஆசாரி ... வேத
ஆசாரியனான பிரமனும், வேத முதல்வனான திருமாலும் தியானிக்கின்ற
சிவாகமங்களைத் தந்த குரு மூர்த்தி,

கனக கார் முக ஆசாரி ... பொன் மலையான மேருவாகிய வில்லை
ஏந்திய பெருமான்,

ககன சாரி பூசாரி வெகு சாரி ... ஞானாகாசத்தில் உலவுகின்றவர்,
பூதலங்கள்தோறும் வீற்றிருப்பவர், பல விதமான நடையை உடையவர்,

கயிலை நாடகாசாரி சகல சாரி வாழ்வான ... கயிலையில் பல
நடனங்களை ஆடவல்ல தலைவர், எல்லாவற்றிலும் வசிப்பவர் ஆகிய
சிவபெருமானது செல்வமான

கருணை மேருவே தேவர் பெருமாளே. ... கருணைப் பெரு
மலையே, தேவர்கள் பெருமாளே.


* நான்கு பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:

1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம்
வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு
பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.

2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல்.
இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.

3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு
ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி,
முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.

4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு
ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'.

. . . சிவஞான சித்தியார் சூத்திரம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.138  pg 3.139  pg 3.140  pg 3.141 
 WIKI_urai Song number: 1052 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1049 - surudhi Udu kELAdhu (common)

suruthi yUdu kELAthu sariyai yALar kANAthu
     thuriya meethu sArAthu ...... evarAlum

thodaro NAthu mAmAyai yidaipu kAthu AnAtha
     sukama kOtha theeyAki ...... yozhiyAthu

paruthi kAyil vAdAthu vadavai mULil vEkAthu
     pavanam veesil veezhAthu ...... saliyAthu

paravai chUzhi lAzhAthu padaikaL mOthil mAyAthu
     parama njAna veedEthu ...... pukalvAyE

niruthar pUmi pAzhAka makara pUmi theemULa
     nipida thAru kApUmi ...... kudiyERa

nikara pAra neekAra sikara meethu vElEvu
     nirupa vEtha AcAri ...... yanumAlum

karuthu mAka mAcAri kanaka kArmu kAcAri
     kakana cAri pUcAri ...... vekucAri

kayilai nAda kAcAri sakala cAri vAzhvAna
     karuNai mEru vEthEvar ...... perumALE.

......... Meaning .........

suruthi Udu kELAthu sariyaiyALar kANAthu: It is not heard anywhere in the scriptures; It is not seen by anyone practicing the traditional worship method (sariyai)* offering services to temples;

thuriya meethu sArAthu evarAlum thodara oNAthu: It is not accessible to the YOgis* who have reached the transcendantal state (thuriya); It cannot be pursued nor attained by anyone;

mA mAyai idai pukAthu AnAtha suka makA uthathee Aki ozhiyAthu: It cannot be penetrated even by powerful delusory powers; It is the inexhaustible sea of bliss that is immortal;

paruthi kAyil vAdAthu vadavai mULil vEkAthu: It cannot be burnt away even by the scorching sun; It cannot be singed (scorched) even by vadamukAgni, the fiery northerly inferno coming on the dooms day;

pavanam veesil veezhAthu saliyAthu paravai chUzhil AzhAthu: It can neither be pushed down even by the most turbulent storm nor can it be made inert and motionless; It cannot be drowned even if surrounded by the water of the sea;

padaikaL mOthil mAyAthu parama njAna veedu Ethu pukalvAyE: and It cannot be destroyed even when attacked by countless armies; - Will You kindly enlighten me as to what It is that has all these qualities and which is the paramount seat of true knowledge?

niruthar pUmi pAzhAka makara pUmi thee mULa: The abodes of the demons were all destroyed; the seas inhabited by the sharks and other fish caught fire;

nipida thAru kA pUmi kudi ERa: the celestials were resettled in their golden land where clusters of kaRpaga tree abound;

nikara pAra neekAram sikara meethu vEl Evu nirupa: as You wielded the spear on the snow-clad Mount Krouncha, which has numerous hefty peaks, Oh Lord!

vEtha AsAriyanum mAlum karuthum Akama AsAri: He is the grand master who delivered the manuals for the scriptures that are meditated upon by BrahmA, who has a mastery over VEdAs, and by VishNu, who is the primordial Lord worshipped by the vEdAs;

kanaka kAr muka AsAri: He is the Lord who arched the golden Mount MEru into a bow;

kakana sAri pUsAri veku sAri: He strolls along the sky of Knowledge; He resides in all the worlds; He has several unique gaits;

kayilai nAdakAsAri sakala sAri vAzhvAna: He is the Dance Master capable of performing myriad dances in Mount KailAsh; He is the Omnipresent Lord SivA; and You are His Treasure!

karuNai mEruvE thEvar perumALE.: Your compassion is huge like the Mount MEru! You are the Lord of the celestials, Oh Great One!


* The four methods of worship are:

1.  sariyai:  Worship through service in temples such as doing penance, washing the floor, lighting the lamps, maintaining the flower garden, plucking the flowers for offering, making of garlands, singing of hymns, decorating the deities etc. This is known as 'dhAdha mArgam - sAlOkam'.

2.  kiriyai:  Worship, both inwardly and externally, of a God with a form through daily offerings (pUjA) and with several pUjA materials. This is called 'puthra mArgam - sameepam'.

3.  yOgam:  Inward worship only of a formless God by control of senses, holding the oxygen in the inhaled air and letting it through the six centres of 'kuNdalini chakrA' after understanding each state fully, experiencing the flow of nectar in the 'Lunar zone' between the eyebrows and letting it seep throughout the body and meditating on the full effulgence. This is 'sakha mArgam - sArUbam'.

4.  gnAnam:  Ceasing all external and internal activities, this method consists of worshipping through the medium of intellect alone, seeking the True Knowledge. This is 'san mArgam - sAyujyam'.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1049 surudhi Udu kELAdhu - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]