திருப்புகழ் 1047 இரதமான வாய் ஊறல்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1047 iradhamAnavAyURal  (common)
Thiruppugazh - 1047 iradhamAnavAyURal - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தான தானான தனன தான தானான
     தனன தான தானான ...... தனதான

......... பாடல் .........

இரத மான வாயூறல் பருகி டாவி டாய்போக
     இனிய போக வாராழி ...... யதில்மூழ்கி

இதயம் வேறு போகாம லுருகி யேக மாய்நாளு
     மினிய மாதர் தோள்கூடி ...... விளையாடுஞ்

சரச மோக மாவேத சரியை யோக்ரி யாஞான
     சமுக மோத ராபூத ...... முதலான

சகள மோச டாதார முகுள மோநி ராதார
     தரணி யோநி ராகார ...... வடிவேயோ

பரத நீல மாயூர வரத நாக கேயூர
     பரம யோகி மாதேசி ...... மிகுஞான

பரமர் தேசி காவேட பதிவ்ரு தாசு சீபாத
     பதும சேக ராவேலை ...... மறவாத

கரத லாவி சாகாச கலக லாத ராபோத
     கமுக மூஷி காரூட ...... மததாரைக்

கடவுள் தாதை சூழ்போதில் உலக மேழு சூழ்போது
     கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

இரதமான வாய் ஊறல் பருகிடா விடாய் போக இனிய போக
வார் ஆழி அதில் மூழ்கி
... சுவை மிகுந்த வாய் இதழ் ஊறலைப் பருகி
காம தாகம் நீங்கி, இனிமை தரும் சிற்றின்பப் பெருங்கடலில் முழுகி,

இதயம் வேறு போகாமல் உருகி ஏகமாய் நாளும் இனிய
மாதர் தோள் கூடி விளையாடும் சரச மோகம்
... மனம்
வேறிடத்திற் போகாமல் (காமத்திலேயே) மனம் உருகி, ஒன்றிய
மனத்துடன் நாள் தோறும் இன்பம் தரும் விலைமாதர்களின் தோள்களைச்
சேர்ந்து விளையாடுகின்ற லீலை ஆசையானது (பின்வருவனவற்றில்
ஒன்றாகுமோ?)

மா வேத சரியை யோ(க) க்ரியா ஞான சமுகமோ தரா பூதம்
முதலான சகளமோ
... சிறந்த வேதத்தில் சொல்லப்பட்ட ாரியையோ,
கிரியையோ, யோகமோ, ஞான மார்க்கமோ*, அல்லது இந்த
மார்க்கங்களின் கூட்டமோ, மண் முதலான ஐந்து பூதங்களின் உருவத்
திருமேனி விளக்கமோ,

சடாதார முகுளமோ நிராதார தரணியோ நிராகார
வடிவேயோ
... மூலாதாரம்** முதலான ஆறு ஆதாரங்களும் அரும்பு
விட்ட தோற்றமோ, சார்பு வேண்டியில்லாத சூரிய ஒளியோ,
உருவின்மையான ஒரு அழகு தானோ? (இவை ஒன்றுக்கும் ஈடாகாது
என்ப).

பரத நீல மாயூர வரத நாக கேயூர பரம யோகி மா தேசி மிகு
ஞான பரமர் தேசிகா
... பரத நாட்டியம் ஆடவல்ல நீல மயில்
வாகனனே, வரத மூர்த்தியே, பாம்பைத் தோளணி வகையாக
அணிந்தவரும், பரம யோகியும், சிறந்த ஒளி வீசும் அழகு வாய்ந்தவரும்,
மிக்க ஞானம் நிறைந்த பரம மூர்த்தியுமான சிவபெருமானது குரு
மூர்த்தியே,

வேட பதி வ்ருதா சுசீ பாத பதும சேகரா வேலை மறவாத
கரதலா
... வேடர் குலத்தில் வளர்ந்த, கற்பு நிறைந்த, தூயவள் வள்ளியின்
திருவடித் தாமரையை முடியில் சூடுபவனே, வேலாயுதத்தை மறவாத
திருக்கரத்தை உடையவனே,

