திருப்புகழ் 897 விந்துபேதித்த  (கந்தனூர்)
Thiruppugazh 897 vindhubEdhiththa  (kandhanUr)
Thiruppugazh - 897 vindhubEdhiththa - kandhanUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்தனா தத்தனா தந்தனா தத்தனா
     தந்தனா தத்தனா ...... தந்ததான

......... பாடல் .........

விந்துபே தித்தவடி வங்களா யெத்திசையு
     மின்சரா சர்க்குலமும் ...... வந்துலாவி

விண்டுபோய் விட்டவுடல் சிந்தைதா னுற்றறியு
     மிஞ்சநீ விட்டவடி ...... வங்களாலே

வந்துநா யிற்கடைய னொந்துஞா னப்பதவி
     வந்துதா இக்கணமெ ...... யென்றுகூற

மைந்தர்தா விப்புகழ தந்தைதா யுற்றுருகி
     வந்துசே யைத்தழுவல் ...... சிந்தியாதோ

அந்தகா ரத்திலிடி யென்பவாய் விட்டுவரு
     மங்கிபார் வைப்பறையர் ...... மங்கிமாள

அங்கைவேல் விட்டருளி யிந்த்ரலோ கத்தின்மகிழ்
     அண்டரே றக்கிருபை ...... கொண்டபாலா

எந்தனா விக்குதவு சந்த்ரசேர் வைச்சடையர்
     எந்தைபா கத்துறையு ...... மந்தமாது

எங்குமாய் நிற்குமொரு கந்தனூர் சத்திபுகழ்
     எந்தைபூ சித்துமகிழ் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

விந்துபேதித்த வடிவங்களாய் எத்திசையு ... சுக்கில விந்து
வெவ்வேறான உருவங்களாய் எல்லாத் திசைகளிலும்,

மின்சரா சர்க்குலமும் வந்துலாவி ... ஒளிவாய்ந்த அசையும்
அசையாப் பொருள் என்ற கூட்டமாய் இவ்வுலகில் தோன்றி காலம்
கழித்து,

விண்டுபோய் விட்டவுடல் சிந்தைதான் உற்றறியு ... பின்பு
பிரிந்து போய் உடலை விடுவதை என் மனம் ஆராய்ந்து அறியும்.

மிஞ்சநீ விட்டவடிவங்களாலே ... இவ்வாறு மிகுதியாக நீ எனக்கு
அளித்த வடிவங்களில் பிறப்பெடுத்து

வந்து நாயிற்கடையன் நொந்து ... நான் வந்து நாயினும்
கீழ்ப்பட்டவனாக மனம் நொந்து,

ஞானப்பதவி வந்துதா இக்கணமெ யென்றுகூற ... ஞான
நிலையை இந்தக் கணத்திலேயே வந்து கொடு என்று உன்னிடம்
முறையிடுகிறேன்.

மைந்தர்தாவிப்புகழ தந்தைதாய் உற்றுருகி ... குழந்தைகள் தாவி
நின்று புகழ்ந்தால் தாயும் தந்தையும் அம்மொழிகளைக் கேட்டு மனம்
உருகி

வந்துசேயைத்தழுவல் சிந்தியாதோ ... அக்குழந்தைகளை ஓடிவந்து
தழுவிக்கொள்ளும் பான்மையை உன் மனம் சற்று நினைக்கக் கூடாதா?

அந்தகாரத்தில் இடி யென்பவாய் விட்டுவரும் ... பேரிருளில் இடி
இடிப்பதுபோல் வாய்விட்டுக் கூச்சலிட்டு வருகின்ற,

அங்கிபார்வைப்பறையர் மங்கிமாள ... கண்களில் நெருப்புப் பொறி
பறக்கும் இழிகுலத்தரான அசுரர் ஒடுங்கி மாண்டுபோக,

அங்கைவேல் விட்டருளி ... அழகிய கையிலிருக்கும் வேலைச்
செலுத்தி அருளி,

இந்த்ரலோ கத்தின்மகிழ் அண்டர் ஏறக்கிருபை
கொண்டபாலா
... இந்திர லோகத்தில் மகிழ்ச்சியுடன் தேவர்கள்
மீண்டும் குடியேற அருள்புரிந்த குமரனே,

எந்தன் ஆவிக்குதவு சந்த்ரசேர்வைச்சடையர் ... என் உயிருக்கு
உதவி புரிந்தவரும்*, சந்திரனைச் சேர்த்து வைத்துள்ள ஜடையை
உடையவரும்,

