திருப்புகழ் 1020 இருட் குழலை  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1020 irutkuzhalai  (common)
Thiruppugazh - 1020 irutkuzhalai - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்ததனத் தனத்ததனத்
     தனத்ததனத் தனத்ததனத்
          தனத்ததனத் தனத்ததனத் ...... தனதான

......... பாடல் .........

இருட்குழலைக் குலைத்துமுடித்
     தெழிற்கலையைத் திருத்தியுடுத்
          திணைக்கயலைப் புரட்டிவிழித் ...... ததிபார

இழைக்களபப் பொருப்பணிகச்
     செடுத்துமறைத் தழைத்துவளைத்
          திருத்தியகப் படுத்திநகைத் ...... துறவாடி

பொருட்குமிகத் துதித்திளகிப்
     புலப்படுசித் திரக்கரணப்
          புணர்ச்சிவிளைத் துருக்குபரத் ...... தையர்மோகப்

புழுத்தொளையிற் றிளைத்ததனைப்
     பொறுத்தருளிச் சடக்கெனஅப்
          புறத்திலழைத் திருத்தியளித் ...... திடுவாயே

உருத்திரரைப் பழித்துலகுக்
     குகக்கடையப் பெனக்ககனத்
          துடுத்தகரப் படுத்துகிரித் ...... தலமேழும்

உடுத்தபொலப் பொருப்புவெடித்
     தொலிப்பமருத் திளைப்பநெருப்
          பொளிக்கஇருப் பிடத்தைவிடச் ...... சுரரோடித்

திரைக்கடலுட் படச்சுழலச்
     செகத்ரையமிப் படிக்கலையச்
          சிரித்தெதிர்கொக் கரித்துமலைத் ...... திடுபாவி

செருக்கழியத் தெழித்துதிரத்
     திரைக்கடலிற் சுழித்தலையிற்
          றிளைத்தஅயிற் கரக்குமரப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

இருள் குழலைக் குலைத்து முடித்து எழில் கலையைத் திருத்தி
உடுத்து
... இருண்ட கூந்தலை கலைத்தும் முடித்தும், அழகிய
ஆடையை திருத்தமாக அணிந்தும்,

இணைக் கயலைப் புரட்டி விழித்து அதிபார இழைக் களபப்
பொருப்பு அணி கச்சு எடுத்து மறைத்து அழைத்து
... இரண்டு
கண்களையும் புரட்டி விழித்தும், அதிக கனமான ஆபரணங்களையும்
கலவைச் சாந்தையும் கொண்ட மலை போன்ற மார்பின் மேல்
அணிந்துள்ள கச்சை எடுத்தும் மறைத்தும், அழைப்பு விடுத்தும்,

வளைத் திருத்தி அகப்படுத்தி நகைத்து உறவாடிப் பொருட்கு
மிகத் துதித்து இளகி
... வளையல்களைத் திருத்தமாக சரிப்படுத்தியும்,
சிரித்து உறவு முறைகளைச் சொல்லி உறவாடியும், பொருள் பெறுவதற்கு
நிரம்பத் துதித்தும், (பொருளைக் கண்ட பின்) மனம் நெகிழ்ந்தும்,

புலப்படு சித்திரக் கரணப் புணர்ச்சி விளைத்து உருக்கு
பரத்தையர் மோகப் புழுத் தொளையில் திளைத்தது அதனை
...
தெரிந்த விசித்திரமான புணர்ச்சி வகைகளைக் காட்டி மனதை உருக்கும்
பொது மகளிரின் காமத்துக்கு இடமான, புழுவுக்கு இருப்பிடமாகிய,
பெண்குறி என்னும் குழியில் இடைவிடாது விளையாடின என் செயலை

பொறுத்து அருளிச் சடக்கென அப் புறத்தில் அழைத்து
இருத்தி அளித்திடுவாயே
... மன்னித்து வேகமாக அப்புறமான
நன்னெறியில் அழைத்து பொருந்த வைத்துக் காப்பாற்றி அருள்வாயாக.

உருத்திரரைப் பழித்து உலகுக்கு உகக்கடை அப்பு எனக்
ககனத்து உடுத் தகரப் படுத்து கிரித் தலம் ஏழும் உடுத்த
பொலப் பொருப்பு வெடித்து ஒலிப்ப
... ருத்திரர்களைப் பழித்தும்,
உலகத்தை அழிக்க வந்த யுக முடிவில் தோன்றும் பிரளய நீர் என்று
பொங்கி எழுந்து, ஆகாயத்தில் உள்ள நட்சத்திரங்கள் சிதறும்படிச்
செய்து, மலைகள் ஏழும் சூழ்ந்துள்ள பொன் மலையாகிய மேரு
வெடிபட்டு ஒலி எழுப்பவும்,