விசாகா சகல கலாதரா போதக முக மூஷிக ஆரூட மத
தாரைக் கடவுள் தாதை சூழ் போதில்
... விசாகனே, எல்லா
கலைகளிலும் வல்லவனே, யானை முகத்தை உடையவரும், மூஞ்சூறின்
மேல் ஏறி வருபவரும், நீரொழுக்குப் போல் மதநீர் ஒழுகுதல் உள்ளவரும்
ஆகிய கணபதியின் தந்தையாகிய சிவபெருமானை வலம் வந்த
நேரத்துக்குள்

உலகம் ஏழு(ம்) சூழ்போது கருணை மேருவே தேவர்
பெருமாளே.
... ஏழுலகையும் சுற்றி வந்த, மலர் போன்ற திருவடியை
உடைய, கருணைப் பெரு மலையே, தேவர்களின் பெருமாளே.


* நான்கு பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு:

1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம்
வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு
பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.

2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல்.
இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.

3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு
ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி,
முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.

4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு
ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'.

. . . சிவஞான சித்தியார் சூத்திரம்.


** ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆதாரம்

மூலாதாரம்


சுவாதிஷ்டானம்மணிபூரகம்அநாகதம்விசுத்திஆக்ஞா


பிந்து சக்கரம்
(துவாதசாந்தம்,
ஸஹஸ்ராரம்,
பிரமரந்திரம்)
இடம்

குதம்


கொப்பூழ்மேல்வயிறுஇருதயம்கண்டம்புருவத்தின் நடு


கபாலத்தின்
மேலே


பூதம்

மண்


அக்கினிநீர்காற்றுஆகாயம்மனம்


வடிவம்

4 இதழ் கமலம்
முக்கோணம்

6 இதழ் கமலம்
லிங்கபீடம்
நாற் சதுரம்

10 இதழ் கமலம்
பெட்டிப்பாம்பு
நடு வட்டம்

12 இதழ் கமலம்
முக்கோணம்
கமல வட்டம்

16 இதழ் கமலம்
ஆறு கோணம்
நடு வட்டம்

3 இதழ் கமலம்


1008
இதழ் கமலம்


அக்ஷரம்

ஓம்


ந(கரம்)ம(கரம்)சி(கரம்)வ(கரம்)ய(கரம்)


தலம்

திருவாரூர்


திருவானைக்காதிரு(வ)
அண்ணாமலை


சிதம்பரம்திருக்காளத்திகாசி
(வாரணாசி)

திருக்கயிலை
கடவுள்

விநாயகர்


பிரமன்திருமால்ருத்திரன்மகேசுரன்சதாசிவன்


சிவ . சக்தி
ஐக்கியம்  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.134  pg 3.135 
 WIKI_urai Song number: 1050 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1047 - iradhamAna vAi URal (common)

iratha mAna vAyURal paruki dAvi dAypOka
     iniya pOka vArAzhi ...... yathilmUzhki

ithayam vERu pOkAma luruki yEka mAynALu
     miniya mAthar thOLkUdi ...... viLaiyAdum

sarasa mOka mAvEtha sariyai yOkri yAnjAna
     samuka mOtha rApUtha ...... muthalAna

sakaLa mOsa dAthAra mukuLa mOni rAthAra
     tharaNi yOni rAkAra ...... vadivEyO

baratha neela mAyUra varatha nAka kEyUra
     parama yOki mAthEsi ...... mikunjAna

paramar thEsi kAvEda pathivru thAsu seepAtha
     pathuma sEka rAvElai ...... maRavAtha

karatha lAvi sAkAsa kalaka lAtha rApOtha
     kamuka mUshi kArUda ...... mathathAraik

kadavuL thAthai sUzhpOthil ulaka mEzhu sUzhpOthu
     karuNai mEru vEthEvar ...... perumALE.

