திருப்புகழ் 1017 மழையளக பாரம்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1017 mazhaiyaLagabAram  (common)
Thiruppugazh - 1017 mazhaiyaLagabAram - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தான தந்த தந்த
     தனதனன தான தந்த தந்த
          தனதனன தான தந்த தந்த ...... தனதான

......... பாடல் .........

மழையளக பார முங்கு லைந்து
     வரிபரவு நீல முஞ்சி வந்து
          மதிமுகமும் வேர்வு வந்த ரும்ப ...... அணைமீதே

மகுடதன பார முங்கு லுங்க
     மணிகலைக ளேற வுந்தி ரைந்து
          வசமழிய வேபு ணர்ந்த ணைந்து ...... மகிழ்வாகிக்

குழையஇத ழூற லுண்ட ழுந்தி
     குருகுமொழி வாய்ம லர்ந்து கொஞ்ச
          குமுதபதி போக பொங்கு கங்கை ...... குதிபாயக்

குழியிலிழி யாவி தங்க ளொங்கு
     மதனகலை யாக மங்கள் விஞ்சி
          குமரியர்க ளோடு ழன்று நைந்து ...... விடலாமோ

எழுபடைகள் சூர வஞ்ச ரஞ்ச
     இரணகள மாக அன்று சென்று
          எழுசிகர மாநி லங்கு லுங்க ...... விசையூடே

எழுகடலு மேரு வுங்க லங்க
     விழிபடர்வு தோகை கொண்ட துங்க
          இயல்மயிலின் மாறு கொண்ட மர்ந்த ...... வடிவேலா

பொழுதளவு நீடு குன்று சென்று
     குறவர்மகள் காலி னும்ப ணிந்து
          புளிஞரறி யாம லுந்தி ரிந்து ...... புனமீதே

புதியமட லேற வுந்து ணிந்த
     அரியபரி தாப முந்த ணிந்து
          புளகிதப யோத ரம்பு ணர்ந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மழை அளக பாரமும் குலைந்து வரி பரவு நீலமும் சிவந்து
மதி முகமும் வேர்வு வந்து அரும்ப
... மழை போல நீண்ட கூந்தல்
பாரம் அவிழ்ந்து குலைய, ரேகைகள் பரவியுள்ள நீலோற்பலம் போன்ற
கண்களும் செந்நிறம் அடைய, சந்திரன் போன்ற முகமும் வேர்வைத்
துளிகள் வந்து கூட,

அணை மீதே மகுட தன பாரமும் குலுங்க மணி கலைகளே
அறவும் திரைந்து வசம் அழியவே புணர்ந்து அணைந்து
மகிழ்வாகி
... படுக்கையின் மேல் கிரீடம் போன்ற மார்பகப் பாரமும்
குலுங்க, ரத்ன மேகலை முதலிய இடை அணிகள் மிகவும் அலைப்புண்டு
விலக, தன் வசம் இழக்கும்படி சேர்ந்து, அணைந்து மகிழ்ச்சி பூண்டு,

குழைய இதழ் ஊறல் உண்டு அழுந்தி குருகு மொழி வாய்
மலர்ந்து கொஞ்ச குமுத பதி போக பொங்கு கங்கை குதி
பாய
... மனம் குழைய வாயிதழ் ஊறலைப் பருக (காம மயக்கில்) அழுந்தி,
புட் குரலுடன் வாய் திறந்து கொஞ்சிப் பேச, சந்திரன் வரக் கண்டு
பொங்குகின்ற கங்கையைப் போல குதித்துப் பாய,

குழியில் இழியா விதங்கள் ஒங்கு மதன கலை ஆகமங்கள்
விஞ்சி குமரியர்களோடு உழன்று நைந்து விடலாமோ
...
பெண்குறியாம் குழியில் இழிந்து, பல விதங்களாக விளங்கும் மன்மதக்
கலை நூல் விதிகளில் மிகவும் மேம்பட்டு, இளம் பெண்களோடு திளைந்து
உடல் நொந்து விடுதல் நன்றோ?

எழு படைகள் சூர வஞ்சர் அஞ்ச இரண களமாக அன்று
சென்று எழு சிகர(ம்) மா நிலம் குலுங்க விசை ஊடே எழு
கடலு(ம்) மேருவும் கலங்க விழி படர்வு தோகை கொண்ட
துங்க இயல் மயிலின் மாறு கொண்டு அமர்ந்த வடிவேலா
...
போருக்கு எழும் படைகளுடன் சூரர்களாகிய வஞ்சக அசுரர்கள் பயப்பட,
போர்க் களம் ரண களமாக அன்று நீ போய் எழு கிரிகளும் பெரிய நிலப்
பரப்பும் அசைவு கொள்ள, வேகத்துடன் ஏழு கடல்களும் மேரு மலையும்
கலக்கம் கொள்ள, கண்கள் படர்ந்துள்ள பீலிகளைக் கொண்ட
பரிசுத்தமான, தகுதியுள்ள மயிலின் மீது ஏறி கால்களை மாறாகப்
போட்டுக்கொண்டு வீற்றிருந்த வடி வேலனே,

பொழுது அளவு நீடு குன்று சென்று குறவர் மகள் காலினும்
பணிந்து புளிஞர் அறியாமலும் திரிந்து புன(ம்) மீதே புதிய
மடல் ஏறவும் துணிந்த அரிய பரிதாபமும் தணிந்து புளகித
பயோதரம் புணர்ந்த பெருமாளே.
... பொழுது அஸ்தமிக்கும்
வரையில் பெரிய (வள்ளி மலைக்) குன்றில் குறவர்களுடைய பெண்ணான
வள்ளியைக் காலிலும் வணங்கி, வேடர்களுக்குத் தெரியாமல் திரிந்து,
தினைப் புனத்தில் புதிதாக மடலேறுதற்கும்* துணிந்திருந்த அந்த பரிதாப
நிலையும் குறைந்து, புளகிதம் கொண்டிருந்த வள்ளியின் மார்பினை
அணைந்த பெருமாளே.