எந்தை பாகத்துறையும் அந்தமாது ... என் தந்தையும் ஆகிய
சிவபெருமானும், அவரின் இடது பாகத்தில் அமர்ந்துள்ள அழகிய
பார்வதிதேவி ஆகிய இருவரும்

எங்குமாய் நிற்குமொரு கந்தனூர் ... எங்கும் நிறைந்து விளங்கும்
ஒப்பற்ற கந்தனூரில்**,

சத்திபுகழ் எந்தைபூசித்துமகிழ் தம்பிரானே. ... பராசக்தி புகழும்
எந்தை பரமசிவன் பூஜித்து மகிழும் தம்பிரானே.


* அருணகிரியாரின் வாழ்வில் அருணாசலேஸ்வரரே அவர் முன்பு தரிசனம்
தந்து திருநீறு அளித்து ஆட்கொண்ட நிகழ்ச்சியைக் குறிப்பது.


** கந்தனூர் புதுக்கோட்டைக்குத் தெற்கே 3 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1187  pg 2.1188  pg 2.1189  pg 2.1190 
 WIKI_urai Song number: 901 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 897 - vindhubEdhiththa (kandhanUr)

vinthupE thiththavadi vangaLA yeththisaiyu
     minsarA sarkkulamum ...... vanthulAvi

viNdupOy vittavudal sinthaithA nutRaRiyu
     minjanee vittavadi ...... vangaLAlE

vanthunA yiRkadaiya nonthunjA nappathavi
     vanthuthA ikkaName ...... yenRukURa

maintharthA vippukazha thanthaithA yutRuruki
     vanthusE yaiththazhuval ...... sinthiyAthO

anthakA raththilidi yenpavAy vittuvaru
     mangipAr vaippaRaiyar ...... mangimALa

angaivEl vittaruLi yinthralO kaththinmakizh
     aNdarE Rakkirupai ...... koNdabAlA

enthanA vikkuthavu chanthrasEr vaiccadaiyar
     enthaipA kaththuRaiyu ...... manthamAthu

engumAy niRkumoru kanthanUr saththipukazh
     enthaipU ciththumakizh ...... thambirAnE.

......... Meaning .........

vinthupEthiththa vadivangaLAy eththisaiyu: The sperm spreads in all the directions and takes different shapes,

minsarA sarkkulamum vanthulAvi: in multitudes of bright moving bodies and stationary objects in this world; after their time is over,

viNdupOy vittavudal sinthaithA nutRaRiyu: the bodies break apart, and the lives depart. My mind has understood this phenomenon after deep contemplation.

minjanee vittavadivangaLAlE: In the plethora of bodies that You assigned to me

vanthu nAyiRkadaiyan nonthu: and through several births, the poor me, baser than a dog, suffered unbearably.

njAnappathavi vanthuthA ikkaName yenRukURa: I am beseeching You to come right at this moment and grant me blissful liberation.

mainthar thAvippukazha thanthaithAy utRuruki: When little children run to their parents praising them, will they not simply melt and be moved

vanthu sEyaiththazhuval sinthiyAthO: to take the children in their arms and hug them? Will You not also think of holding me in Your embrace?

anthakAraththil idi yenpavAy vittuvarum: Sounding like the thunder in the darkness, they made loud noise with their mouths wide open, while marching in the battlefield;

angipArvaip paRaiyar mangimALa: their flaming eyes spewed fire; those demons of despicable lineage were all destroyed and killed

angaivEl vittaruLi: when You wielded the spear from Your beautiful hand!

inthralO kaththinmakizh aNdar ERakkirupai koNdabAlA: The celestials of the land of IndrA were able to happily enter their land again by Your grace, Oh Kumara!

enthan Avikkuthavu chanthrasErvaic cadaiyar: He saved my life*; He holds the crescent moon on His tresses;

enthai pAkaththuRaiyum anthamAthu: He is my Father, Lord SivA; He and His beautiful consort PArvathi, occupying the left side of His body, are both

engumAy niRkumoru kanthanUr: pervasive throughout this place called KanthanUr**,

saththipukazh enthaipUciththumakizh thambirAnE.: where my Father, SivA, praised by Mother ParAsakthi, happily offers His obeisance to You, Oh Great One!


* In the life of AruNagirinAthar, Lord SivA, as ArunAchalEswar, came in his vision, offering the holy ash to save his life.


** KanthanUr is 3 miles south of PuthukkOttai.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 897 vindhubEdhiththa - kandhanUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]