......... Meaning .........

irathamAna vAy URal parukidA vidAy pOka iniya pOka vAr Azhi athil mUzhki: Having quenched the thirst of passion by imbibing the tasty nectar-like dribble from their lips, having drowned in the big and blissful sea of carnal pleasure,

ithayam vERu pOkAmal uruki EkamAy nALum iniya mAthar thOL kUdi viLaiyAdum sarasa mOkam: and concentrating only on that enjoyment without diverting the mind elsewhere, can the passionate act of hugging the shoulders of the whores every day be compared to (any of the following?)

mA vEtha sariyai yO(ka) kriyA njAna samukamO tharA pUtham muthalAna sakaLamO: individually or collectively, the four methods* of worship, namely, sariyai, kiriyai, yOgam and gnAnam, as defined in the vEdAs? the configuration of the five elements beginning with the earth?

sadAthAra mukuLamO nirAthAra tharaNiyO nirAkAra vadivEyO: the budding forms of the six kuNdalini centres beginning with mUlAthAram**? the self-generated light of the Sun? Or the formless and unique beauty? (It is equal to none of these).

baratha neela mAyUra varatha nAka kEyUra parama yOki mA thEsi miku njAna paramar thEsikA: You mount Your vehicle, the blue peacock, an expert dancer of Bharatha NAtyam! You are the Lord that bestows the boons! He wears the serpent as an ornament on His shoulder; He is a great Yogi; He has a lustrous effulgence around Him; He is the Supreme Lord in the form of true knowledge; You are the great master to that Lord SivA!

vEda pathi vruthA susee pAtha pathuma sEkarA vElai maRavAtha karathalA: She belongs to the lineage of hunters; She is chaste and unblemished; You wear the lotus feet of that VaLLi upon Your head, Oh Lord! You never fail to hold on to the spear in Your hallowed hand!

visAkA sakala kalAtharA pOthaka muka mUshika ArUda matha thAraik kadavuL thAthai sUzh pOthil: Oh VisAkA! You are proficient in all arts! Before Lord Ganapathy, with an elephant face, mounting a large rat, and with His jaws oozing saliva of a ferocious rage, finished circumambulating His father, Lord SivA,

ulakam Ezhu(m) sUzhpOthu karuNai mEruvE thEvar perumALE.: You flew around the seven worlds, Oh Lord with lotus feet! You are the Mount MEru of compassion! You are the Lord of the celestials, Oh Great One!


* The four methods of worship are:

1.  sariyai:  Worship through service in temples such as doing penance, washing the floor, lighting the lamps, maintaining the flower garden, plucking the flowers for offering, making of garlands, singing of hymns, decorating the deities etc. This is known as 'dhAdha mArgam - sAlOkam'.

2.  kiriyai:  Worship, both inwardly and externally, of a God with a form through daily offerings (pUjA) and with several pUjA materials. This is called 'puthra mArgam - sameepam'.

3.  yOgam:  Inward worship only of a formless God by control of senses, holding the oxygen in the inhaled air and letting it through the six centres of 'kuNdalini chakrA' after understanding each state fully, experiencing the flow of nectar in the 'Lunar zone' between the eyebrows and letting it seep throughout the body and meditating on the full effulgence. This is 'sakha mArgam - sArUbam'.

4.  gnAnam:  Ceasing all external and internal activities, this method consists of worshipping through the medium of intellect alone, seeking the True Knowledge. This is 'san mArgam - sAyujyam'.


** The names of the chakrA centres, the deities, the elements, the zones of the body where they are located, the shape of the chakrAs, the description of the flowers in the chakrAs, the letters of the ManthrA governing them and the temple-towns representing them are given in the following chart:

ChakrA

mUlAthAram


swAthishtAnammaNipUragamanAgathamvisudhdhiAgnyA


Bindu chakkaram
(DhwAdhasAntham,
SahasrAram,
Brahma-ranthiram)

Body Zone

Genitals


Belly-buttonUpper bellyHeartThroatBetween the
eyebrows

Over
the skullElement

Earth


FireWaterAirSkyMind


Shape

4-petal lotus
Triangle

6-petal lotus
Lingam
Square

10-petal lotus
cobra in box
central circle

12-petal lotus
Triangle
lotus circle

16-petal lotus
Hexagon
central circle

3-petal lotus


1008-petal
lotus


Letter

Om


namasivaya


Temple

ThiruvArUr


ThiruvAnaikkAThiru
aNNAmalai


ChidhambaramThirukkALaththiVaranAsi
(kAsi)

Mt. KailAshDeity

VinAyagar


BrahmAVishnuRUdhranMahEswaranSathAsivan


Siva-Sakthi
Union


தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1047 iradha mAna vAyURal - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]