* மடல் ஏறுதல்:

காமத்தால் வாடும் தலைவன் பனங்கருக்கால் குதிரை
முதலிய வடிவங்கள் செய்து அவற்றின் மேலே ஏறி ஊரைச் சுற்றி, தலைவியிடம்
உள்ள தன் காதலை ஊரிலுள்ள பிறருக்குத் தெரிவிப்பான்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.72  pg 3.73  pg 3.74  pg 3.75 
 WIKI_urai Song number: 1020 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1017 - mazhaiyaLaga bAram (common)

mazhaiyaLaka pAra mungku lainthu
     variparavu neela mumchi vanthu
          mathimukamum vErvu vantha rumpa ...... aNaimeethE

makudathana pAra mungku lunga
     maNikalaika LERa vunthi rainthu
          vasamazhiya vEpu Narntha Nainthu ...... makizhvAkik

kuzhaiyaitha zhURa luNda zhunthi
     kurukumozhi vAyma larnthu konja
          kumuthapathi pOka pongu kangai ...... kuthipAyak

kuzhiyilizhi yAvi thanga Longu
     mathanakalai yAka mangaL vinji
          kumariyarka LOdu zhanRu nainthu ...... vidalAmO

ezhupadaikaL cUra vanja ranja
     iraNakaLa mAka anRu senRu
          ezhusikara mAni langu lunga ...... visaiyUdE

ezhukadalu mEru vumka langa
     vizhipadarvu thOkai koNda thunga
          iyalmayilin mARu koNda marntha ...... vadivElA

pozhuthaLavu needu kunRu senRu
     kuRavarmakaL kAli numpa Ninthu
          puLinjaraRi yAma lunthi rinthu ...... punameethE

puthiyamada lERa vunthu Nintha
     ariyapari thApa muntha Ninthu
          puLakithapa yOtha rampu Narntha ...... perumALE.

......... Meaning .........

mazhai aLaka pAramum kulainthu vari paravu neelamum sivanthu mathi mukamum vErvu vanthu arumpa: Their long and spread-out hair like the black cloud became loosened and dishevelled. Their blue-lily-like eyes with shot-up blood vessels became red. On their moon-like face, beads of perspiration formed.

aNai meethE makuda thana pAramum kulunga maNi kalaikaLE aRavum thirainthu vasam azhiyavE puNarnthu aNainthu makizhvAki: Their crown-like heavy bosom shook on the top of the bed. The waistband studded with gems and other ornaments around their waist heaved a lot and became misaligned. Hugging them to the point of losing consciousness, uniting with them and feeling exhilarated,

kuzhaiya ithazh URal uNdu azhunthi kuruku mozhi vAy malarnthu konja kumutha pathi pOka pongu kangai kuthi pAya: imbibing the nectar-like saliva gushing from their lips to the heart's content, immersing in the flood of passion, listening to the cooing bird-like sounds emanating from their mouth, jumping about all over them like the gushing river Gangai at the moonrise,

kuzhiyil izhiyA vithangaL ongu mathana kalai AkamangaL vinji kumariyarkaLOdu uzhanRu nainthu vidalAmO: sinking deep into the pit of their genitals and excelling in many an aspect of the text of erotic art written by Manmathan (God of Love), would it do any good to me to be indulging thus with these young girls and suffering the consequential debilitation of my body?

ezhu padaikaL cUra vanjar anja iraNa kaLamAka anRu senRu ezhu sikara(m) mA nilam kulunga visai UdE ezhu kadalu(m) mEruvum kalanga vizhi padarvu thOkai koNda thunga iyal mayilin mARu koNdu amarntha vadivElA: The invading armies of the treacherous demons headed by SUran became terrified; the battlefield turned into a blood-bath when You went there shaking the seven mountains and the vast landscape; the seven seas and Mount MEru were all agitated as You mounted the pure and worthy peacock, with plumes bearing wide eyes, and sat with Your legs crossed holding the sharp spear, Oh Lord!

pozhuthu aLavu needu kunRu senRu kuRavar makaL kAlinum paNinthu puLinjar aRiyAmalum thirinthu puna(m) meethE puthiya madal ERavum thuNintha ariya parithApamum thaNinthu puLakitha payOtharam puNarntha perumALE.: Until sunset, You stationed Yourself at the big mountain VaLLimalai prostrating at the feet of VaLLi, the damsel of the KuRavAs; You roamed about unbeknownst to those hunters and were prepared even to mount the madal* afresh in the field of millet; that pitiable situation eventually improved, and You were able to hug the exhilarated bosom of VaLLi, Oh Great One!


* madal - is a type of palm leaf used as a canvas on which Murugan drew the descriptive picture of VaLLi and went alone to VaLLimalai. There He chose a junction of four streets and stood staring at the picture day in and day out, oblivious of other peoples' comments and jeers. Ultimately, VaLLi's people were so moved by Murugan's devotion that they decided to formally give VaLLi in marriage to Murugan - according to Kandha PurANam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1017 mazhaiyaLaga bAram - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]