மருத்து இளைப்ப நெருப்பு ஒளிக்க இருப்பிடத்தை விடச்
சுரர் ஓடி திரைக் கடல் உட்படச் சுழலச் செகத்ரையம் இப்படிக்
கலையச் சிரித்து எதிர் கொக்கரித்து மலைத்திடு பாவி
...
காற்று சோர்வு அடையவும், நெருப்பு ஒளித்துக் கொள்ளவும், தத்தம்
இருப்பிடத்தை விட்ட தேவர்கள் ஓடிப் போய் அலை வீசும் கடலுள்
பட்டு அலைச்சல் உற, மூன்று உலகங்களும் இவ்வாறு வேதனைப்பட,
(அதைக் கண்டு) சிரித்தும் எதிரே நின்று ஆரவாரித்தும் போர் புரிந்த
பாவியாகிய (சூரனுடைய)

செருக்கு அழியத் தெழித்து உதிரத் திரைக் கடலில் சுழித்
தலையில் திளைத்த அயில் கரக் குமரப் பெருமாளே.
...
ஆணவம் அழிபட அவனை அடக்கி அலை வீசும் ரத்தக் கடலின்
சுழியிடத்தில் (முழுக்கி) மகிழ்ந்து விளையாடிய வேலாயுதத்தை ஏந்திய
குமரப் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.82  pg 3.83 
 WIKI_urai Song number: 1023 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1020 - irut kuzhalai (common)

irutkuzhalaik kulaiththumudith
     thezhiRkalaiyaith thiruththiyuduth
          thiNaikkayalaip purattivizhith ...... thathipAra

izhaikkaLapap poruppaNikac
     cheduththumaRaith thazhaiththuvaLaith
          thiruththiyakap paduththinakaith ...... thuRavAdi

porutkumikath thuthiththiLakip
     pulappadusith thirakkaraNap
          puNarcchiviLaith thurukkuparath ...... thaiyarmOkap

puzhuththoLaiyit RiLaiththathanaip
     poRuththaruLic chadakkenaap
          puRaththilazhaith thiruththiyaLith ...... thiduvAyE

uruththiraraip pazhiththulakuk
     kukakkadaiyap penakkakanath
          thuduththakarap paduththukirith ...... thalamEzhum

uduththapolap poruppuvedith
     tholippamaruth thiLaippanerup
          poLikkairup pidaththaividac ...... curarOdith

thiraikkadalut padacchuzhalac
     chekathraiyamip padikkalaiyas
          chiriththethirkok kariththumalaith ...... thidupAvi

serukkazhiyath thezhiththuthirath
     thiraikkadaliR chuzhiththalaiyiR
          RiLaiththaayiR karakkumarap ...... perumALE.

......... Meaning .........

iruL kuzhalaik kulaiththu mudiththu ezhil kalaiyaith thiruththi uduththu: They tie up their dark hair into a tuft and then let it slide loose; they conspicuously adjust their nice upper garment;

iNaik kayalaip puratti vizhiththu athipAra izhaik kaLapap poruppu aNi kacchu eduththu maRaiththu azhaiththu: they roll their two beautiful eyes and stare; they alternately remove the blouse, inviting their suitors, and conceal their mountain-like bosom wearing weighty ornaments and the smeared paste of sandalwood powder;

vaLaith thiruththi akappaduththi nakaiththu uRavAdip porutku mikath thuthiththu iLaki: in an eye-catching manner they rearrange their bangles; inventing many a relationship, they giggle and call their suitors addressing them variously; they praise them sky-high to obtain financial favour; they reveal their molten heart (once they are paid);

pulappadu chiththirak karaNap puNarcchi viLaiththu urukku paraththaiyar mOkap puzhuth thoLaiyil thiLaiththathu athanai: these whores demonstrate strange methods of copulation known to them and enchant their suitors; I have been constantly involved in an act of over-indulgence in, and obsession for, their seat of passion, namely, their despicable genital hole, a habitat of worms;

poRuththu aruLic chadakkena ap puRaththil azhaiththu iruththi aLiththiduvAyE: kindly forgive my transgression and swiftly remove me to the other side, namely the righteous path, ensuring that I remain there firmly protected, Oh Lord!

uruththiraraip pazhiththu ulakukku ukakkadai appu enak kakanaththu uduth thakarap paduththu kirith thalam Ezhum uduththa polap poruppu vediththu olippa: He jeered at the RudrAs and fiercely rose as the deluge that flows at the end of the aeon to destroy this world; he caused all the stars in the sky to shatter to pieces; the golden mount MEru, surrounded by seven mountains, exploded making a big noise;

maruththu iLaippa neruppu oLikka iruppidaththai vidac churar Odi thiraik kadal udpadac chuzhalac chekathraiyam ippadik kalaiyac chiriththu ethir kokkariththu malaiththidu pAvi: the wind became weary; the fire hid in some place; the celestials fled from their abodes and hid themselves under the wavy seas being tossed about; all the three worlds felt miserable; he laughed at their plight and heckled them while continuing to fight; he was a big sinner (the demon SUran);

serukku azhiyath thezhiththu uthirath thiraik kadalil suzhith thalaiyil thiLaiththa ayil karak kumarap perumALE.: destroying his arrogance, the spear in Your hand subdued him, sinking him playfully into the whirl of the sea of blood, Oh Lord KumarA, the Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1020 irut kuzhalai - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]