திருப்புகழ் 984 வானோர் வழுத்துனது  (இராமேசுரம்)
Thiruppugazh 984 vAnOrvazhuththunadhu  (rAmEsuram)
Thiruppugazh - 984 vAnOrvazhuththunadhu - rAmEsuramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானா தனத்ததன தானா தனத்ததன
     தானா தனத்ததன ...... தனதான

......... பாடல் .........

வானோர் வழுத்துனது பாதா ரபத்மமலர்
     மீதே பணிக்கும்வகை ...... யறியாதே

மானார் வலைக்கணதி லேதூ ளிமெத்தையினி
     லூடே யணைத்துதவு ...... மதனாலே

தேனோ கருப்பிலெழு பாகோ விதற்கிணைக
     ளேதோ வெனக்கலவி ...... பலகோடி

தீரா மயக்கினொடு நாகா படத்திலெழு
     சேறா டல்பெற்றதுய ...... ரொழியேனோ

மேனா டுபெற்றுவளர் சூரா திபற்கெதிரி
     னூடே கிநிற்குமிரு ...... கழலோனே

மேகா ரவுக்ரபரி தானே றிவெற்றிபுனை
     வீரா குறச்சிறுமி ...... மணவாளா

ஞானா பரற்கினிய வேதா கமப்பொருளை
     நாணா துரைக்குமொரு ...... பெரியோனே

நாரா யணற்குமரு காவீ றுபெற்றிலகு
     ராமே சுரத்திலுறை ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வானோர் வழுத்து உனது பாதார பத்ம மலர் மீதே பணிக்கும்
வகை அறியாதே
... தேவர்கள் போற்றுகின்ற உன்னுடைய திருவடித்
தாமரைகள் மீது பணி செய்யும் வகையை உணராமல்,

மானார் வலைக் கண் அதிலே தூளி மெத்தையினில் ஊடே
அணைத்து உதவும் அதனாலே
... மான் விழியரான
விலைமாதர்களின் கடைக் கண்ணில் பட்டு, பூந்தாதுக்கள் நிறைந்த
மெத்தையில் அணைத்துப் பெறும் அந்த நிகழ்ச்சியால்,

தேனோ கருப்பில் எழு பாகோ இதற்கு இணைகள் ஏதோ
எனக் கலவி பல கோடி தீரா மயக்கினொடு நாகா படத்தில்
எழு சேறு ஆடல் பெற்ற துயர் ஒழியேனோ
... தேன் தானோ,
கரும்பிலிருந்து வரும் சர்க்கரைக் கட்டியோ, இதற்குச் சமமான இன்பம்
ஏதேனும் உள்ளதோ, என்று கூறி பல கோடிக் கணக்கான புணர்ச்சிகளை
அடங்காத மோகத்தோடு பாம்பின் படம் போன்ற பெண்குறியாகிய
சேற்றில் விளையாடுதலால் நான் அடைந்துள்ள துயரத்தை விலக்க
மாட்டேனோ?

மேல்நாடு பெற்று வளர் சூர அதிபற்கு எதிரின் ஊடு ஏகி
நிற்கும் இரு கழலோனே
... மேல் நாடாகிய விண்ணுலகத்தையும்
போரில் வென்று அடைந்து மேம்பட்ட அசுரர்கள் தலைவனான சூரனின்
எதிரே போரில் புகுந்து நின்ற இரண்டு திருவடிகளை உடையவனே,

மேகார உக்ர பரி தான் ஏறி வெற்றி புனை வீரா குறச் சிறுமி
மணவாளா
... மயில் என்னும் உக்கிரமான வாகனத்தில் ஏறி அமர்ந்து
வெற்றி பெற்ற வீரனே, குறப் பெண் வள்ளியின் கணவனே,

ஞானா பரற்கு இனிய வேத ஆகமப் பொருளை நாணாது
உரைக்கும் ஒரு பெரியோனே
... ஞானப் பரம் பொருளாகிய
சிவபெருமானுக்கு வேதாகமங்களின் பொருளைத் தயங்காமல்
உபதேசித்த ஒப்பற்ற பெரியோனே,

நாராயணற்கு மருகா வீறு பெற்று இலகு ராமேசுரத்தில்
உறை பெருமாளே.
... திருமாலுக்கு மருகனே, சிறப்பு பெற்று
விளங்கும் ராமேசுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1417  pg 2.1418 
 WIKI_urai Song number: 988 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 984 - vAnOr vazhuththunadhu (ramEswaram)

vAnOr vazhuththunathu pAthA rapathmamalar
     meethE paNikkumvakai ...... yaRiyAthE

mAnAr valaikkaNathi lEthULi meththaiyini
     lUdE yaNaiththuthavu ...... mathanAlE

thEnO karuppilezhu pAkO vithaRkiNaika
     LEthO venakkalavi ...... palakOdi

theerA mayakkinodu nAkA padaththilezhu
     chERA dalpetRathuya ...... rozhiyEnO

mEnA dupetRuvaLar cUrA thipaRkethiri
     nUdEki niRkumiru ...... kazhalOnE

mEkA ravukrapari thAnE RivetRipunai
     veerA kuRacchiRumi ...... maNavALA

njAnA paraRkiniya vEthA kamapporuLai
     nANA thuraikkumoru ...... periyOnE

nArA yaNaRkumaru kAvee RupetRilaku
     rAmE suraththiluRai ...... perumALE.

......... Meaning .........

vAnOr vazhuththu unathu pAthAra pathma malar meethE paNikkum vakai aRiyAthE: Without realising the method of serving Your hallowed lotus feet that are lauded by the celestials,

mAnAr valaik kaN athilE thULi meththaiyinil UdE aNaiththu uthavum athanAlE: I have fallen a victim to the glance from the corner of the deer-like eyes of the whores; I indulged in the act of embracing them on the flower-strewn bed; from that encounter,

thEnO karuppil ezhu pAkO ithaRku iNaikaL EthO enak kalavi pala kOdi theerA mayakkinodu nAkA padaththil ezhu chERu Adal petRa thuyar ozhiyEnO: I have been wondering if the coital bliss could be compared to the sweetness of honey, or the jaggery extracted from sugarcane; dismissing that no other experience is comparable to this, I have been enjoying a million copulations with them with uncontrolled passion, playing about in their slushy genitals that look like the hood of a serpent; and why can I not avoid the resultant misery?

mElnAdu petRu vaLar cUra athipaRku ethirin Udu Eki niRkum iru kazhalOnE: Winning the celestial land in a war, SUran, the leader of the demons stood out proudly, and You confronted him entering the battlefield and firmly anchored Your two hallowed feet on the ground, Oh Lord!

mEkAra ukra pari thAn ERi vetRi punai veerA kuRac chiRumi maNavALA: Mounting Your fierce vehicle, the Peacock, You triumphed in the war, Oh Valorous One! You are the consort of VaLLi, the damsel of the KuRavAs!

njAnA paraRku iniya vEtha Akamap poruLai nANAthu uraikkum oru periyOnE: He is the Supreme Primeval Principle; to that Lord SivA, You readily preached the significance of VEdAs and Scriptures, Oh Matchless and Wise One!

nArAyaNaRku marukA veeRu petRu ilaku rAmEsuraththil uRai perumALE.: You are the illustrious nephew of Lord VishNu; and You have taken Your seat in this famous place, RAmEswaram, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 984 vAnOr vazhuththunadhu - rAmEsuram


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]