திருப்புகழ் 884 அம்பு ராசியில்  (தஞ்சை)
Thiruppugazh 884 amburAsiyil  (thanjai)
Thiruppugazh - 884 amburAsiyil - thanjaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்த தானனத் தந்த தானனத்
     தந்த தானனத் ...... தனதான

......... பாடல் .........

அம்பு ராசியிற் கெண்டை சேலொளித்
     தஞ்ச வேமணிக் ...... குழைவீசும்

அங்க ணாரிடத் தின்ப சாகரத்
     தங்கி மூழ்குமிச் ...... சையினாலே

எம்பி ரானுனைச் சிந்தி யாதொழித்
     திந்த்ர சாலஇப் ...... ப்ரமைதீர

இங்கு வாவெனப் பண்பி னாலழைத்
     தெங்கு மானமெய்ப் ...... பொருள்தாராய்

கொம்பு போலிடைத் தொண்டை போலிதழ்க்
     கொண்டல் போல்குழற் ...... கனமேருக்

குன்று போல்முலைப் பைங்கி ராதியைக்
     கொண்ட கோலசற் ...... குணவேலா

சம்ப ராரியைக் கொன்ற தீவிழிச்
     சம்பு போதகக் ...... குருநாதா

சண்ட கோபுரச் செம்பொன் மாளிகைத்
     தஞ்சை மாநகர்ப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அம்பு ராசியில் கெண்டை சேலொளித்து அஞ்சவே ... கடலில்
உள்ள கெண்டை மீன், சேல் மீன் பயந்து ஒளிந்திடுமாறு,

மணிக் குழைவீசும் அங்க(ண்)ணாரிடத்து ... ரத்தினக்
குண்டலங்கள் உள்ள காதுவரை பாய்ந்தோடும் அழகிய கண்களை
உடைய மாதர்களிடம் கிடைக்கும்

இன்ப சாகரத்து அங்கி மூழ்கும் இச்சையினாலே ... இன்பக்கடல்
போன்ற நெருப்பில் முழுகும் காம விருப்பால்,

எம்பிரான் உனைச் சிந்தியாது ஒழித்து ... எம்பெருமானே,
உன்னை நான் தியானிக்காத வண்ணம் என்னைப் பிரிக்கும்

இந்த்ர சால இப் ப்ரமைதீர இங்கு வாவெனப் பண்பினால்
அழைத்து
... மாயவித்தை போன்ற இந்த மயக்க அறிவு நீங்க, இங்கே
வா என்று ஆட்கொள்ளும் முறையில் அழைத்து,

எங்குமான மெய்ப் பொருள்தாராய் ... எங்கும் நிறைந்துள்ளதான
உண்மைப் பொருளை உபதேசித்து அருள்க.

கொம்பு போல் இடைத் தொண்டை போல் இதழ்க் கொண்டல்
போல்குழல்
... கொடி போன்ற மெல்லிய இடுப்பு, கொவ்வைக் கனி
போன்ற சிவந்த வாய் இதழ், மேகம் போன்ற கூந்தல்,

கனமேருக் குன்று போல்முலைப் பைங்கி ராதியைக் கொண்ட
கோலசற் குணவேலா
... பருத்த மேருமலையைப் போன்ற மார்பகம்
- இவற்றை உடைய அழகிய வேட்டுவப் பெண் வள்ளியை
மணம்கொண்ட அழகிய நற்குண வேலனே,

சம்ப ராரியைக் கொன்ற தீவிழிச் சம்பு போதகக் குருநாதா ...
மன்மதனைக்* கொல்வித்த நெருப்புக் கண்ணை உடைய சிவனுக்கு
உபதேசம் செய்த குருநாதனே,

சண்ட கோபுரச் செம்பொன் மாளிகைத் தஞ்சை மாநகர்ப்
பெருமாளே.
... திண்மை வாய்ந்த கோபுரமும், செம்பொன்னால்
கட்டப்பட்ட மாளிகையும் கொண்ட தஞ்சை மாநகரில் வீற்றிருக்கும்
பெருமாளே.


* 'சம்பரன்' என்ற அசுரனை மன்மதன் தனது மறு பிறப்பில் கொன்றதால்,
'சம்பராரி' என்று மன்மதனுக்குப் பெயர் உண்டு.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1153  pg 2.1154  pg 2.1155  pg 2.1156 
 WIKI_urai Song number: 888 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 884 - ambu rAsiyil (thanjAvUr)

ampu rAsiyiR keNdai sEloLith
     thanja vEmaNik ...... kuzhaiveesum

anga NAridath thinpa sAkarath
     thangi mUzhkumic ...... chaiyinAlE

empi rAnunaic chinthi yAthozhith
     thinthra sAlaip ...... pramaitheera

ingu vAvenap paNpi nAlazhaith
     thengu mAnameyp ...... poruLthArAy

kompu pOlidaith thoNdai pOlithazhk
     koNdal pOlkuzhaR ...... kanamEruk

kunRu pOlmulaip paingi rAthiyaik
     koNda kOlasaR ...... kuNavElA

sampa rAriyaik konRa theevizhic
     campu pOthakak ...... kurunAthA

saNda kOpurac cempon mALikaith
     thanjai mAnakarp ...... perumALE.

......... Meaning .........

ampu rAsiyil keNdai sEloLiththu anjavE maNik kuzhaiveesum anga(N)NAridaththu: These women have beautiful eyes that run chasing the gems in the ear-rings, making the kendai and sEl fish in the sea scared;

inpa sAkaraththu angi mUzhkum icchaiyinAlE: being obsessed about drowning in the fire of carnal pleasure with these women,

empirAn unaic chinthiyAthu ozhiththu: Oh my Lord, I am being pulled out from meditating on You

inthra sAla ip pramaitheera ingu vAvenap paNpinAl azhaiththu: by this magical spell; to get rid of this delusion, kindly beckon me to come closer to You to take charge of me

engumAna meyp poruLthArAy: and bless me by preaching the omnipresent Truth!

kompu pOl idaith thoNdai pOl ithazhk koNdal pOlkuzhal: She has a waist slender like the creeper, reddish lips like the kovvai fruit, hair like the dark cloud,

kanamEruk kunRu pOlmulaip paingi rAthiyaik koNda kOlasaR kuNavElA: and bosom like the big mount MEru; She is VaLLi, the beautiful damsel of the hunters; You married her, Oh Virtuous One, with the spear in the hand!

sampa rAriyaik konRa theevizhic campu pOthakak kurunAthA: He has the fiery eye that burnt down and killed Manmathan*; You are the Master who preached to that Lord SivA!

saNda kOpurac cempon mALikaith thanjai mAnakarp perumALE.: This town, ThanjAvUr, has strong temple towers and palaces built with reddish gold, and You have Your abode here, Oh Great One!


* As Manmathan in his next birth killed the demon, 'Samparan', he has the name of 'SamparAri'.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 884 ambu rAsiyil - thanjai


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

[W3]